முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சும்மா

வாரயிறுதிகளில் விடியற்காலையில் எழுந்தால் ஓய்வு நாட்களின் நீளம் கூடும் என்பது நண்பரின் பரிந்துரை. சும்மாயிருக்கும் இந்நாட்களில் இதைப் பின்பற்றுவதில்லை. காலை பத்து மணிக்கே எழுந்து காப்பியைக் குடித்து, சிற்றுண்டி சாப்பிட்டு, மீண்டும் காப்பி குடித்து, மதிய உணவு முடித்து, சாயங்காலக் காப்பி குடித்து இரவுணவு உண்டு உறங்கப் போகும், ஒன்றும் செய்யாமல் இருக்கும் இத்தினங்களிலும் சாப்பாட்டு வேளைகளிலும், மற்ற பான வேளைகளிலும் ஆனதான ஒரு ஒழுங்கு இருக்கவே செய்கிறது. இடையில் டிவியில் இரண்டு தல்லிப்பொளிப் படங்கள், சுடோகு, லூயி லாமர், இணைய உலாவல். ஏதோவொன்றைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதில் இருக்கும் சோர்வு, ஒன்றும் செய்யாமல் இருப்பதிலும் இருக்கிறது என்பது ஆச்சரியமாயிருக்கிறது. உண்மையில் பயமாயிருக்கிறது. ஏனென்றால் இப்படியாகத்தானே வாழ்க்கையைக் கழித்து, நேர உபயோகத்தின் நன்மைகளை உபன்யாசிப்பவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்ற ஆசையில் மண்ணைப் போடுகிறது இந்த இரண்டாவது சோர்வு. முதலிலேயே ஒன்றும் செய்வதில்லை என்று சங்கல்ப்பம் செய்துகொள்வதில் உண்மையான ஓய்வு தினமாக மனம் அதை வரிந்துகொள்கிறது. வங்கியில் வேலை, கரண