முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புத்தகங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

எழுத்தும் வாசிப்பும்

நாட்குறிப்பு எழுதிப் பல நாட்கள் ஆகின்றன.  அலுவலகத்தில் கட்டுப்பாடுகளுடன் செய்த வேலை சலித்து, அம்மனிதர்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் போனது.  அலுவலக வேலையை விட்டொழித்து, மீண்டும் அந்நரகத்துக்குப் போகக்கூடாது   என்று  வெஞ்சினம் கொண்டு  வேறு பல வேலைகளை மேலிழுத்துப் போட்டுக்கொண்டேன்.   நாய்க்கு வேலையில்லை; ஆனால் நிற்பதற்கும் நேரமில்லை என்று சில நாட்கள் ஓடின.  தொண்டூழியம், வீட்டுறையப்பன் (stay-home dad), என்று பல அடவுகள்,  இந்த இடைவெளியில். நண்பர்களை அலுவல் நேரத்தில் அரைநிஜாருடன் போய்ப் பார்த்து காபி குடிக்க அழைத்து வில்லச்சிரிப்பும் எக்காளமுமாய் அவர்களை வயிறெரிய வைத்தேன்.   இன்னும், ஆபீசென்னும் நரகத்திலிருந்து தப்புவதெப்படி என்று  அவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்யவாரம்பித்தேன் . சட்டையில் ‘ask me how?’ என்ற வில்லையைக் குத்திக்கொண்டு நடுத்தெருவில் நிற்கவும் ஆயத்தமானேன்.  ஆனால் இரண்டேயாண்டுகளில்  விதி என் காலரைப் பிடித்துத் ‘தறதற’ வென  இழுத்து வந்து மீண்டுமொரு  வேலைஸ்தலத்தில் விட்டுச் சென்றுவிட்டது. நமக்கு அவ்வளவுதா...

குறே புஸ்தகங்ஙள், ச்சில ரிக்காடுகள், குறச்சு கள்ளு - ஒரு ஸாயான்னம்!

பக்கத்துவீட்டு மலையாளி நண்பர் நூல் வெறியர் . பிடித்த நூலாசிரியரின் படைப்புகளையெல்லாம் தேடித்தேடி வாங்கிப் படித்துவிடுவார் . அதிலும் தாட்டியான உறைப் பதிப்புகளை (Hard cover edition) வாங்கிச்சேர்ப்பவர் . அப்படியான சேமிப்புகளில் அண்மைக்காலமாக பழைய வைனைல் ரெக்கார்டுகளை வாங்கிச்சேர்க்க ஆரம்பித்திருக்கிறார் .   ஒரு மாலை நேரம் அவர் வீட்டுக்கு பியருடன் புத்தகங்களை வேடிக்கை பார்க்கவென நானே கேட்டு அழைப்பு வாங்கிக்கொண்டேன் . போனதற்கு உடனே ஒரு ஐ . பி . சிங்கரின் புத்தகம் இனாமாகக் கிட்டியது ( அதே புத்தகத்தின் ஹார்டு கவர் பதிப்பை அவர் வாங்கிவிட்டார் ). லேசில் , இல்லை , எப்படியானாலும் புத்தகங்களை இரவல் தருவதில்லை என்றும் , பழைய புத்தகங்களை வாங்கிய பழைய புத்தகக் கடையிலேயே திரும்ப விற்றுவிடுவது என்றும் கறாராக இருப்பவரிடமிருந்து வந்த புத்தகம் அரியதுதான் . அன்றைய புதிய அறிமுகமாக The Limerick என்ற புத்தகத்தை கல்கத்தாவில் பழைய புத்தகக் கடையில் வாங்கியதையும் , அங்கிருந்து வரும் வழியில் சிலர் அதைப்பற்றி விசாரித்ததையும் ...

எம்.டி.ஆர்

சுகுமாரனின் ”தனிமையின் வழி” படித்துக் கொண்டிருக்கிறேன். கோவை விஜயா பதிப்பகக் கடையில் வாங்கியது - ஒரு காரணம் எம்.டி.ராமனாதன் பற்றிய உயிர்மைக் கட்டுரை இதிலே இருந்தது (இன்னொன்று கோவைக்காரர் என்பது) நண்பன் ஒருவன் இதன் பக்கங்களை உயிர்மையில் வந்தவுடன் ஸ்கான் செய்து அனுப்பியதை ஒரு பொக்கிஷமாகவே இன்னும் வைத்திருக்கிறேன். பொதுவில் எம்.டி.ராமனாதன் பற்றிய எதுவும் பத்திரிகைகளிலோ இணையத்தளங்களிலோ கிடைப்பதில்லை. ஆனால் எம்.டி.ராமனாதனின் இசைக்கச்சேரியை நேரிலமர்ந்து பார்த்தது மட்டுமல்லாமல், அவரைச் சந்தித்துப் பேசவும் செய்திருக்கிறார் சுகுமாரன். பொறாமையாக இருக்கிறது. எண்பதுகளுக்கு முன்னால் (தென்னிந்திய மரபு) இசையை அறிந்து, கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அம்மாதிரிப் பழைய கச்சேரி அனுபவஸ்த்தர்கள் தரும் சின்னச் சின்னத் தகவல்களின் தொகுப்பே ராமனாதன் பற்றி எனக்குத் தெரிந்த சொற்பம். பணமும், செல்வாக்கும், கோஷ்டியும், மோசடியும், கபடமும் நிறைந்த புதுச் சந்நியாசிகளின் நடுவே எல்லாம் துறந்து, தன்னையறிந்து கொண்ட, கண்டுகொள்ளப்படாத, தன்வழியே போகிற பரதேசிச் சாமியாரின் நிலைதான் ராமனாதனுக்...

இன்னுமொரு புத்தக மீம்

ராம்கி அழைத்ததும் நீண்ட நாட்களாய் எழுதாமலிருக்கும் ப்ளாகை தூசு தட்டிப் புதுப்பிக்கலாமென்று கிளம்பிவிட்டேன். ஆனாலும் 32 கேள்விகள் கையை உடைத்துவிடும்போல இருந்ததால் நிறையக் கேள்விகளை சாய்ஸில் விட்டுவிட்டேன். 1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது? பாக்கெட் நாவல், மாலை மதி என்று ”சாணி சாணியாக” பல்ப் படித்திருக்கிறேன். அம்மா அரசுயர் பள்ளி நூலகத்திலிருந்து கொண்டு வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் விவரம் தெரிந்து படித்த முதல் நாவல். 2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்? பள்ளி நாட்களிலிருந்து. 3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது? பொதுவாக நாவல் என்கிற வடிவத்தில் ஒரு பிடிப்பு இல்லாததால், படிக்கிற நாவல்களில் ரகம் பிரிப்பதில்லை. பொதுவில் பாத்திரப்படைப்பிற்கும் கதைக் களனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிற நாவல்கள் மனதில் நிலைக்கின்றன. இருந்தாலும், வரலாற்றுக் கலப்புடன் எழுதப்பட்ட நாவல்கள் எனக்கு விருப்பமானவை. 4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்? பரிந்துரைகளின் பேரிலேயே நாவல்களைத் தேர்ந்தெடுகிறேன். அதிக நாவல்களை நாடிப் படிக்கும் வ...

இப்போது படித்துக் கொண்டிருப்பது

இது முழுதும் பாசாங்கு. உள்ளிருப்பை அப்படியே எழுத்தாக்கக் கருவி, கலப்பை, கோடாரி இல்லாததால் சுற்றித்திரிந்து, சுற்றி, திரிந்து, மேதாவித்தனம் சேர்ந்து கை தப்புத்தப்பாய் தட்டச்சுப்பிச்சென்று ஏதாவது... கடைந்த மோரில் வெண்ணையைக் 'கட்டிப்'பிடிப்பது போல யோசித்துச் சேர்த்தது டம்பளர் பாலில் இருக்கும் கருப்புப் பூச்சி போலக் கட்டை விரலும் சுட்டு விரலும் கொண்டு பிடிக்கப் பிடிக்க நழுவும் எழுதுவதற்காய்க் கிளம்பினால். இப்போதும் ஓடியாயிற்று - கண்ணை மூடிமூடித் திறந்தாலும் கிடைப்பதில்லை - நழுவியது நழுவியது தான். கொஞ்ச நேரம் அசிரத்தையாக இருப்பது போல பாவனை செய்தாலும், எப்போதாவது பிடிக்கப் போனால் மறுபடி ஓட்டம். உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது உள்ளபடியே மாயக்கண்ணாடி மட்டுந்தான். மற்றபடி இதையும் சேர்த்து எல்லாம் பாசாங்கு. *** வானமற்ற வெளி என்கிற பிரமிளின் கவிதைகள் பற்றிய கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை 'எழுதுதல்' என்பதை ஒருவித பாசாங்கு என்று தான் நினைத்திருந்தேன். ஒரு அரிதான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுக்கும் ஒரு விஷயத்தை காகிதத்தில் வடிக்கும்போது வடிவம், யாப்பு, இசைநயம் பற்றிய கவலைகளோ...

ஆதவனின் காகித மலர்களில் இருந்து...

அன்புடையீர், வருடப் பிறப்புக்கு முந்தின இரவு கனாட் பிளேஸில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி திரு.அவினாஷ் மாதுர் உங்கள் பத்திரிகையில் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தேன். பெண்கள் இதுபோல ப்லாத்காரத்துக்கு உள்ளாவதற்கு பெண்களேதான் ஒரு விதத்தில் பொறுப்பாளியென்றும், இன்றைய நவநாகரீகப் பெண்களின் நடையுடை பாவனைகள் பரம யோகிகளைக்கூட நடத்தை தவறத் தூண்டுவனவாக உள்ளனவென்றும் அவர் எழுதியிருந்தார். இது மட்டுமா? பல பெண்கள் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் ஒரு ரகசியமான இன்பம் பெறுகிறார்களென்பதும், அவர்கள கூச்சல் போடுவதெல்லாம் வெறும் வெளிவேஷந்தான் என்பதும், ஒரு சில சாராரிடையே பலாத்காரமே செய்யப்படாத பெண்களைப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்பதும், துர். மாதுரின் வேறு சில துணிவுகள். அடேயப்பா! துர்.மாதுரின் கரங்களில் நேரடியான பங்கும் அனுபவமும் இருந்திருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன. அல்லது ஒரு வேளை, போன ஜன்மத்தில் அவர் ஒரு பெண்ணாக இருந்திருப்பாரோ என்னவோ? ஆம். அதுவும் சாத்தியம் தான். ஏனென்றால் அவருடைய சில அபிப்பிராயங்கள் ஏறாத்தாழ ஒரு நூற்றாண்டு பின் தங்கியவையாகத் தொனிக்கின...

வெள்ளெருக்கு

வயிற்றுப் பிழைப்பு தான் மனிதனின் எல்லாச் செயல்களையும் ஊக்குவிக்கிறது என்று நான் நினைப்பேன். ஒருவேளை மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதன் நிமித்தம் அவன் பாடுபடுவான்? ஒரு வகையில் மனிதனின் எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்தும் ஒரே தேவை வயிற்றுத் தேவையே. அந்தத் தேவை இல்லாதிருப்பின் மனிதன் பாடு திண்டாட்டம் தான் போலும். நான் ஒரு நேர்த்தியான உலகில் வாழ்பவன். சுக ஜீவனம். தேவைகளைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டுள்ளேன். இந்தத் தேவைகளின் அடுக்கில் கீழே, எல்லோருக்குமான அடிப்படைத் தேவை எனக்கும் உள்ளது. இந்த அடுக்கில் ஒவ்வொரு தேவையும் கீழிருக்கும் ஒன்றைச் சார்ந்தது. ஆனால் அடிப்படைத் தேவைகளைப் பற்றிய நேரடியான பயம் எனக்கில்லை. அடிப்படைத் தேவைகளுக்கான தினசரிப் போராட்ட்ம் பலர் வாழ்வில் நடக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் நடப்பது என்ன? *** சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர் தினசரி வாழ்க்கையின் பதிவுகள் இருக்கிறதா? அவை அவர்களின் பழக்கவழக்கங்களை, மகிழ்ச்சியை, அவலங்களை, குடும்ப அமைப்பை ஒரு நம்பகத் தன்மையுடன் தருகிறதா? இதைப் பதிவு செய்பவர் வெளியே நின்றுகொண்டு ஒரு பார்வையாளர் கோணத்தில் செய்கிறாரா...

கோபாலி...

தமிழ் எழுத்தாளர்களில், இசையை அறிந்து, அதை எழுத்தோடு கலந்து (சில சமயம் நாம் ரசிப்பது இசையா தமிழா என்று இனம் கண்டுபிடிக்க முடியாமல் போவது உண்டு), அல்லது இசையைக் கதைக் களனாகக் கொண்டு, அல்லது சொல்வது எதுவானாலும், இசை சம்பந்தமான ஒரு காட்சியை இணைப்பது என்று செய்பவர் பலர். நான் படித்ததில் கல்கி, தி.ஜா போன்றோர் இதை மிகவும் அனுபவித்துச் செய்வதாக எனக்குத் தோன்றுவதுண்டு. இந்த அனுபவத்தைக் கொடுப்பவர்களில் தி.ஜானகிராமனைத் தான் நான் முதன்மையாகக் குறிப்பிடுவேன். அவரின் சில வரிகளைக் கூர்ந்து படித்தால் ஒரு தம்புரா ஒலியின் ரம்மியம் நம்மைச் சூழ்வது போல் இருக்கும். அவர் வருணிக்கும் தஞ்சை, கும்பகோணமும், காவிரியும், சங்கீத மணமும், கதைமாந்தரும் (அந்த வசீகரமான, வலிமையான பெண் கதாபாத்திரங்களும்) என்னை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும். அந்த மாதிரியான அனுபவம் ஒன்று எனக்கு மரப்பசு படிக்கும்போது ஏற்பட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பப்போல, தி. ஜா என்ற கலைஞன் கோபாலி என்ற கலைஞனின் உள்ளத்து உணர்ச்சிகளை உணர்ந்து, அந்தப் பாத்திரமேற்று, உள்திறந்து காட்டுவபோல் எனக்குப் பட்டது. "ஆகா", என்று தன்னை மறந்து ஒரு வார்த...

புத்தக 'மீம்' - பட்டியல்

மதியின் அழைப்புக்கு நன்றி. புத்தகப் பட்டியல் போடுவது எனக்கு ஒரு உவப்பான பொழுது போக்கு. கைவசம் உள்ள புத்தகங்கள் : 100 - 120 படித்ததில் பிடித்தது: 1. பாரதியார் கதைகள் (உரைநடை, நம்முடன் நேரடியாகப் பேசுவது போன்றது, பாசாங்கற்றது. பாரதியை இன்னும் புரியவைத்தது, நெருங்கச் செய்தது. புதுச்சேரியின் மீது இனம் புரியாத காதல் வரச் செய்தது) 2. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - செ. யோகனாதன் - தொ. ஆ. (அற்புதமான கதைகள். வேறொரு புலத்தில்,என் மொழி பேசி, என் போல் உடுத்து என்னைப் போல் சிந்திக்கும் ஈழத்தமிழரை, அவரது சந்தோஷங்கள், அவலங்கள் முதலியவற்றை நான் அதுவரை அறிந்திராத அருமையான மொழியில் [தமிழ் இத்தனை இனமமையா!] அறிமுகப்படுத்தியது) 3. மானுடம் வெல்லும், வானம் வசப்படும் - பிரபஞ்சன் ("தமிழில் ஒரு நல்ல சரித்திர நாவல் இல்லையென்ற வசை இனி என்னால் ஒழிந்தது" என்று பிரபஞ்சனே சொன்னதை ஓரளவு ஒப்புக்கொள்ள வைத்தது. பாண்டிச்சேரியின் மீது மேலும் காதல் கொள்ளச் செய்தது) 4. வாடிவாசல் - சி சு செல்லப்பா (என்ன சொல்லுவதென்று தெரியவில்லை) 5. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா (சுஜாதாவின் படைப்புக்களிலேயே இதைத் ...

தலைப்புச் சுருக்கம் (சோதனை)

நீளமான தலைப்பினால் தான் ப்ளாக்கர் விளையாடுகிறதா என்று செல்வராஜ் சோதித்துப் பார்க்கச் சொன்னார். போன பதிவை இருமுறை பதிந்தும் முகப்புப் பக்கத்தில் காணவில்லை. தலைப்புத்தான் காரணமாயிருக்கும் என்றே தோன்றுகிறது. தனிச்சுட்டியையும் overwrite செய்துவிடுமோ என்கிற பயத்தில், என்னுடைய போன பதிவு இங்கே முழுதாக. (மூன்றாவது முறையும் ஒரே பதிவை இடுவதைப் பொறுப்பீர்களாக) மறுபடியும் மோட்டார் சைக்கிள் டயரி - ஒரு புத்தக வாசிப்பு அனுபவம் "A good traveler has no fixed plans, and is not intent on arriving." ~LaoTzu (570-490 BC)~. Travel என்பதைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? பயணம் அல்லது பிரயாணம் என்பது ஒரு இலக்கை நோக்கிச் செல்வதான செயலைக் குறிப்பது போல இருக்கிறது. சுற்றுலா என்பது நம் பள்ளிக்கூட 'இன்பச்சுற்றுலா' வை ஞாபகப் படுத்தி அதன் கனத்தைக் குறைக்கிறது. நான் பெங்களூரில் இருந்து கோவை செல்வதற்கே நிறைய ஆயத்தங்கள் செய்வேன்; டிரெயின், பஸ் டிக்கட் கிடைக்கவில்லையென்றால் 'தொத்திக் கொண்டு' போக முனைய மாட்டேன். "Unreservedல் போகும் அனுபவமே தனி" என்றெல்லாம் சொல்வதைப் பார்த்து, தவிர்க்க...

ஒரு பட்டியல் / அற்ப ஆசை...

படித்ததில் பிடித்த 100 புத்தகங்களின் பட்டியல் தந்துள்ளனர் எழுத்தாளர்கள் பாரா , மற்றும் ராமகிருஷ்ணன் . நான் தமிழில் 100 புத்தகங்கள் படித்திருக்கிறேனா என்பதே சந்தேகம்! ஆனாலும், இந்தப் பட்டியலிடுதல் கொஞ்சம் சுவாரஸியமான விஷயமாக இருப்பதனால், நானும்... (இவர்களின் பட்டியலில், நான் படித்த சிலவும் இருப்பதைப் பார்த்து பெருமை தாளவில்லை!) (இந்தப் பட்டியலின் வரிசை, எனக்கு ஞாபகம் வரும் முறையிலேயே இருக்கிறது) 1. பாரதியார் கதைகள் 2. மோக முள் - தி ஜா 3. அம்மா வந்தாள் - தி ஜா 4. மரப்பசு - தி ஜா 5. தி. ஜா சிறுகதைத் தொகுப்பு - பாகம் 1 6. அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - முழுத்தொகுப்பு 7. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - (செ. யோகனாதன் - தொ. ஆ) 8. ஆ. மாதவன் சிறுகதைகள் - முழுத் தொகுப்பு 9. ஒரு மனுஷி - சிறுகதைகள் - பிரபஞ்சன் 10. மனிதர்கள் மத்தியில் - சிறுகதைகள் - பிரபஞ்சன் 11. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன் 12. வானம் வசப்படும் - பிரபஞ்சன் 13. வேங்கையின் மைந்தன் - அகிலன் 14. பொன்னியின் செல்வன் - கல்கி 15. வீணை பவானி - சிறுகதைகள் -கல்கி 16. முதல் ஆட்டம் - இரா.முருகன் 17. வாடிவாசல் - சி சு செல்லப்பா 18...