முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விடுதலைப்போராட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"கௌரியம்ம புறத்தாயி"

பல்கலையில் முதுகலைப் பட்டப்படிப்பு ‘படித்துக்கொண்டிருந்த’ போது தங்குவிடுதியில் இருந்த மலையாளி மாணவனிடம் என் மலையாள அறிவைப் பீற்றிக்கொள்ளும் விதமாக ஊர் விசேடங்களை எனக்குத் தெரிந்த மலையாளத்தில் கேட்டேன். அவன் சொன்னான்:  “கௌரியம்மயெப் புறத்தாக்கி”.  எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கேரள அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சர், மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் (அப்போது) மேலாக மக்கள் பணியாற்றிய கே. ஆர். கௌரியம்மயைப் பற்றித்தான் சொல்கிறான் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. 1994ல் அவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினின்றும் விலக்கப்பட்டார். எனக்கு அரசியல் சாய்வோ, முதிர்ச்சியோ இல்லாமலிருந்த காலம். என்னையொத்த பலருக்கும் அந்த வயதில் தீவீர அரசியல் நிலைப்பாடுகள் தோன்றவாரம்பித்திருக்கலாம். எனக்கு அவ்வாறில்லாமல் இருந்ததற்கு என்னுடைய மத்தியவர்க்கக் குடும்பச்சூழல் காரணமாயிருக்கலாம். அன்றைக்கு எப்படியோ சிரித்து சமாளித்துக்கொண்டாலும், ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரைக்  கட்சியிலிருந்து நீக்கியதை பெரிய செய்தியாக என் வயதொத்தவன் ...