முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காற்றே வா

"...  காற்றே வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே." குளித்து, நிலைக்கண்ணாடி முன்னால் அரைமணிநேரம் நின்று படியப்படிய வாரிக்கொண்ட தலை பார்த்தாயா, இரண்டே நிமிடங்களில் ‘சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியன்’ போல ஆக்கிவிடாய் என் தலைமயிரை என் செல்ல மகளுக்கும் நான் தராத உரிமையை நீ என்னிடத்திலே எடுத்துக்கொண்டாய் நீ இங்கிதம் தெரியாதவன் அந்த முண்டாசுத் தலையனிடம் காட்டியிருக்கலாமே உன் வேலையை? பேய்க்காற்றுடை நாட்டில் படியாத் தலைமயிரானாய் போகக்  கடவாய்!  (வேணுமின்னா வெட்டி ஜேப்பில வச்சுக்கோ)

எதைத்தின்றால் தெளியும் பித்தம்?

- மரபணு மாற்று உயிரினங்கள் (Genetically Modified Organisms – GMO – ம . மா . உ ) பற்றிய என் சிந்தனைகள் , மற்றும் கருத்துகளைப் பதிவு செய்ய விழைகிறேன் .  இதைப் பற்றிய நிபுணத்துவக் கருத்துகள் சொல்ல எனக்குத் தகுதியில்லை . ஆனால் எதையும் ( குறிப்பாக உணவுப்பொருட்கள் ) சரியாகப் புரிந்துகொண்டு எனக்கானவற்றைத் தெரிவு செய்யும் நுகர்வோனாக இதைப் பற்றிய சச்சரவுகள் என்னைப் பாதிப்பதுடன் , குழப்பமான மனநிலையிலேயே வைத்திருக்கின்றன . முதலில் பலரைப்போலவே எனக்கும் மரபணு மாற்று உயிரினங்களில் நம்பிக்கையில்லை என்பதைப் பதிவுசெய்யவேண்டும் .   இதைச் சொல்லும்போதே ம . மா . உ களின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டிற்கு உதாரணம் ஆகிறேன் - அறிவியல் அறியாதோரின் அடித்தளமற்ற பயத்தின் விளைவே உலகளாவிய ம . மா . உ எதிர்ப்புக்குக் காரணம் என்கிற குற்றச்சாட்டுதான் அது .  ஆகவே இதன் எதிர்ப்பாளர்கள் எல்லோருமே அறிவியலுக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரத்தையும் ம . மா . உ வின் ஆதரவாளர்கள் முன்னெடுக்கிறார்கள் . ஆனால் எதிர்ப்பாளர்

101 கனவுகள் - மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி...

பேப்பர்மிட்டாய் என்றொரு பண்டம்; வட்டமாக, சற்றே கெட்டியான காகிதம் போன்ற திண்மையுடனும், அசட்டுத்தித்திப்புடனும் இருக்கும் இதை 10 காசுக்கு வாங்கிச்சாப்பிட்டிருக்கிறேன். உங்களுக்கும் இதைத் தெரிந்திருக்கலாம். அன்றைக்கு நான் உடுத்தியிருந்த உடை அம்மாதிரியான பண்டத்தால் ஆனது. தெருவில் நடந்துபோகிற வழியில் பிய்த்துத்தின்றுகொண்டே நடந்தேன். நாவில் பட்டுக் கரைந்து, அதே லேசான இனிப்புடன் - பெரிய சுவையில்லையானாலும் தின்பதை நிறுத்த முடியவில்லை.  நடுவில் ஏதோ மெல்லமுடியாத பகுதி வந்ததும் வாயிலிருந்து கையிலெடுத்துப் பார்த்தேன். தின்பண்டத்தால் ஆன உடையில் நிஜ சரிகை வைத்து எந்த மடையன் தைத்தது? வாயில்  மீதமிருந்த, சவைத்த சரிகையைத் துப்பினேன்.  அப்போதுதான் ஒரு நிதானத்துக்கு வந்தேன் - பார்த்தால் பாதி உடையை தின்றுவிட்டிருக்கறேன். அப்போதுதான் உடையை ச்   சரியாக கவனிக்கவும் செய்தேன். நீல வண்ணத்தில் அடர்நீலப் பூக்களுடன், பழுப்பு சரிகை போட்ட சேலையைத் தான் கட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்.  தின்றுமுடித்துபோக  மீதியை இடுப்பில் துண்டு மாதிரித்தான் கட்டிக்கொள்ள முடிந்தது.  முன்னெப்போதும் நிர்வாணக் கனவுகளில்

மொழி வன்முறை

Clicked by author கார்மேகம் நோக்கி   குளிர்த் தூறல்   காத்திருக்கும்   அப்பாவிகளின் மேலே   அமிலமழையாய் விழுகிறது அசிரத்தையினால் அமையும்   மோசமான மொழி  - கொடுங்கோலனின் குடையினுங்   கொடுமையானது   அது   இருமுறை சபிக்கப்பட்டது -   அதை   ஈபவர் சபிக்கப்பட்டவர்   கொள்பவரு மப்படியே   - ஷேக்ஸ்பியர் வரிகளைத் 'திருத்தி' எழுதியது

எதோ ஒரு 'தா'

Clicked by Magesh Babu ஹலோ? ஹலோ, யாருங்க? கவிதா இருக்காங்களா? இல்லீங்க, அனிதா தா இருக்றா... ... ... ச்சே...ரி குடுங்க, அனிதாகிட்டயே பேசறேன்...

கல்லாதது கைமண்ணளவு

(1) எங்கள் நிறுவனத்தில் தொண்டூழியம் செய்ய ஆர்வம் காட்டியதற்கு நன்றி.   உங்களுக்கு அக்கவுன்டிங்   வருமா  ? இல்லைங்க ,   வராது .  ஃபண்ட் ரெய்சிங்,   ஊடகத் தொடர்பு , மார்க்கெடிங் ,   தொழில்முறை எழுத்து,   இதுமாதிரி  ? மன்னிக்கணும் ,   நான் கணினிசார் தொலைதொடர்பு வல்லுநர் . ஓ ,   அப்போ நீங்க எங்கள்  வலைத்தள கட்டுமானத்தில் உதவலாமே  ? அந்த மாதிரி இல்லைங்க . Gi LAN- ல , TCP Optimization, Video Optimization, Deep Packet Inspection போன்ற சேவைகளுக்கு   பல vendor products- ஐ integrate பண்ணுவேன் .   ஓ ...   ... ம்ம்ம் ... எங்களுடைய மின்களஞ்சியத்திற்கு நாங்கள் சேகரித்த சில சஞ்சிகைகளை ஸ்கேன் செய்து கோப்பாக சேமிக்கவேண்டும் . தினமும் ஒருமணிநேரம்   இங்கே வந்து  இதைச் செய்துதர இயலுமா ? அது ... நீங்க ஒருவாட்டி சொல்லிகொடுத்தீங்கனா கத்துக்கிட்டுப் பண்ணீடுவேன் . சரி , அப்போ நாளைக்கு வாங்க ... ரொம்ப மகிழ்ச்சிங்க ,   வர்றேன் . Clicked by Magesh Babu (2) என்ன வேலை பண்ணறீங்க ? கணினிசார் தொலைதொடர்