முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு

மார்சல் து சாம்ப்பின் ' அருவி ஊற்று' (Marcel Duchamp - "Fountain") என்கிற கலைப்பொருள் 1917 ல் நியூயார்க்கி ல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தக் கலைப்பொருள் வேறொன்றும் அல்ல - ஆண்கள் கழிப்பறைகளில் நாம் பார்க்கும் சிறுநீரேந்தி தான் இது. இதை ஒரு கலைப் பொருளாக்க இந்தக் கலைஞன் செய்தது அதை வழக்கத்திற்கு மாறான ஒரு கோணத்தில் இருத்தியதும், தன் கையொப்பத்தை (புனைப்பெயர்) இட்டதும், அதற்கு ' அருவி ஊற்று' என்ற தலைப்பிட்டதுமே.  கலைசார்ந்த ஒரு சோதனை முயற்சியாகவும், முதல் உலகப்போரின் முடிவில் ஐரோப்பாவில் தோன்றிய தாதாயிசம் என்னும் எதிர்கலையியக்கத்தைச் சார்ந்தும் இது புரிந்துகொள்ளப்பட்டது என்பது இணையத்தில் தேடினால் எளிதில் கிட்டிவிடும் தகவல்களே. (படம்: விக்கிபீடியா)  ***  1970-80 களில் (ஒரு தொன்மையான காலத்தைக் குறிப்பிடவோ, அதிரடியான தொடக்கத்தை இந்தப் பத்திக்குக் கொடுக்கவோ இந்த ஆண்டுகளைக் குறிப்பிடவில்லை) மனித எத்தனத்துடன் பராமரிக்கப்படும் மலப்புரையையே எங்கள் வீட்டில் உபயோகப் படுத்திவந்தோம். ஒரு சீமெந்து மேடைமேல் குத்தவைத்து உட்கார்ந்து கழிக்கும் மலம் கீழே விழுந்து ஒரு தளத...

சினிமா பிரபலம் மறைவுக்கு எழுத்தாளர் அறிவுக்குஞ்சு இரங்கல்

நேற்று மதியம் நண்பர் ஜாலி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் - யோகி மாமா நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நான் சாதாரணமாகச் செல்பேசியை உபயோகிப்பதில்லை. இப்போதெல்லாம் விமானத்தில் ஏறி சென்னையில் இறங்கும் போது என்னைக் கொணர வருபவர்கள் அழைப்பதற்காக இதை வைத்திருக்கிறேன். என் ஏழு வயது மகன் பராந்தகன் தான் குறுஞ்செய்தி வந்த விபரத்தைக் கூறினான். நான் உடனடி காரில் ஏறிக்கொண்டு கொச்சி விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் கிளம்பிவிட்டேன். இன்று காலை ஜாலி மறுபடியும் தொலைபேசி யோகி மாமா காலமாகிவிட்டதைத் தெரிவித்தார். நான் மலையாள இயக்குனர் பிஜாயோடு இருந்தேன் - இருவரும் யோகியின் இழப்பை துக்கம் கொண்டாடினோம். யோகி நெகிழ்த்தவைக்கும் கலைக்குச் சொந்தக்காரர். ஜாலியின் சமீபத்திய கட்டுரை ஒன்றே யோகியின் கண்டுகொள்ளப்படாத கடைசி நாட்களில் அவரது தன்னம்பிக்கையை மீட்டு, தன்னை மாபெரும் கலைஞனாக கருதிக்கொள்ள வைத்தது. அந்த வகையில் இக்கலைஞனை ஒற்றைக்கட்டுரையில் மீட்டெடுத்த பெருமை ஜாலியைச் சேரும். அதற்காக அவருக்கு என் நன்றிகள். மிகையுணர்ச்சிக்கும், கலையடர்த்திக்கும் இடைப்பட்ட ஒரு மெல்லிழையை யோகி பிடித்துக் கொ...

’பருப்’பிசை

திரையிசையை (பரப்பிசை என்று சொல்லமாட்டேன் - இப்படியாகத்தானே அப்பிரகாம் பண்டிதர் வழிவந்தவர்கள் இசைக்கான தமிழ்வார்த்தைகள் மட்டுமல்லாது, தற்காலத்தமிழே அவர்கள் கண்டெத்தியதுதான் என்று பீற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கமாட்டேன்) மரபிசை இலக்கணங்களைக் கொண்டு அளவிடவோ விமர்சிக்கவோ கூடாது என்பது தெளிவானவொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் மரபிசை ரசனையை / அனுபவத்தை புறவயமான புண்ணாக்கு இலக்கணம் சார்ந்தது மட்டுமே என்று குறுக்குவது என்னே மடமை. மரபிசையோ மறுப்பிசையோ (நான் மட்டும் தமிழிசைக் கலைச்சொல்லகராதிப் புகழ் பெறவேண்டாமா?) எதுவானாலும், நுகர்வுத்தன்மையும் அதனாலான உணர்வெழுச்சியும் அந்தரங்கமாகவே நடைபெறுகிறது. ’மச்சானைப்பாத்தீங்களா’ வுக்கு பேருந்தினின்றும் இறங்கவைக்கும் உணர்வெழுச்சிதான் மரபிசை கேட்டுக் கண்ணீர்மல்கவும் வைக்கிறது. இலக்கணம் தெரிந்ததால் மட்டுமே மரபிசையை விமரிசிக்கவோ அனுபவிக்கவோ முடியாது. இன்னும், எந்த இசைவடிவமும் சில அடிப்படை இலக்கண ஒழுங்குகளுக்குள்ளாகவே அமைகிறது - அதனாலேயே இசை இசையாகிறது. ஆக, இசை நுகர்வும் விமர்சனமும் மரபிசை, திரையிசை பேதமின்றி தன்னனுபவம் சார்ந்த வ்யக்திபரமான (அகவயம் என்றெழுதக...

எழவு

அதாகப்பட்டது , இவர் தன்னை சமூகப் போராளியாகவும், ஜனநாயக (பஹுஜன) விரோதியாகவும் காட்டிக் கொள்வதால், இவரின் பிரதி சந்தேகதிற்குரியதாகியும், அதற்கு இவர் பெற்ற புக்கர் பரிசானது இவர்தம் கருத்த சுருண்ட தலைமுடி மற்றும் செம்பொன் வண்ணக் கண்களைக் காட்டி மயக்கி வாங்கியதெனவும் ஆகின்றது தெரிந்ததே. இப்பவும் இவர் இந்தத் தகாத செயல்களைச் செய்வதில், இவரது தழுவிஎழுதும் படைப்புத் திறன் கூட பாதிக்கப்பட்டிருப்பது இவர் இன்னொரு புத்தகத்தைத் தழுவி எழுதாததிலிருந்து புலனாகிறது. மற்றபடி தழுவல் கொழுவல் சமாசாரங்களில் உண்மை இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள நான் முயற்சிக்கவில்லை. ஆனால் விமரிசனங்கள் என்பன என்னைப் பொறுத்த வரையில் தனி நபர் விருப்பு வெறுப்பு சார்ந்தவை - அதாவது இந்த படைப்பாளியாகிய நபரைப் பற்றிய விருப்பு வெறுப்பு சார்ந்தவை என்பது என்னுடைய இந்த சொத்தைப் பதிவிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நம் சொந்தக் காரியங்கள் சுமூகமாக நடக்கும் வரையில், எதைப்பற்றியும் தீவிரமான ஈடுபாடோ எதிர்ப்போ இல்லாத ஜனநாயக அணுக்கப் போக்கு இருந்தால் படைப்புத் திறனும் பெருகும், நாடும் சுபிக்ஷமாக இருக்...

சும்மா ...

வேலைத் திரக்கிலையோ இல்லை அந்த சாக்கிலையோ  - தினமும் மறக்காமக் கைத்தொலைப்பேசியில கூப்பிட்டு “சும்மா தான் மச்சான் அடிச்சேன்” ன்னு சொல்லற நண்பன் அழைப்பையே எடுக்க முடியல. அப்புறம் கூடடைந்து குஞ்சு குளுவான்களோட குலாவறதுல இன்ன பிற நட்புகள், சொந்தங்கள் யாருக்கும் ஒரு தொலைபேசியோ கடுதாசோ கூடப் போடுறதில்லை. இதுகூடப் பரவாயில்லை - பேருந்து நிலையங்கள், இல்லை பேரங்காடிகளின் முன்னால நடந்து போறவன நிறுத்தி கடன் அட்டை விக்கவோ, நிதி திரட்டவோ வேண்டி ‘எப்படியிருக்கீங்க இன்னைக்கு?” ன்னு கேக்கிறவன் கிட்டக் கூட ‘நான் அவசரமாப் போறேன்’ ன்னு சொல்லாமச் சொல்லி... இப்படி மனுசங்க கூடப் பேசறதுக்குண்டான வாய்ப்புகளை எல்லாம் விட்டிட்டு, புது ப்ளாகு மட்டும் நெறையத் திறந்து, ட்விட்டர் அக்கவுண்டு வைச்சு என்னத்தப் பண்ண? Posted via email from Kannan's posterous

கட்டற்ற...

இந்த வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து இன்னொரு முறை வாழ நேர்ந்தால் என்ன செய்வேன்? என்று கேட்டால் 'ஒண்ணையும் மாத்த மாட்டேன்' என்று ஒரு புனைச் சுருட்டும் காட்ட மாட்டேன். அசட்டுத் தனங்களின், ஏமாற்றங்களின், விரக்திகளின், தணியா வேட்கைகளின், மற்றும் இந்தமாதிரி பலவற்றின் தொகுப்பாகவே தெரிகிறது வாழ்க்கை. நம்மைப் பற்றிய நமதானதும் பிறரதுமான எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்வதே பக்குவப்படலின் ஒரு முக்கிய அலகாகத் தெரிகிறது இப்போது. இந்த அனுபவ ஞானத்தோடு இன்னொரு முறை வாழ்ந்தால் தான் என்ன கேடு? ~~~ சுசீலா, சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கி, கண்ணாயிரம் பெருமாள் என்று நீளும் "மன நிழல்களின்" பாரம்பரியத்தில் நானும் மாதவக் கைமள், கோவிந்தன் நம்பூதிரி என்று (ஏனோ மலையாளப் பெயர்களே நினைவுக்கு வருகிறது) ஒன்றிரண்டை அவிழ்த்து விடுவோமா என்று யோசிப்பதுண்டு. நீரும் நெருப்பும் - இரண்டு எம்.ஜி.ஆர் - ஒருவன் முரடன், ஒருவன் சாது. இல்லை - தெரியாமல் "பாரம்பரியம்" என்று வந்துவிட்டது. "அதைக் காப்பியடித்து" என்று வைத்துக்கொள்வது தான் சரி. ~~~ மேலே தட்டச்சுவது கடினமாக இருக்கிறது - தூக்கம் வருகிறது. கொஞ...

எம்.டி.ஆர்

சுகுமாரனின் ”தனிமையின் வழி” படித்துக் கொண்டிருக்கிறேன். கோவை விஜயா பதிப்பகக் கடையில் வாங்கியது - ஒரு காரணம் எம்.டி.ராமனாதன் பற்றிய உயிர்மைக் கட்டுரை இதிலே இருந்தது (இன்னொன்று கோவைக்காரர் என்பது) நண்பன் ஒருவன் இதன் பக்கங்களை உயிர்மையில் வந்தவுடன் ஸ்கான் செய்து அனுப்பியதை ஒரு பொக்கிஷமாகவே இன்னும் வைத்திருக்கிறேன். பொதுவில் எம்.டி.ராமனாதன் பற்றிய எதுவும் பத்திரிகைகளிலோ இணையத்தளங்களிலோ கிடைப்பதில்லை. ஆனால் எம்.டி.ராமனாதனின் இசைக்கச்சேரியை நேரிலமர்ந்து பார்த்தது மட்டுமல்லாமல், அவரைச் சந்தித்துப் பேசவும் செய்திருக்கிறார் சுகுமாரன். பொறாமையாக இருக்கிறது. எண்பதுகளுக்கு முன்னால் (தென்னிந்திய மரபு) இசையை அறிந்து, கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அம்மாதிரிப் பழைய கச்சேரி அனுபவஸ்த்தர்கள் தரும் சின்னச் சின்னத் தகவல்களின் தொகுப்பே ராமனாதன் பற்றி எனக்குத் தெரிந்த சொற்பம். பணமும், செல்வாக்கும், கோஷ்டியும், மோசடியும், கபடமும் நிறைந்த புதுச் சந்நியாசிகளின் நடுவே எல்லாம் துறந்து, தன்னையறிந்து கொண்ட, கண்டுகொள்ளப்படாத, தன்வழியே போகிற பரதேசிச் சாமியாரின் நிலைதான் ராமனாதனுக்...

இன்னுமொரு புத்தக மீம்

ராம்கி அழைத்ததும் நீண்ட நாட்களாய் எழுதாமலிருக்கும் ப்ளாகை தூசு தட்டிப் புதுப்பிக்கலாமென்று கிளம்பிவிட்டேன். ஆனாலும் 32 கேள்விகள் கையை உடைத்துவிடும்போல இருந்ததால் நிறையக் கேள்விகளை சாய்ஸில் விட்டுவிட்டேன். 1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது? பாக்கெட் நாவல், மாலை மதி என்று ”சாணி சாணியாக” பல்ப் படித்திருக்கிறேன். அம்மா அரசுயர் பள்ளி நூலகத்திலிருந்து கொண்டு வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் விவரம் தெரிந்து படித்த முதல் நாவல். 2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்? பள்ளி நாட்களிலிருந்து. 3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது? பொதுவாக நாவல் என்கிற வடிவத்தில் ஒரு பிடிப்பு இல்லாததால், படிக்கிற நாவல்களில் ரகம் பிரிப்பதில்லை. பொதுவில் பாத்திரப்படைப்பிற்கும் கதைக் களனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிற நாவல்கள் மனதில் நிலைக்கின்றன. இருந்தாலும், வரலாற்றுக் கலப்புடன் எழுதப்பட்ட நாவல்கள் எனக்கு விருப்பமானவை. 4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்? பரிந்துரைகளின் பேரிலேயே நாவல்களைத் தேர்ந்தெடுகிறேன். அதிக நாவல்களை நாடிப் படிக்கும் வ...

எழுத்து ஊக்கிகள்

எங்களூர் நூலகத்தின் பழைய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். நானும் கால்கடுக்க மூன்று மணி நேரம் செலவிட்டதில் நான்கைந்து புத்தகங்கள் தேறின. அதிலே தமிழிலே ஸ்ரீரங்கத்து தேவதைகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது நண்பன் ஒருவன் பழைய புத்தகக் கடையிலிருந்து இதை வாங்கி வந்திருந்தான். ரொம்ப நாட்கள் அதை வைத்திருந்து இரவல் கொடு த் ததிலோ வீடு மாற்றியதிலோ தொலைந்து விட்டது. இப்போது இது கிடைத்தது ம் உற்சாகமாகி விட்டேன். ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்கிற தொகுப்பு 'தேவதைகள்' உட்பட மேலும் சில கதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் தொலைத்த, பழைய தொகுப்பு கிட்டியது சந்தோஷமாகத் தான் இருக்கிறது. சில எழுத்துகள் படித்ததும் அலையலையான நினைவுகளைக் கிளறிவிட வல்லன. ஸ்ரீரங்கத்து தேவதைகள் அவ்வாறான ஒன்று. சுஜாதாவின் மிக அருமையான படைப்பென்றே இதைச் சொல்லுவேன். நம் இளமைக்காலத்தின் நினைவுகளோடு பொருத்திப் பார்க்க முடிவதாலும், சொந்த அனுபவங்களை ஒத்திருப்பதாலும், இன்னும் சில மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை, காலங்களை நினைவு படுத்துவதாலும் இது எனக்குப் பிடித்திருக்க...

சுஜாதா

கவர்ச்சியானதொரு உரைநடையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். சமகாலத்திய பேச்சுவழக்குடன் துள்ளலும் எளிமையும் நேரடியான சம்பாஷணை வடிவமும் அதன் அம்சங்கள். விளைவு - தமிழ் உரைநடையை முன்னெடுத்துச் செல்ல விசாலமானதொரு புதிய வெளி கிடைத்தது. இதற்கு இன்னும் புதிய சாத்தியங்கள் இருக்கிறதென்று நம்புகிறேன். நன்றியும் அஞ்சலிகளும் .

வாஷிங் மஷின் காதை

வூட்ல வாஷிங் மஷின் ஊத்திக்கிச்சு. ஒரு வாட்டி அவசரத்துல துணியெல்லாம் போட்டு, ஸ்விச்ச ஆன் பண்ணினதுக்கப்புறம் தான் சோப்புப் பொடி போடலன்னு ஞாபகம் வந்தது. அப்படியே ஸ்விச்ச ஆஃப் பண்ணிட்டு பொடியப் போடலாம்னு பாத்தா, ஆனான பாடு பட்டும் வாஷிங் மஷின் மூடி தொறக்கமாட்டேன்னுடிச்சு. எடுத்த காரியத்த முடிக்காம நடுவுல லூஸ்ல உடறது நம்பள மாதிரி அதுக்குப் பழக்கமில்ல போலிருக்கு. ஆனா, சோப்புப் பொடியே இல்லாம, தோச்சுத் தான் தீருவேன்னு அது நிக்கும்போது "கடம உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா" அப்படீன்னு தான் நெனக்கத் தோணிச்சு. அதுல என்ன ஃபஸ்ஸி லாஜிக்கோ என்ன எழவோ, அதுக்கப்புறமா அது ஓடறதே இல்ல. ஏதோ ஒரு ஸ்டேட்ல அப்படியே நின்னுடிச்சி போல. எல்லா ஸ்விச்சயும் ஆஃப் பண்ணிட்டுப் போட்டா முதல்ல இருந்து ஓடும்னு நான் நெனைச்சா, போன வாட்டி எங்க உட்டமோ, அங்கிருந்து தான் நான் ஆரம்பிப்பேன்னு அது நெனைக்கிது. இந்த மாதிரி யோசிக்கிற மஷின் வாங்கறதுக்கு முன்னாடி நாம யோசிக்கணும் - அத விட நாம புத்திசாலியா இருக்கமான்னு. பேஸிக்கா, அது என்ன யோசிக்குதுன்னு நமக்குத் தெரியணும். (நல்ல வேளையா) இத நான் வாங்கல. வாடகை...

சும்மா

வாரயிறுதிகளில் விடியற்காலையில் எழுந்தால் ஓய்வு நாட்களின் நீளம் கூடும் என்பது நண்பரின் பரிந்துரை. சும்மாயிருக்கும் இந்நாட்களில் இதைப் பின்பற்றுவதில்லை. காலை பத்து மணிக்கே எழுந்து காப்பியைக் குடித்து, சிற்றுண்டி சாப்பிட்டு, மீண்டும் காப்பி குடித்து, மதிய உணவு முடித்து, சாயங்காலக் காப்பி குடித்து இரவுணவு உண்டு உறங்கப் போகும், ஒன்றும் செய்யாமல் இருக்கும் இத்தினங்களிலும் சாப்பாட்டு வேளைகளிலும், மற்ற பான வேளைகளிலும் ஆனதான ஒரு ஒழுங்கு இருக்கவே செய்கிறது. இடையில் டிவியில் இரண்டு தல்லிப்பொளிப் படங்கள், சுடோகு, லூயி லாமர், இணைய உலாவல். ஏதோவொன்றைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதில் இருக்கும் சோர்வு, ஒன்றும் செய்யாமல் இருப்பதிலும் இருக்கிறது என்பது ஆச்சரியமாயிருக்கிறது. உண்மையில் பயமாயிருக்கிறது. ஏனென்றால் இப்படியாகத்தானே வாழ்க்கையைக் கழித்து, நேர உபயோகத்தின் நன்மைகளை உபன்யாசிப்பவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்ற ஆசையில் மண்ணைப் போடுகிறது இந்த இரண்டாவது சோர்வு. முதலிலேயே ஒன்றும் செய்வதில்லை என்று சங்கல்ப்பம் செய்துகொள்வதில் உண்மையான ஓய்வு தினமாக மனம் அதை வரிந்துகொள்கிறது. வங்கியில் வேலை, கரண...

இசைவிழா - சில எண்ணங்கள்

இன்னுமொரு இசைவிழா இங்கே. கருநாடக மரபிசை பலருக்கும் மனிதர் மனிதரை விலத்தி வைக்கும் மேட்டிமைக் குறியீடாகவே திகழ்கிறது. இந்த உறுத்துதல் இருக்கும்வரை என்னால் முன்போல இவ்விசையில் திளைக்கமுடியுமென்று தோன்றவில்லை. பக்தி, மதம் மற்றும் இசைமும்மூர்திகளென அறியப்படுவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் என்று இசைக்குப் புறம்பான, "புற" விஷயங்களே முதன்மைப் படுத்தப் படுகின்றன என்பது இசையால் எல்லாம் ஒன்று என்கிற கொள்கையை நானே கேள்விக்குட்படுத்தும்படி செய்துவிட்டது. இன்னொன்று, இம்மரபிசை மனோதர்மம் என்கிற மனவோட்டத்தைப் பிரதிபலிக்கிற, முன்னேற்பாடுகள் எதுவுமற்றவொரு கலை வெளிப்பாடு என்பதுவும் கேள்விக்குறியதே என்று எனக்குப் படுகிறது. இதிலே பாடப்படும் ராகங்களின் இலக்கண எல்லைகள் மேற்சொன்ன மும்மூர்திகளால் நிர்ணயிக்கப்பட்டவை. இவ்வரம்பிற்குட்பட்டே இந்த முன்னேற்பாடுகளற்ற வெளிப்பாடு நிகழ வேண்டியிருக்கிறது. இந்தத் தலைமுறைக்கு முந்திய தலைமுறைப் பாடகர்கள் மற்றும் இசைஞர்கள் ஏதோவொரு தனித்தன்மையைக் கொண்டிருந்தார்கள். மதுரை மணியின் ஸ்வரக் கோர்வைகள், எம்.டி.ராமநாதனின் மெதுவான காலப் பிரமாணம், கே.வி.நாராயணசுவாமியின...

ஒப்பனை கலைத்த ஒரு பொழுதில்

என்னில் கள்ளம் குடிகொண்ட பொழுது எதுவெனக் கூறமுடியவில்லை. எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்தது அதுதான். உழலும் சூழலுக்கேற்ப நாளொரு வேடமும், பொழுதொரு ஒப்பனையுமாக நான் வேண்டும்படி பிறருக்கு என்னைக் காட்டுவதில் தேர்ந்துவிட்டேன். உடலை மறைக்கவே ஆடைகள் என்ற கருத்தாக்கம், என் அம்மணத்தைக் குறித்து நானே வெட்கும் அளவிற்கு என்னில் உருவேற்றப் பட்டு விட்டதைப் போலவே, குழந்தையாய், உண்மையாய் நான் இருந்தநிலை போய், என் உண்மையான தன்மை பற்றி நான் வெட்கும் அளவிற்கு உடல் மறைக்கும் ஆடைகளாய் என்னை மறைக்கும் இந்த ஒப்பனைகள். சில அரிதான பொழுதுகளில் உன் முன்னால் இந்த ஒப்பனைகளை முற்றிலுமாகக் கழற்றி விடுகிறேன். அந்நேரங்களில் கள்ளம் உடனே என்னை மீட்கிறது. தன்வயமிழப்பதை என் பலவீனமாகவும், அதே சமயம் நிதானமிழக்காததை உன் பலமாகவும் அது சித்தரிக்கிறது. மேலும் உன் முன்னால் என்னை இழந்தது மூலம் என்னை நானே வலிந்து முட்டாளாக்கிக் கொண்டது போலவும், நான் அம்மணமானது போலவும் அது காட்டுகிறது. இது என் தன்மானப் பிரச்சனை ஆகிறது. ஒப்பனைகளை கழற்றிய நான் அவசரமாக அவற்றை மீண்டும் அணியத் துவங்குகிறேன். நீ என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்கிறேன். உன்ம...

நா ஸொல்ல வர்றது என்னன்னா...

வார்த்தைகள் நைந்து நார்போலாகிவிட்டது தெரிந்ததே . இதன் காரணமாகவே இவைகளை உபயோகப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருத்தல் அவசியமாகிறது. உணர்த்த விரும்புதையெல்லாம் சொல்லில் அடக்கிவிடுவது எளிதானதாகத் தோன்றவில்லை. இப்படி முயற்சி செய்து வார்த்தைகளைத் திக்கித் திணறிச் சேர்க்கிறேன். இதிலே ஒவ்வொன்றிலும் என் உழைப்புத் தெரியும். இவ்வார்த்தைக் கோர்வையில் ஒவ்வொரு வார்த்தை மட்டுமன்று, அதனிடையே இடும் மௌனக் கார்வைகளும், விசும்பல்களும், செருமல்களும் கூட எனக்குப் பொன் போன்றவை. அவைகளின் மூலம் நான் ஊடாடுகிறேன். எனக்கு இந்த ஊடாடல் அவசியம். இந்தச் செருமல்களை, விசும்பல்களை வெற்றை இட்டு நிரப்பும் நோக்கிலன்றி, என்னை உணர்த்தும் நோக்கிலே கவனமாகச் சேர்த்திருக்கிறேன். வார்தைகளால் சொல்லமுடியாததை இப்படிச் சொல்லவேண்டியுள்ளது. இவைகளையெல்லாம் கொண்டு நான் உணர்த்த வருவதை நீ புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். இந்த அவசியம் பொருட்டே, எனது கவனமும், உழைப்பும், வலியும். நீயோ, நான் இறுதியாக என்ன சொல்ல வருகிறேன் என்று அறிய விரும்புகிறாய். இது எனக்கு மிகுந்த அயர்ச்சியைத் தருகிறது. என் வார்த்தைகளும், வார்தைகள் அல்லாதவையும் உணர்த்த ம...

நமக்கான பிரத்யேக இடங்கள்

கண்ணே கண்ணம்ம! ஆறடி நிலமே சொந்தமடா என்று தத்துவார்த்தமாகப் பாடினாலும், நமக்கான பிரத்யேக இடங்கள் நமக்கே சொந்தம். இவைகளை அளக்க முடிவதில்லை. பேருந்து இருக்கைகளிலும், இன்ன பிற உட்காருமிடங்களிலும் ஒடுங்கி உட்கார்ந்ததில் ஒல்லியான உடம்புக்காரனாக இருக்கிறேன். இனி இதை ஒரு மரபணுச் செய்தியாக அடுத்த தலைமுறைகளுக்கும் அனுப்பச் சித்தமாகிவிட்டது உடம்பு. இனி வருவோரெல்லாம் எங்கும் உடம்பைக் குறுக்கிக் கொள்ளுதலை இயல்பாகக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் சொற்பமான இடமே எனது தேவை. ஆனால நாம் இயங்க, உழல, சூக்குமமான இடங்கள் தாராளமாகத் தேவைப் படுகின்றன. நம் சிந்தனைகள், கோட்பாடுகள், அன்பு, காதல், விருப்பு-வெறுப்புகள், சுதந்திரம், சுயமரியாதை போன்றவற்றை இந்த இடத்திலே சேமித்திருக்கிறோம். யாரும் இந்த இடங்களை ஆக்கிரமிப்புச் செய்தால் நாம் இயங்குவதற்கு நெருக்கடியாகிவிடுகிறது; மூச்சு முட்டுகிறது. அது நம்மை இயல்பாக இருக்கவிடுவதில்லை. மலர்களும், புட்களும், வண்ணத்துப் பூச்சிகளும் தத்தம் இயல்பான இடங்களிலே இருப்பதில் தானே மிளிர்கின்றன? என் இடம் என்வசமிருப்பதினாலேயே நான் நானாகிறேன். நம் ஒருவருக்கொருவர் மீதான மதிப்பும், மற்றவர்...

இப்போது படித்துக் கொண்டிருப்பது

இது முழுதும் பாசாங்கு. உள்ளிருப்பை அப்படியே எழுத்தாக்கக் கருவி, கலப்பை, கோடாரி இல்லாததால் சுற்றித்திரிந்து, சுற்றி, திரிந்து, மேதாவித்தனம் சேர்ந்து கை தப்புத்தப்பாய் தட்டச்சுப்பிச்சென்று ஏதாவது... கடைந்த மோரில் வெண்ணையைக் 'கட்டிப்'பிடிப்பது போல யோசித்துச் சேர்த்தது டம்பளர் பாலில் இருக்கும் கருப்புப் பூச்சி போலக் கட்டை விரலும் சுட்டு விரலும் கொண்டு பிடிக்கப் பிடிக்க நழுவும் எழுதுவதற்காய்க் கிளம்பினால். இப்போதும் ஓடியாயிற்று - கண்ணை மூடிமூடித் திறந்தாலும் கிடைப்பதில்லை - நழுவியது நழுவியது தான். கொஞ்ச நேரம் அசிரத்தையாக இருப்பது போல பாவனை செய்தாலும், எப்போதாவது பிடிக்கப் போனால் மறுபடி ஓட்டம். உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது உள்ளபடியே மாயக்கண்ணாடி மட்டுந்தான். மற்றபடி இதையும் சேர்த்து எல்லாம் பாசாங்கு. *** வானமற்ற வெளி என்கிற பிரமிளின் கவிதைகள் பற்றிய கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை 'எழுதுதல்' என்பதை ஒருவித பாசாங்கு என்று தான் நினைத்திருந்தேன். ஒரு அரிதான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுக்கும் ஒரு விஷயத்தை காகிதத்தில் வடிக்கும்போது வடிவம், யாப்பு, இசைநயம் பற்றிய கவலைகளோ...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...

ஆதவனின் காகித மலர்களில் இருந்து...

அன்புடையீர், வருடப் பிறப்புக்கு முந்தின இரவு கனாட் பிளேஸில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி திரு.அவினாஷ் மாதுர் உங்கள் பத்திரிகையில் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தேன். பெண்கள் இதுபோல ப்லாத்காரத்துக்கு உள்ளாவதற்கு பெண்களேதான் ஒரு விதத்தில் பொறுப்பாளியென்றும், இன்றைய நவநாகரீகப் பெண்களின் நடையுடை பாவனைகள் பரம யோகிகளைக்கூட நடத்தை தவறத் தூண்டுவனவாக உள்ளனவென்றும் அவர் எழுதியிருந்தார். இது மட்டுமா? பல பெண்கள் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் ஒரு ரகசியமான இன்பம் பெறுகிறார்களென்பதும், அவர்கள கூச்சல் போடுவதெல்லாம் வெறும் வெளிவேஷந்தான் என்பதும், ஒரு சில சாராரிடையே பலாத்காரமே செய்யப்படாத பெண்களைப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்பதும், துர். மாதுரின் வேறு சில துணிவுகள். அடேயப்பா! துர்.மாதுரின் கரங்களில் நேரடியான பங்கும் அனுபவமும் இருந்திருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன. அல்லது ஒரு வேளை, போன ஜன்மத்தில் அவர் ஒரு பெண்ணாக இருந்திருப்பாரோ என்னவோ? ஆம். அதுவும் சாத்தியம் தான். ஏனென்றால் அவருடைய சில அபிப்பிராயங்கள் ஏறாத்தாழ ஒரு நூற்றாண்டு பின் தங்கியவையாகத் தொனிக்கின...

மா ரமணன், உமா ரமணன்!

இரண்டு உன்னதமான கலைஞர்களை எப்படியோ ஒரே சமயத்தில் பெற்றிருப்பது உலகக் கிரிக்கெட்டிற்குக் கிடைத்த பேறு. இருவரும் சமீபத்தில் அவர்களின் துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அணுமுறையாலும், ஆடுவதின் இயல்பாலும், குணாதிசயங்களாலும் வேறுபட்ட இரண்டு தனித்துவமான ஆளுமைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறது மனது. லாராவின் irregularity யாராலும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்திருக்கிறது. வீழ்ச்சியடைந்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அற்புதமான ஒரு ஆட்டத்தில் மீண்டு வருவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார். சிறப்பாய் ஆடிய அநேக ஆட்டங்கள் இவர் அணியை வெற்றி பெற வைத்ததில்லை. இவர் ஆடிய 121 டெஸ்ட்களில் இவர் அணி 56 முறை தோற்றிருக்கிறது. டெண்டுல்கர் ஒரு காலத்தில் குருவி தலையில் பனங்காய் போல இந்தியாவின் மொத்தச் சுமையையும் பலரின் எதிர்பார்புகளையும் தாங்கி இருந்ததில் அவர் ஆட்டம் பாதித்தது. சமீபத்திய உடலுபாதைகளால் அதிக ஓய்வு எடுக்கும்படி வந்ததும், மீண்டு வரும் முதல் ஆட்டத்திலேயே அவர் நன்றாக ஆடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் அவர் மனதில் இன்னும் கிலேசத்தை உண்டு செய்திருக்கும். "மார ஜனகன், குமார ஜனகன்.....