முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நமக்கான பிரத்யேக இடங்கள்

கண்ணே கண்ணம்ம! ஆறடி நிலமே சொந்தமடா என்று தத்துவார்த்தமாகப் பாடினாலும், நமக்கான பிரத்யேக இடங்கள் நமக்கே சொந்தம். இவைகளை அளக்க முடிவதில்லை. பேருந்து இருக்கைகளிலும், இன்ன பிற உட்காருமிடங்களிலும் ஒடுங்கி உட்கார்ந்ததில் ஒல்லியான உடம்புக்காரனாக இருக்கிறேன். இனி இதை ஒரு மரபணுச் செய்தியாக அடுத்த தலைமுறைகளுக்கும் அனுப்பச் சித்தமாகிவிட்டது உடம்பு. இனி வருவோரெல்லாம் எங்கும் உடம்பைக் குறுக்கிக் கொள்ளுதலை இயல்பாகக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் சொற்பமான இடமே எனது தேவை. ஆனால நாம் இயங்க, உழல, சூக்குமமான இடங்கள் தாராளமாகத் தேவைப் படுகின்றன. நம் சிந்தனைகள், கோட்பாடுகள், அன்பு, காதல், விருப்பு-வெறுப்புகள், சுதந்திரம், சுயமரியாதை போன்றவற்றை இந்த இடத்திலே சேமித்திருக்கிறோம். யாரும் இந்த இடங்களை ஆக்கிரமிப்புச் செய்தால் நாம் இயங்குவதற்கு நெருக்கடியாகிவிடுகிறது; மூச்சு முட்டுகிறது. அது நம்மை இயல்பாக இருக்கவிடுவதில்லை. மலர்களும், புட்களும், வண்ணத்துப் பூச்சிகளும் தத்தம் இயல்பான இடங்களிலே இருப்பதில் தானே மிளிர்கின்றன? என் இடம் என்வசமிருப்பதினாலேயே நான் நானாகிறேன். நம் ஒருவருக்கொருவர் மீதான மதிப்பும், மற்றவர்