முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐயோ பாலு!

 நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அடுத்துப் பழகிய குரல். ஒரு வேளை கருவிலிருந்தே கேட்கத்தொடங்கியிருக்கலாம் அவன் குரலை. எப்போதும் உடன் இருக்கும் என்று நம்பி, பெரிதாகப் பொருட்படுதப்படாத ஒன்று இல்லாதாகும் நிலை வந்தால் தான் அதன் அருமையும் தாக்கமும் புரிகிறது.  அவன் அண்மையில் பாடியதைக் கேட்டதில்லை. ஆனால் அவன் இன்னும் எங்கோ உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருந்ததே  மனதிற்கு அமைதியைத் தந்தது. குரூரமான 2020 அவனையும்  விழுங்கக் காத்திருந்தது என்பது மனதை இதுவரை அறியாத உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. நிழலாய் உடனிருக்கும் நெருங்கிய நட்பை இழக்கவிருந்தது போல் மனம் தவித்துவிட்டது. இந்தத் தவிப்பு புதியது - இப்படி உணர்வேன் என்று நான் எதிர்பாராதது.  எல்லோரும் ஒருநாள் போகவேண்டியவர்கள் தான் என்று தெரிந்திருந்தாலும் இவனும் இறப்பான் என்ற எண்ணமே இதுவரை தலைக்காட்டாத்தது ஏனென்று புரியவில்லை.  இசைக்குள் என்னை இழுத்த முதற்குரல் இதுவாகத்தான் இருக்கவேண்டும். 'சம்சாரம் என்பது வீணை' பாடலைப்  பல வீடுகள் இருந்த 'காம்பவுண்டில்' 6 வயதுச் சிறுவனாக நான் பாடித்திரிந்ததை அக்காள் இன்னும் சொல்லிச் சிரிப்பாள்.  சொல்லவொண்ணா இ