முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2004 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வூட்ல சொல்லிகினு வந்தியா?

"You really never learn to swear until you learn to drive" என்று யாரோ சொல்லி, எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. இன்று நான் மனத்தில் சொல்லிக் கொண்ட, தினமும் காலையில் பைக் ஓட்டி வரும்போது சொல்லிக்கொள்கிற "ங்கோத்தா.." வகையறாக்கள் எண்ணிக்கையில் அடங்கா. Traffic விதிகளை மதிப்பதை ஒரு காதலுடன் செய்ய முயற்சிக்கிறேன் - இதை என் தேசப்பற்றின் சிறு வெளியீடாகக் கூட நான் பார்ப்பதுண்டு. கொஞ்சம் civic sense, தேவையான அளவு traffic sense, துளி பொறுமை இருந்தால் நம்ம ஊர் சிங்கப்பூரோ, ம்யுநிக்கோ ஆகாவிட்டாலும், காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யார் "வாயிலும் விழ" வேண்டாம், உபயோகிக்கச் சரியான கெட்ட வார்த்தைகள் தேட வேண்டாம், முழு நாளையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்... யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள், பொலிஸ் இல்லாத நாற்சந்தியின் நெரிசலில், இண்டு இடுக்கிலெல்லாம் தத்தம் வாகனங்களைச் செருகிக்கொண்டு, அவர்களும் போகாமல், மற்றவர்களையும் நகர விடாமல

ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்...

கணினியுடன் இப்போதெல்லாம் ரொம்ப சிநேகம் பாராட்டுகிறேன். கை தோள்ப்பட்டையில் இருந்து பிய்ந்து தொங்கும் அளவுக்கு RSI வளர்த்துள்ளேன். இருக்கையில் கவிழ்ந்தும், நிமிர்ந்தும், பக்கவாட்டில் அமர்ந்தும், கால்களை மடக்கி வைத்தும் மேசைமேல் நீட்டியும், தட்டச்சானை மடியிலும் (மாரிலும், தோளிலும்),பலகை மீது வைத்தும், பற்பல கோணங்களில் இருந்தும் ஒன்பது வருடங்களில், பல மென்பொருள் கிரந்தங்களும், கட்டளைத்தொடர் புனைவுகளும், மின்னஞ்சல் மடல்களுமாக அடித்துத் தள்ளியிருக்கிறேன். இதுபோதாதென்று வலைமேய்தல் காரணமாகவும் mouse ஐ (இதற்குத் தமிழில் என்ன 'எலி'யா?) click ஓ click என்று க்ளிக்கியும் இருக்கிறேன். (முழங்கையில் நமைச்சலும், விரல் எலும்புகளின் வலியும் பலமிழப்பும், நுனிகளில் எரிச்சலும், பின்னந்தோளில் குத்தல் போன்ற வலியும் இருந்தால் ஒரு நவீன ortho விற்பன்னரிடம் காட்டித் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும்) இருந்தும், தமிழில் தட்டச்சுவதைத் (இப்போதெல்லாம் பழைய காலம் மாதிரி யாராவது 'எழுது'கிறார்களா?) தவிர்க்க இயலவில்லை. தமிழ் தட்டச்சுதலும், படித்தலும் நன்றாய் தான் உள்ளது. மட்டுமல்லாமல், உணர்ச்சியற்ற இந்த இயந்