என்னில் கள்ளம் குடிகொண்ட பொழுது எதுவெனக் கூறமுடியவில்லை. எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்தது அதுதான். உழலும் சூழலுக்கேற்ப நாளொரு வேடமும், பொழுதொரு ஒப்பனையுமாக நான் வேண்டும்படி பிறருக்கு என்னைக் காட்டுவதில் தேர்ந்துவிட்டேன். உடலை மறைக்கவே ஆடைகள் என்ற கருத்தாக்கம், என் அம்மணத்தைக் குறித்து நானே வெட்கும் அளவிற்கு என்னில் உருவேற்றப் பட்டு விட்டதைப் போலவே, குழந்தையாய், உண்மையாய் நான் இருந்தநிலை போய், என் உண்மையான தன்மை பற்றி நான் வெட்கும் அளவிற்கு உடல் மறைக்கும் ஆடைகளாய் என்னை மறைக்கும் இந்த ஒப்பனைகள். சில அரிதான பொழுதுகளில் உன் முன்னால் இந்த ஒப்பனைகளை முற்றிலுமாகக் கழற்றி விடுகிறேன். அந்நேரங்களில் கள்ளம் உடனே என்னை மீட்கிறது. தன்வயமிழப்பதை என் பலவீனமாகவும், அதே சமயம் நிதானமிழக்காததை உன் பலமாகவும் அது சித்தரிக்கிறது. மேலும் உன் முன்னால் என்னை இழந்தது மூலம் என்னை நானே வலிந்து முட்டாளாக்கிக் கொண்டது போலவும், நான் அம்மணமானது போலவும் அது காட்டுகிறது. இது என் தன்மானப் பிரச்சனை ஆகிறது. ஒப்பனைகளை கழற்றிய நான் அவசரமாக அவற்றை மீண்டும் அணியத் துவங்குகிறேன். நீ என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்கிறேன். உன்ம...
கண்ணன் தட்டினது!