கபாலி வெளியாவதற்கு முன்னால் இயக்குனர் பா. இரஞ்சித்தின் நேர்காணல் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. கபாலி உருவான கதையையும் அதைப்பற்றிய சில தகவல்களையும் சொன்னார். கபாலிக்கு முன்னான அவரின் இரு படங்களும் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலைப் பேசுவதாகவே இருந்திருக்கின்றன - வெகு சினிமாவிற்குள்ளேயே இதைச் செய்திருப்பதே இரஞ்சித்தின் கலை என்று நான் நினைக்கிறேன். அப்படியல்லாமல் இருந்திருந்தால் அந்தப் படங்கள் ஆவணப்படங்கள் போலாகியிருக்கும். எல்லோரும் துய்க்கும் வண்ணமே அவர் கலைப் படைப்புகள் இருப்பதால், அவை சொல்லும் செய்தி எல்லோருக்கும் எட்டுகிறது. இது நிற்க. "பொழுதுபோக்கு அம்சங்கள்” என்று சினிமாக்காரர்களே வகுத்திருக்கும் சமன்பாடு ஒன்றிருக்கிறது - சண்டை, நகைச்சுவை, நடனம், பாடல்கள், குத்தாட்டம் (ஐயிட்டம் சாங்), என்று. இப்படியான ‘வசூல்’ குவிக்கும் படங்களின் அதிக விலை போகும் சந்தைப்பொருளாக இரஜினி ஆகிவிட்டார். அப்படியான நட்சத்திர மதிப்பீடு உள்ள நடிகரை வைத்துப் படமெடுப்பதில் சில சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட எந்த சமரசங்களையும் தாம் செய்துகொள்ளவில்லை என்று இரஞ்சித் தன் செவ்வி...
கண்ணன் தட்டினது!