கணினியியல் முதுகலைப்படிப்பின் பகுதியாக பாடம் சம்பந்தப்பட்ட திட்டப்பணி (project) செய்யவேண்டி இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) மீத்திறன்கணினி மையத்தின் (SERC) தலைவராக இருந்த (அந்தப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்) பேராசிரியர் ராஜாராமன் அவர்களை நண்பனின் உதவியால் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இளங்கலை கணினியியல் படிப்பில் அவர் எழுதிய புத்தகம் ஒன்றுதான் பாடப்புத்தகமாக இருந்தது. பற்பல ஆய்வு மாணவர்களை முனைவர்களாக்கிய பெருமை வாய்த்தவர். அப்படியொரு மாஜி மாணவரான ஒரு முனைவர் / பேராசிரியரை அழைத்து என்னைக்காட்டி "இவனைச் சேர்த்துக்கொள்" என்றார். ஆசிரியர் கையால் இட்ட பணியைத் தலையால் செய்து முடிக்கும் அந்த மாணவப் பேராசிரியர் என்னை ரிஷிமூலம் நதிமூலம் பார்க்காமல் சேர்த்துக்கொண்டார். ராஜாராமன் மென்மையான மனிதர்; மிகவும் அன்பாகப் பேசினார். என்னால் மறக்கமுடியாத முதல் சந்திப்பு அது. இன்றைக்குப் பிழைப்பு ஓடுவது அவர் போட்ட பிச்சை. இளங்கலை / முதுகலை என்று ஐந்தாண்டுகளில் 'படித்ததை'விட அந்த ஒன்பது மாதங்களில் நிறையக் கற்றுக்கொண்டேன். ஐந்து மாதங்களில் பல்கலைக்கு வேண்டிய வேலை முடிந்...
கண்ணன் தட்டினது!