முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்து ஊக்கிகள்

எங்களூர் நூலகத்தின் பழைய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். நானும் கால்கடுக்க மூன்று மணி நேரம் செலவிட்டதில் நான்கைந்து புத்தகங்கள் தேறின. அதிலே தமிழிலே ஸ்ரீரங்கத்து தேவதைகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது நண்பன் ஒருவன் பழைய புத்தகக் கடையிலிருந்து இதை வாங்கி வந்திருந்தான். ரொம்ப நாட்கள் அதை வைத்திருந்து இரவல் கொடு த் ததிலோ வீடு மாற்றியதிலோ தொலைந்து விட்டது. இப்போது இது கிடைத்தது ம் உற்சாகமாகி விட்டேன். ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்கிற தொகுப்பு 'தேவதைகள்' உட்பட மேலும் சில கதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் தொலைத்த, பழைய தொகுப்பு கிட்டியது சந்தோஷமாகத் தான் இருக்கிறது. சில எழுத்துகள் படித்ததும் அலையலையான நினைவுகளைக் கிளறிவிட வல்லன. ஸ்ரீரங்கத்து தேவதைகள் அவ்வாறான ஒன்று. சுஜாதாவின் மிக அருமையான படைப்பென்றே இதைச் சொல்லுவேன். நம் இளமைக்காலத்தின் நினைவுகளோடு பொருத்திப் பார்க்க முடிவதாலும், சொந்த அனுபவங்களை ஒத்திருப்பதாலும், இன்னும் சில மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை, காலங்களை நினைவு படுத்துவதாலும் இது எனக்குப் பிடித்திருக்க