முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு டாகுமெண்டரி படமும், சில எண்ணங்களும்

எனக்குச் சில சனி-ஞாயிறுகள் உருப்படியாய் அமைந்துவிடுவதுண்டு. இப்படியானவொரு ஞாயிறு அன்று பெங்களூரில் Molecules creations ஏற்பாடு செய்திருந்த Voicing Silence என்ற சர்வதேச டாகுமெண்டரி திரைப்பட விழா வில் ஒரு மூன்றரை படங்கள் பார்த்தேன். பதினேழு படங்கள் இதில் திரையிட்டார்கள். விழாவின் முடிவில் மூன்று சிறந்த முயற்சிகள் என்று மூன்று படங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். நான் பார்த்த படங்கள் : 1. La Bicicleta - கனடா (கியூபாவின் போக்குவரத்துப் பிரச்சனைகளை கனடா நாட்டுச் சைக்கிள்கள் தீர்ப்பது பற்றி) 2. Under Attack - ஸுவீடன் (வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு) 3. 46 Degree Root of the Wind - அர்ஜண்டீனா (Tehuelches பழங்குடியினரின் சாகும் மொழி, கலாச்சாரம் பற்றியது) 4. Baghdad Rap - ஸ்பெயின் (அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பில் சாதாரணர்கள் சிக்கிச் சீரழிந்ததை பல ராப் பாடல் வரிகள்மூலமாகவும், கோரமான சில படங்களின் மூலமாகவும் காட்டுகிறது) இவற்றில் La Bicicleta என்ற படம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. Bicycles Crossing Borders என்ற கனடா நாட்டு அமைப்பொன்று பழைய சைக்கிள்களைப் பழுதுபார்த்து, மிகவும் சகாய விலையில் ஹவான