நாட்குறிப்பு எழுதிப் பல நாட்கள் ஆகின்றன. அலுவலகத்தில் கட்டுப்பாடுகளுடன் செய்த வேலை சலித்து, அம்மனிதர்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் போனது. அலுவலக வேலையை விட்டொழித்து, மீண்டும் அந்நரகத்துக்குப் போகக்கூடாது என்று வெஞ்சினம் கொண்டு வேறு பல வேலைகளை மேலிழுத்துப் போட்டுக்கொண்டேன். நாய்க்கு வேலையில்லை; ஆனால் நிற்பதற்கும் நேரமில்லை என்று சில நாட்கள் ஓடின. தொண்டூழியம், வீட்டுறையப்பன் (stay-home dad), என்று பல அடவுகள், இந்த இடைவெளியில். நண்பர்களை அலுவல் நேரத்தில் அரைநிஜாருடன் போய்ப் பார்த்து காபி குடிக்க அழைத்து வில்லச்சிரிப்பும் எக்காளமுமாய் அவர்களை வயிறெரிய வைத்தேன். இன்னும், ஆபீசென்னும் நரகத்திலிருந்து தப்புவதெப்படி என்று அவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்யவாரம்பித்தேன் . சட்டையில் ‘ask me how?’ என்ற வில்லையைக் குத்திக்கொண்டு நடுத்தெருவில் நிற்கவும் ஆயத்தமானேன். ஆனால் இரண்டேயாண்டுகளில் விதி என் காலரைப் பிடித்துத் ‘தறதற’ வென இழுத்து வந்து மீண்டுமொரு வேலைஸ்தலத்தில் விட்டுச் சென்றுவிட்டது. நமக்கு அவ்வளவுதா...
கண்ணன் தட்டினது!