முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாஷிங் மஷின் காதை

வூட்ல வாஷிங் மஷின் ஊத்திக்கிச்சு. ஒரு வாட்டி அவசரத்துல துணியெல்லாம் போட்டு, ஸ்விச்ச ஆன் பண்ணினதுக்கப்புறம் தான் சோப்புப் பொடி போடலன்னு ஞாபகம் வந்தது. அப்படியே ஸ்விச்ச ஆஃப் பண்ணிட்டு பொடியப் போடலாம்னு பாத்தா, ஆனான பாடு பட்டும் வாஷிங் மஷின் மூடி தொறக்கமாட்டேன்னுடிச்சு. எடுத்த காரியத்த முடிக்காம நடுவுல லூஸ்ல உடறது நம்பள மாதிரி அதுக்குப் பழக்கமில்ல போலிருக்கு. ஆனா, சோப்புப் பொடியே இல்லாம, தோச்சுத் தான் தீருவேன்னு அது நிக்கும்போது "கடம உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா" அப்படீன்னு தான் நெனக்கத் தோணிச்சு. அதுல என்ன ஃபஸ்ஸி லாஜிக்கோ என்ன எழவோ, அதுக்கப்புறமா அது ஓடறதே இல்ல. ஏதோ ஒரு ஸ்டேட்ல அப்படியே நின்னுடிச்சி போல. எல்லா ஸ்விச்சயும் ஆஃப் பண்ணிட்டுப் போட்டா முதல்ல இருந்து ஓடும்னு நான் நெனைச்சா, போன வாட்டி எங்க உட்டமோ, அங்கிருந்து தான் நான் ஆரம்பிப்பேன்னு அது நெனைக்கிது. இந்த மாதிரி யோசிக்கிற மஷின் வாங்கறதுக்கு முன்னாடி நாம யோசிக்கணும் - அத விட நாம புத்திசாலியா இருக்கமான்னு. பேஸிக்கா, அது என்ன யோசிக்குதுன்னு நமக்குத் தெரியணும். (நல்ல வேளையா) இத நான் வாங்கல. வாடகை