படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி
“ எழுதிச் செல்லும் விதியின் கை ” யா ர் முதலில் சொன்னது ? உமர் கைய்யாமின் ருபாயத் ஒன்றில் வந்து தமிழ்ப்படுத்தப்பட்டது என்றறிகிறேன் . இன்றைக்கு மீண்டும் வானொலியில் ‘ ஆயிரம் மலர்களே மலருங்கள் ’ - எப்போது கேட்டாலும் சலிப்பதில்லை . ‘ எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ ’ கேட்கும்போது எப்போதும் தொண்டைக்குழி அடைத்துக்கொள்கிறது . இது ஏனென்று புரியவில்லை . அண்டங்கள் கடந்த பெருவெளியின் பிரம்மாண்டத்தின் முன்னால் ஒரு மணல்த் தரியளவும் காணாத அற்ப மனிதவாழ்வின் பதைபதைப்பு என்று கொள்கிறேன் . இந்தக் கை எங்கும் நிறைந்தது . சந்தைப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் 'கண்காணாக் கை'யும் இதுதான் போலும். கூடவே ஏனோ நினைவுக்கு வரும் கொசுறு பிரமிளின் இந்தக் கவிதை : “ சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது .”