- மரபணு மாற்று உயிரினங்கள் (Genetically Modified Organisms – GMO – ம . மா . உ ) பற்றிய என் சிந்தனைகள் , மற்றும் கருத்துகளைப் பதிவு செய்ய விழைகிறேன் . இதைப் பற்றிய நிபுணத்துவக் கருத்துகள் சொல்ல எனக்குத் தகுதியில்லை . ஆனால் எதையும் ( குறிப்பாக உணவுப்பொருட்கள் ) சரியாகப் புரிந்துகொண்டு எனக்கானவற்றைத் தெரிவு செய்யும் நுகர்வோனாக இதைப் பற்றிய சச்சரவுகள் என்னைப் பாதிப்பதுடன் , குழப்பமான மனநிலையிலேயே வைத்திருக்கின்றன . முதலில் பலரைப்போலவே எனக்கும் மரபணு மாற்று உயிரினங்களில் நம்பிக்கையில்லை என்பதைப் பதிவுசெய்யவேண்டும் . இதைச் சொல்லும்போதே ம . மா . உ களின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டிற்கு உதாரணம் ஆகிறேன் - அறிவியல் அறியாதோரின் அடித்தளமற்ற பயத்தின் விளைவே உலகளாவிய ம . மா . உ எதிர்ப்புக்குக் காரணம் என்கிற குற்றச்சாட்டுதான் அது . ஆகவே இதன் எதிர்ப்பாளர்கள் எல்லோருமே அறிவியலுக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரத்தையும் ம . மா . உ வின் ஆதரவாளர்கள் முன்னெடுக்கிறார்க...
கண்ணன் தட்டினது!