முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆதவனின் காகித மலர்களில் இருந்து...

அன்புடையீர்,

வருடப் பிறப்புக்கு முந்தின இரவு கனாட் பிளேஸில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி திரு.அவினாஷ் மாதுர் உங்கள் பத்திரிகையில் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தேன். பெண்கள் இதுபோல ப்லாத்காரத்துக்கு உள்ளாவதற்கு பெண்களேதான் ஒரு விதத்தில் பொறுப்பாளியென்றும், இன்றைய நவநாகரீகப் பெண்களின் நடையுடை பாவனைகள் பரம யோகிகளைக்கூட நடத்தை தவறத் தூண்டுவனவாக உள்ளனவென்றும் அவர் எழுதியிருந்தார். இது மட்டுமா? பல பெண்கள் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் ஒரு ரகசியமான இன்பம் பெறுகிறார்களென்பதும், அவர்கள கூச்சல் போடுவதெல்லாம் வெறும் வெளிவேஷந்தான் என்பதும், ஒரு சில சாராரிடையே பலாத்காரமே செய்யப்படாத பெண்களைப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்பதும், துர். மாதுரின் வேறு சில துணிவுகள். அடேயப்பா! துர்.மாதுரின் கரங்களில் நேரடியான பங்கும் அனுபவமும் இருந்திருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன. அல்லது ஒரு வேளை, போன ஜன்மத்தில் அவர் ஒரு பெண்ணாக இருந்திருப்பாரோ என்னவோ? ஆம். அதுவும் சாத்தியம் தான். ஏனென்றால் அவருடைய சில அபிப்பிராயங்கள் ஏறாத்தாழ ஒரு நூற்றாண்டு பின் தங்கியவையாகத் தொனிக்கின்றன.உதாரணமாக ஜாம் செஷன்களையும் காக்டெயில் பார்ட்டிகளையும் யந்திர சமுதாயம் உருவாக்கியுள்ள 'காட்டுமிராண்டிக் கலாச்சாரம்' என்று அவர் வர்ணிக்கிறார்.'டிஸ்கோதே'க்களிலும் பார்ட்டிகளிலும் முன்பின் அறியாத ஆடவர்களைத் தொட்டு நடனமாடவும், தழுவி முத்தமிடவும் பெண்கள் தயாராகிவிட்ட பிறகு, நடுச்சாலையிலும் இத்தகை நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கியிருப்பது குறித்து நாமதிர்ச்சியடையவேண்டியதில்லை என்கிறார் மாதுர். நவநாகரிகப் பெண்கள் குறித்து, 'அவர்கள் எதுவும் செய்வார்கள்; எதற்கும் இணங்குவார்கள்' என்ற ஒரு அபிப்பிராயம் - பெர்மிசிவ் இமேஜ் - சமூகத்தின் பல்வேறு சாராரிடையே, குறிப்பாக இத்தகைய பெண்களுடன் பழக வாய்ப்பில்லாதவர்களிடையே, பரவியுள்ளதாகவும், இதற்கு நவநாகரிகப் பெண்கள் தாம் பொறுப்பளியென்பதை நாம் மறுக்க முடியாதென்றும் திரு. மாதுர் வாதாடுகிறார். தம்முடைய வாதத்துக்கு ஒத்தாசையாக, இன்றைய இந்திய அரசியல்வாதியைப் பற்றிய - மந்திரிகளைப் பற்றிய - எத்தகைய பிம்பம் மக்களிடையே உருவாகியுள்ளதென்பதை அவர் எடுத்துக்காட்டி, இதற்கு இன்றைய மந்திரிகள்தான் பொறுப்பாளி, அரசியல்வாதிகள் தான் பொறுப்பாளி என்பதை நாம் மறுக்க முடியுமா?' என்று கேட்கிறார். காந்தி, படேல் ஆகியவர் காலத்துப் பிம்பங்களுடன் இன்றைய பிம்பங்களை ஒப்பிடுகிறார்.

டியர் மிஸ்டர் மாதுர்! ஒரு சாராரைப் பற்றி உருவாகும் பிம்பத்துக்கு அந்தந்தச் சாரார் பொறுப்பாளியென்பது உண்மையோ இல்லையோ, ஆனால் மக்கள் தாம் விரும்புகிற ரூபத்தில் - பிம்பத்தில் - பிறரைக் காண்கிறார்கள் என்பது மிகவும் உண்மை. இந்த பிம்பம் சிதறும்போது எரிச்சலும் அதிருப்தியும் பீதியும் அதிர்ச்சியும், தவிர்க்க முடியாமல் ஏற்படுகின்றன. விகாரமான கற்பனைகள் ஏற்படுகின்றன. திரு.மாதுர் போன்றவர்கள் நாள் முழுதும் தம் வீட்டிலேயே இருந்து கொண்டு சமையலும், சிற்றுண்டியும், காப்பியும் தேநீரும் வேளாவேளைக்குத் தயாரித்து ஆண்களுக்கு அளிப்பதையே தொழிலாகக் கொண்ட - படுக்கை உதறிப் போடுவது, துணி துவைப்பது, ஷூ பாலிஷ் போடுவது என்று பலவிதமாக ஆணளுக்குச் சிசிரூஷை செய்வதில் இன்பம் காண்கிற - 'மெஸோக்கிஸ' இயல்புள்ள தாய்களாலும், சகோதரிகளாலும், 'கெடுக்கப்பட்டவர்கள்.' இவர்களுக்குப் பெண் ஒரு வாயில்லாப்பூச்சி. தம்முடைய தேவைக்கேற்ப இயங்க வேண்டிய ஒரு யந்திரம். டூத் பிரஷ்ஷையும், ரேஸரையும்போல ஒரு சில தருணாங்களில் பயன்படுத்து, பிறகு மூலையில் வைத்திருக்க வேண்டிய வஸ்து. இவர்கள் விரும்புகிறபோதுதான், விரும்புகிறபடிதான், அவள் சிந்திக்க வேண்டும், பேச வேணும், தூங்க வேண்டும். பெண்ணின் இத்தகைய பிம்பம் தான் மாதுர் போன்றவர்களுக்கு இதமானது. பாதுகாப்பானது. எனவே, நவநாகரிகப் பெண் சுயமாகச் சிந்தித்துச் சில வார்த்தைகள் பேச முயலும்போது - தன் விருப்பத்திற்கேற்றவாறு உடுக்கவும், பிற மனிதர்களுடன் பழகவும் தொடங்கும்போது, அவர் அதிர்ச்சி கொள்வதில் வியப்பில்லை. இத்தகைய பெண்கள் அவருக்கு நாணாமற்றவர்களாக, பண்பாடிழந்தவர்களாக, பரத்தைகளாகப் போய்விடுவது இயல்புதான். உண்மையில் தம்முடைய இந்த அபிப்பிராயங்களின் மூலம் திரு. மாதுர் தம்முடைய தாய், சகோதரி, மனைவி ஆகியோருக்குத் தாம் எந்தவிதமான ஸ்தானம் அளித்திருக்கிறாரென்பதை - அவர்களுடன் அவர் கொண்டுள்ள உறவுகளின் தன்மையை - வெளிப்படுத்திக் கொண்டுள்ளாரென்று தான் நினைக்கிறேன்.

'டிஸ்கொதே'க்களிலும் பார்ட்டிகளிலும் திரு. மாதுர் கற்பனை செய்வதுபோல், அல்லது பார்திருப்பதாக நினைப்பதுபோல, யாரும் யாராலும் கற்பZஇக்கப்படுவதில்லை, பலாத்காரம் செய்யப்படுவதில்லை. மிருக இச்சை கொண்ட மனிதர்கள் களியாட்டம் போடுவதில்லை. அங்கே மனொதர்கள் தம்முடைய சமூக வேஷங்கள், பேதங்கள் (ஆண்.பெண் பேதங்கள் உட்பட) ஆகியவற்றை மறந்து ஒருவரையொருவர் வெறும் மனிதர்களாகப் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள், அவ்வளாவுதான். திரு. மாதுர் இதைப் புரிந்துகொள்வாரென்று நான் எதிர்பார்க்க முடியாதுதான்.

தழுவல்களும், முத்தமிடல்களும் இரு மனிதர்களிடையே ஏற்படும் மன உறவின், உணார்ச்சி சங்கமத்தின், புரிந்துகொள்ளலின், ஒரு குறிப்பிட்ட பரிணாம கட்டத்தில் யதேச்சையாக நிகழ்கின்றன. அந்தக் கணத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தால், பாசாங்கு செய்யாமலிருந்தால், அது ஒரு தூய நிகழ்ச்சி, இல்லாஅவிட்டால், அது வக்கிரமானது. ஆபாசமானது; சம்பந்தப் பட்டவர்கள் மணமானவர்களானாலும் ச்ரி, மணமாகாதவர்களானாலும் சரி, எல்லா இடங்களிலும் இருப்பதுபோல பார்ட்டிகளிலும் மோசமான கருத்துள்ளவர்களும், போலிகளும் இல்லாமலில்லை. ஆனால் தெருவில் நடக்கும் பலாத்காரங்களுடன் இவற்றை ஒப்பிடுவது நேர்மையற்ற, மிகப்படுத்துவதாகும். குறைந்தபட்சம், இளம் பருவத்தினரின் பார்ட்டிகளைப் பற்றி இதை என்னால் சொல்லமுடியும். இளம் பருவத்தினரின் கேளிக்கைகளை - கலந்துறவாடலை - மாதுரைப் போன்ற பெரியவர்கள் வக்கிரப் பார்வையுடன் நோக்கும்போதும், இத்தகைய நிகழ்ச்சிகளை அவர்கள் காப்பியடிக்க முயலும்போதும்தான், பாசாங்குகளும் விபரீதங்களும் உண்டாகின்றன.

'மேட்டுக்குடி மக்கள், மேட்டுக்குடி மக்கள்' என்று திரு.மாதுர் தம் கடிதத்தில் குறிப்பிடுகிறார். திரு.மாதுர் எந்தக் குடியைச் சேந்தவரென்று நான் தெரிந்து கொள்ளலாமா? அவரால் ஆங்கிலத்தில் கோர்வையாகச் சிந்திக்க முடிகிறது; ஆங்கிலத் தினசரிக்கு ஆங்கிலேயர்களையே வெட்கமடையச் செய்யும் மொழியறிவுடன் கடிதமெழுத முடிகிறது. அவர் நிச்சயம் ஒரு பிந்தங்கிய வகுப்பினரோ, படிப்பு வாசனையர்ற கிராமவாசியோ அல்லர். அவ்வளவு அழகாக, பொறுப்புகளைப் பற்றி யோசிஹத்ஹ்டீர்களா? நீங்களும் உங்களைப் போன்றவர்களும் நாட்டுக்காக என்ன செய்திருக்கிறீர்களென்று நினைத்துப் பார்த்தீர்களா? உங்களைக் கவலை கொள்ளாச் செய்யும்,மனத்தை உறுத்தும், பிரச்சனைகளைப்பற்றி காஃபி ஹவிஸிலோ, பஸ் ஸ்டாண்டிலோ, பார்க் பெஞ்சிலோ, காரசாரமாகச் சொற்பொழிவாற்றுகிறீர்கள்;தினசரிக்கு ஒரு கடிதம் எழுதுகிறீர்கள்; அவ்வளாவுதான்.

உங்கள் பகல் நேரங்களை அநேகமாக ஏதாவதொரு ஸ்தாபனத்துக்கு, குறிப்பிட்ட ஒரு மாதச் சம்பளத்துக்கு விற்றிருப்பீர்கள் - மனசாட்சிக்கு உடன்பாடற்ற காரியங்களை அந்தச் சம்பளத்தின் பொருட்டுச் செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பீர்களுங்களுடைய சிந்தனைச் சுதந்திரம், நெயல் சுதந்திரம் யாவும் பறிக்கப்பட்டிருக்கும், இந்த நிலைமை ஏற்படுத்தும் குற்ற உணார்வுகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக, அரசியல்வாதிகளை, அரசியல் அமைப்பைச் சாடுகிறீர்கள். இதில் உங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது;அமைப்பே தவறானதென்று சுட்டிக்காடுவதன் மூலம் அமைப்பின் இரு சிறு மூலையில் நீங்கள் ச்ய்யும் சிறு தவறுகள் தவிர்க்க முடியாதவை போலவும், மன்னிப்புக்குரியவை போலவும் தோன்றுகின்றன. ஆனால் இது ஒரு மயக்கம்; ஒரு மாஸ்டர்பேஸ்ஹன். ஆமாம், மிஸ்டர் மாதுர்; நம் நாட்டுச் சிந்தனையாளர்களின் செயலார்வமோ செயல்திறனோ அற்ற மலட்டுத் தன்மைதான் நன் தேசத்தை வீழ்ச்சியடையச் செய்துகொண்டிருக்கிறது.

காந்தியின் பெயரையும், படேலின் பெயரையும் ஆதங்கத்துடன் எடுத்துச் சொல்லி, இன்றைய தலைவர்களைப் பார்த்துப் பெருமூச்செறிகிறீர்கள். ஆனால் உங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரையில் உங்களுடைய சிறுவட்டத்தில்கூட நீங்கள் சவால்களை ஏற்கமாட்டீர்கள், கொள்கைகளுக்காகப் போராட மாட்டீர்கள், அமைப்புடன் மோதமாட்டீர்கள். அமைப்பில் உங்களுக்கென நீங்கள் தேடிக்கொண்டுள்ள பாதுகாப்பான மூலையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். இன்னொரு காந்தியும், இன்னொரு படேலும் எங்கிருந்து வருவார்கள்? வெளிநாட்டிலிருந்தா? எதற்காக வர வேண்டும்> நீங்கள் அவர்களைப் பற்றி காஃபி ஹவுஸில் புகழ்வத/ர்கும், தினசரியில் கடிதமெழுதுவதற்குமா? ஹூம்! உங்கள் பலவீனமான, கோழைத்தனமான நிலையை நீங்கள் உணராமலில்லை. அதனால்தான் சமூகச் சீர்கேட்டுக்கான பழியைச் சுமத்துவதற்கு வெவ்வேறு இஅலக்குகளைப் பரப்ரப்புடன் தேடியவாறு இருக்கிறீர்கள் - அரசியல் வாதிகள், நவநாகரிகப் பண்கள் - அப்பாடா! மிஸ்டர் மாதுரை யாரும் இனிமேல் பழிக்கமுடியாது; அவர் நிம்மதியாக இருக்கலாம்.

தங்கள் இத்யாதி,
மிஸ் தாரா ரங்கசாமி


ஆரம்பித்து நடுவழியில் சோர்வடைந்து விட்டதாலும், பாதி வழி வந்ததில் மீதியையும் தட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் தட்டச்சிய அயர்ச்சியும், பொதுவில் மனச்சோர்வும் உள்ளதால் இதற்கு மேல் நான் எதுவும் சொல்வதற்கில்லை. அலுவலகத்தில் உருளைக் கட்டையால் அடிப்பார்கள் - கிளம்பவேண்டும்.

கருத்துகள்

donotspam இவ்வாறு கூறியுள்ளார்…
What a man he is! காகித மலர்கள் Unputdownable.

சில புத்தகங்களை பொழுது போக படிப்போம். இவருடைய புத்தகங்களுக்கு சில பொழுதுகளை ஒதுக்க வேண்டியிருக்கு. "என் பெயர் ராமசேஷன்" பொங்கல் விடுமுறைக்கு விட்டு வைத்திருக்கிறேன்.
பிச்சைப்பாத்திரம் இவ்வாறு கூறியுள்ளார்…
Try his short stories.

- Suresh Kannan.
Badri Seshadri இவ்வாறு கூறியுள்ளார்…
ஆதவன் முழு சிறுகதைத் தொகுதி வரும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் மூலமாகக் கொண்டுவருகிறோம். 800 பக்கங்கள், கெட்டி அட்டை, ரூ. 350.

அத்துடன் அவரது குறுநாவல் தொகுதி - ஏற்கெனவே கொண்டுவந்தது - இரவுக்கு முன்பு வருவது மாலை - கிடைக்கும்.
மணியன் இவ்வாறு கூறியுள்ளார்…
கடிதம் கருத்து பொதிந்ததாக இருந்தது. ஆதவனின் காகிதமலர்களிலிருந்து excerpts என்று தலைப்பிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் தெரிந்து கொண்டேன்.
அவரது ஆக்கங்களை படிக்கத் தூண்டும் துண்டு.
வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆதவனைப் பார்க்காத குருடனாய் இத்தனை நாள் இருந்துவிட்டேனே. இந்த வருடமாவது ஆதவன் புத்தகங்களை வாங்கிவிடலாமென்று பார்த்தால் இந்த வருடம் செ.பு.காவிற்கு போக முடியாத நிலை. சை..
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ஆ! எவ்வளவு தட்டச்சுப்பிழைகள்.

-Eswar,
நீங்கள் சொல்வது சரியே. இரண்டாம், மூன்றாம் வாசிப்பிலும் அயர்வில்லாமல் போகும்!

-சுரேஷ் கண்ணன்,
உண்மையில் முழுச்சிறுகதைத் தொகுப்பும் தேடிக்கொண்டிருந்தேன். இப்போது பத்ரி தயவில் செ.பு.கண்காட்சியில் வாங்கிவிடுவேன்.

-பத்ரி,
பெங்களூரிலேயே இரவுக்கு முன்பு வருவது மாலை வாங்கிவிட்டேன். முழுச் சிறுகதைத் தொகுப்புக்கு நன்றி!

-மணியன், சுதர்சன்,
இவ்வளவு தப்பும் தவறுமாக அடித்ததையும் பொறுமையாகப் படித்தமைக்கு நன்றி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி