முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’பருப்’பிசை

திரையிசையை (பரப்பிசை என்று சொல்லமாட்டேன் - இப்படியாகத்தானே அப்பிரகாம் பண்டிதர் வழிவந்தவர்கள் இசைக்கான தமிழ்வார்த்தைகள் மட்டுமல்லாது, தற்காலத்தமிழே அவர்கள் கண்டெத்தியதுதான் என்று பீற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கமாட்டேன்) மரபிசை இலக்கணங்களைக் கொண்டு அளவிடவோ விமர்சிக்கவோ கூடாது என்பது தெளிவானவொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் மரபிசை ரசனையை / அனுபவத்தை புறவயமான புண்ணாக்கு இலக்கணம் சார்ந்தது மட்டுமே என்று குறுக்குவது என்னே மடமை. மரபிசையோ மறுப்பிசையோ (நான் மட்டும் தமிழிசைக் கலைச்சொல்லகராதிப் புகழ் பெறவேண்டாமா?) எதுவானாலும், நுகர்வுத்தன்மையும் அதனாலான உணர்வெழுச்சியும் அந்தரங்கமாகவே நடைபெறுகிறது. ’மச்சானைப்பாத்தீங்களா’ வுக்கு பேருந்தினின்றும் இறங்கவைக்கும் உணர்வெழுச்சிதான் மரபிசை கேட்டுக் கண்ணீர்மல்கவும் வைக்கிறது. இலக்கணம் தெரிந்ததால் மட்டுமே மரபிசையை விமரிசிக்கவோ அனுபவிக்கவோ முடியாது. இன்னும், எந்த இசைவடிவமும் சில அடிப்படை இலக்கண ஒழுங்குகளுக்குள்ளாகவே அமைகிறது - அதனாலேயே இசை இசையாகிறது. ஆக, இசை நுகர்வும் விமர்சனமும் மரபிசை, திரையிசை பேதமின்றி தன்னனுபவம் சார்ந்த வ்யக்திபரமான (அகவயம் என்றெழுதக