முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இசைவிழா - சில எண்ணங்கள்

இன்னுமொரு இசைவிழா இங்கே. கருநாடக மரபிசை பலருக்கும் மனிதர் மனிதரை விலத்தி வைக்கும் மேட்டிமைக் குறியீடாகவே திகழ்கிறது. இந்த உறுத்துதல் இருக்கும்வரை என்னால் முன்போல இவ்விசையில் திளைக்கமுடியுமென்று தோன்றவில்லை. பக்தி, மதம் மற்றும் இசைமும்மூர்திகளென அறியப்படுவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் என்று இசைக்குப் புறம்பான, "புற" விஷயங்களே முதன்மைப் படுத்தப் படுகின்றன என்பது இசையால் எல்லாம் ஒன்று என்கிற கொள்கையை நானே கேள்விக்குட்படுத்தும்படி செய்துவிட்டது. இன்னொன்று, இம்மரபிசை மனோதர்மம் என்கிற மனவோட்டத்தைப் பிரதிபலிக்கிற, முன்னேற்பாடுகள் எதுவுமற்றவொரு கலை வெளிப்பாடு என்பதுவும் கேள்விக்குறியதே என்று எனக்குப் படுகிறது. இதிலே பாடப்படும் ராகங்களின் இலக்கண எல்லைகள் மேற்சொன்ன மும்மூர்திகளால் நிர்ணயிக்கப்பட்டவை. இவ்வரம்பிற்குட்பட்டே இந்த முன்னேற்பாடுகளற்ற வெளிப்பாடு நிகழ வேண்டியிருக்கிறது. இந்தத் தலைமுறைக்கு முந்திய தலைமுறைப் பாடகர்கள் மற்றும் இசைஞர்கள் ஏதோவொரு தனித்தன்மையைக் கொண்டிருந்தார்கள். மதுரை மணியின் ஸ்வரக் கோர்வைகள், எம்.டி.ராமநாதனின் மெதுவான காலப் பிரமாணம், கே.வி.நாராயணசுவாமியின...