முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழவு

அதாகப்பட்டது , இவர் தன்னை சமூகப் போராளியாகவும், ஜனநாயக (பஹுஜன) விரோதியாகவும் காட்டிக் கொள்வதால், இவரின் பிரதி சந்தேகதிற்குரியதாகியும், அதற்கு இவர் பெற்ற புக்கர் பரிசானது இவர்தம் கருத்த சுருண்ட தலைமுடி மற்றும் செம்பொன் வண்ணக் கண்களைக் காட்டி மயக்கி வாங்கியதெனவும் ஆகின்றது தெரிந்ததே. இப்பவும் இவர் இந்தத் தகாத செயல்களைச் செய்வதில், இவரது தழுவிஎழுதும் படைப்புத் திறன் கூட பாதிக்கப்பட்டிருப்பது இவர் இன்னொரு புத்தகத்தைத் தழுவி எழுதாததிலிருந்து புலனாகிறது. மற்றபடி தழுவல் கொழுவல் சமாசாரங்களில் உண்மை இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள நான் முயற்சிக்கவில்லை. ஆனால் விமரிசனங்கள் என்பன என்னைப் பொறுத்த வரையில் தனி நபர் விருப்பு வெறுப்பு சார்ந்தவை - அதாவது இந்த படைப்பாளியாகிய நபரைப் பற்றிய விருப்பு வெறுப்பு சார்ந்தவை என்பது என்னுடைய இந்த சொத்தைப் பதிவிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நம் சொந்தக் காரியங்கள் சுமூகமாக நடக்கும் வரையில், எதைப்பற்றியும் தீவிரமான ஈடுபாடோ எதிர்ப்போ இல்லாத ஜனநாயக அணுக்கப் போக்கு இருந்தால் படைப்புத் திறனும் பெருகும், நாடும் சுபிக்ஷமாக இருக்