நான் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது வகுப்பில் இரண்டு அணிகள் இருந்தன. செந்தில் 'செட்' மற்றும் ஜெரால்ட் 'செட்'. தினமும் மதிய உணவான பின்னர், இரண்டு 'செட்'டுக்கும் இடையே மற்போர்(!) நடக்கும். இப்படியாக ஒரு நாள் (நான் செந்தில் செட்) எங்கள் செட்டில் இருந்த என் நண்பன் சைமனை இந்த ஜெரல்ட் ஒரு மரக்கட்டையால் அடித்தான். பக்கத்தில் இருந்த நான் ஆத்திரம் கொண்டு ஒரு உடைந்த செங்கல்லை அவன் மேல் எறிந்ததில் அவன் உதடு கிழிந்தது. மூன்றாம் வகுப்பில் copy அடிக்க முயன்றேன் (!) என்று நூலகத்தில் தனியாக ஒரு ப்ரீட்சை எழுதின ஞாபகம்... நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது வீட்டருகில் பம்பர விளையாட்டில் ஏற்பட்ட ஒரு தகராறில் பக்கத்து வீட்டு விச்சுவையும் (அவன் என்னை விட ஒரு வயது பெரியவன்) துணைக்கு வந்த அவன் தம்பி 'ஜானு' வையும் அடித்துத் துவைத்தெடுத்தேன். அவர்கள் அழுதுகொண்டு போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவர்கள் அம்மா எங்கள் வீட்டின் முன் போட்ட கூச்சலின் போது உள் ரூமில் ஒளிந்திருந்தேன். இதெல்லாம் தற்பெருமை அல்ல. பின் எதற்குச் சொல்கிறேனென்றால், அன்றைக்கு என் அக்காள் மகன் படிக்கும் பள்ளியில்...
கண்ணன் தட்டினது!