முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நாககாந்தாரி!

என்னவொரு மயக்கும் பாடல்! முதலில் கேட்கும்போது, சிலர் ஒரு "எஃபெக்ட்டு"க்காகச் செய்வது போல, பாட்டை அனுபல்லவியிலிருந்து ஆரம்பிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஆனால், இது நிஜமாகவே பல்லவிதான்! அந்த 'கான்-தா-ரீ-ரா-கனுதே' என்ற வார்த்தைகளில் உள்ள நெடில் எழுத்துக்களின் அழுத்தம், ஒரு அழகான இடைவெளியைக் கொடுத்து, ஏற்கனவே மெதுவாக ஆரம்பிக்கும் அந்த நடையை இன்னும் நிதானமாக்குகிறது. முதல் சுற்றில் வரும் "ராகனுதே" என்ற இறுதி ஸ்வரம் எவ்வளவு மயக்கக்கூடியதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, உங்களை அப்படியே திக்குமுக்காடச் செய்யும் ஒரு தருணம் இரண்டாவது சுற்றில் காத்திருக்கிறது. அதில் அந்த இறுதி 'தே' வை இழுத்து மத்யமத்தில் நிறுத்தும்போது மனது உருகி ஒன்றுமில்லாமல் ஆகிறது! இதன் பல்லவி (தொடக்கம்) நாம் கர்நாடக இசையில் அதிகம் கேட்காத ஒரு வடிவத்தை எடுக்கிறது என்பது மட்டுமல்ல. அதன் எல்லா வரிகளும் ஒரு மேல் ஸ்தாயி ரிஷபத்தில்தான் போய் முடிகின்றன. அனுபல்லவியும் கீழ் ஸ்தாயியில் ஆரம்பித்து (பாரம்பரியமாக இது மேலே ஆரம்பிக்கும்), ஒரு மத்திம காலப் பிரயோகத்தையும் உள்ளடக...

அன்பின் வழியது உயிர்நிலை

Photo by Magesh Babu (used with consent - https://flickr.com/mageshb) இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் சிலர் ஆய்வாளர்களாக மாறியது நாமறிந்ததே. தியடோர் பாஸ்கரன் இந்திய அஞ்சல் பணியில் இருந்தபோதே திரைப்படங்களில் ஆர்வம் கொண்டு, தமிழ்த் திரைப்பட வரலாற்றை ஆய்வு செய்து முக்கியமான நூல்களை எழுதியவர். அதேபோல மதுரையில் தமிழிலக்கியம் பயின்ற (சங்க இலக்கிய + தொல்பொருள் ஆய்வு — கலம் செய் கோவே — இவர் ஆராய்ச்சி மிகவும் ஆர்வமளிக்கக்கூடியது) பாலகிருஷ்ணன் மதுரையிலிருந்து டில்லி கிளம்பும்போது திருவாசகமோ எதுவோ ஒரு தமிழ்ப்புத்தகத்தை மட்டுமே தமிழ் நினைவாக எடுத்துச் சென்றதாகவும், பின்னாளில் சிந்து சமவெளி மற்றும் தமிழ்ச் சங்க இலக்கியம் குறித்த ஆய்வுக்கு அதுவே தமிழார்வத்தூண்டுதலாக அமைந்தது என்பதாகவும் சொல்லியிருந்தார். கொஞ்சம் சிரமப்பட்டு இ ஆ ப தேறியிருந்தால் நாமும் இந்தமாதிரி ஏதேனும் செய்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தது (“அவர்கள் அவ்வளவு பிழைப்புக்கெட்டு இருந்தார்களா?”) இதையெல்லாம் இப்போது சொல்லக் காரணம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்ப்பு இலக்கியம் அம்மொழிகளுக்கு, குறிப்பாக அவற்றின் தற்காலப் பயன்பாட்டிற்கு...

எதையும் உடுக்காமல்/ பகல் வெளிச்சத்தை ஊடுருவி/அவள் இறங்குகிறாள்

சித்திரக்கலை குறித்த முறையான அறிமுகம் எனக்கில்லை. சில ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவற்றைப் பற்றிய கவிதைகள் எனக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. மேற்கத்திய (சித்திரக்) கலையில், கருத்தியல் ரீதியாகப் பல பாய்சல்கள் நிகழ்ந்துள்ளன என்று புரிந்துகொண்டேன். மற்ற கலைவடிவங்களிலும், குறிப்பாகக் கவிதையில், இவற்றுக்கு இணையான மொழி மற்றும் வடிவப் பாய்ச்சல்கள் நிகழ்ந்ததாக என் சொற்ப வாசிப்பின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரம்ப காலத்து இமேஜிஸ்டு கவிதைகள் சிலவற்றைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது. அதிலும் எஸ்ரா பவுண்டின் In a Station of the Metro இரண்டே வரிகளில் ஒரு அசையும் காணொளியையே காட்டுவது மொழியின் இத்தகைய பாய்ச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் சில பிரபலமான ஓவியங்களை ஒட்டி (அவற்றைப் பற்றி) எழுதப்பட்ட கவிதைகளையும் படித்தேன். காரவஜியோவின் The Calling of Saint Matthew என்ற ஓவியத்தை James Lasdun எழுதிய The Calling of the Apostle Matthew  கவிதை   மூலம் தெரிந்துகொண்டேன். கவிதையின் பொருள் மாத்தியூவின் ஆன்மிகப் பயணத்தைப் பற்றியதா க இருந்தாலும், அது தொடங்குவது இந்த ஓவியத்தில் உறைந்திருக்கும் ‘ஆட்கொள்...

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

தோற்றோர், நேசிப்போர், வெல்வோர்

  எவ்வளவு நல்ல உலகம் இது! இங்கே இறப்பது எவ்வளவு இனிமையானது! வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்ற (ஒரு) கவிஞன் மரணத்தில் வென்றான். அவன் போகிறபோக்கில் சொல்லிப்போனது இது — என்று ஒரு மலையாள மேடைப் பேச்சில் கேட்டேன். பேச்சு, தோற்றவர்களைப் பற்றியதானது. அதாவது, வெற்றி/தோல்வி என்று நாம் வகுத்திருக்கும் விதத்திலே ‘தோற்றவர்கள்’. பேச்சாளர் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழாவில் இப்படிப் பேசினார். அவர் பேச்சின் சாராம்சம், வெளிச்சத்தின் மறுபுறமும் நாம் நோக்க வேண்டும் என்பதே. John Ruskin-ன் “Unto the last” என்ற நீண்ட கட்டுரையையே காந்தி சர்வோதயம் என்று மொழிபெயர்த்தார். “மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகிற்கு நல்க ஏதேனும் ஒரு நன்மை இருக்கிறது” என்பதும் உபபாடம். இன்று சர்வோதயம் பற்றித் தெரிந்துகொண்டேன்…

மழித்தலும் நீட்டலும் (வேறு)

மரியான் மூர் (Marianne Moore) தமது poetry என்ற கவிதையை ஐம்பது ஆண்டுகளூடாக எழுபது முறை திருத்தினார் என்றறிகிறோம். எட்டாண்டுகளாக மனதில் இருக்கும் இது, (கவிதையென்றே வீரத்துடன் பறைசாற்றுகிறேன்) இந்த வடிவில், இப்போதைக்கு நிறைவாய் அமைந்திருக்கிறது. படம் தந்து உதவியது நண்பன்  மகேஷ் உடையாத் தளைகள் ஆஸ்பத் திரியில் அம்மா கிடப்பு சுருண்டொரு சாணித் துணியது போலே ஒன்றாத்   தளைகள் அறுவது   மில்லை தேய்த்துக் குளித்தால் அழுக்கது போகும் ஒழுக்கம் விழுப்பம் கற்க கசடற மரபுக் கவிதை அரபுக் குதிரை ரோகம் பயங்கரம் தேகம் இதுசுமை

மொழிமாற்று இலக்கியங்களும் உரைநடையின் பரிணாமமும்: தமிழுக்கு எங்கே வாய்ப்பு நழுவியது?

Clicked by Magesh (https://www.flickr.com/photos/mageshb/) சமீபத்தில் நான் பார்த்த/கேட்ட  ஒரு நேர்காணலில் மலையாள எழுத்தாளர் ஒருவர் சொன்னார்:  "என்னை மிகவும் பாதித்த புத்தகம் ரோமெயின் ரோலாந்து எழுதிய 'ஜீன் கிறிஸ்டோப்' (Jean-Christophe) என்ற நாவல்தான்."  இதை அவர் மலையாளத்திலேயே படித்திருக்கிறார். டி.சி. புக்ஸ் (DC Books) இதனைப் பதிப்பித்திருக்கிறது. மலையாளிகள் சொல்லும் உலக இலக்கியங்களை எல்லாம் அவர்கள் மலையாளத்திலேயே படித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வயிறு எரிகிறது. இந்த ஆதங்கத்திலிருந்தே மொழி குறித்த சில வரலாற்றுத் தேடல்கள் எனக்குள் தொடங்கின. குறிப்பாக, நவீன உரைநடை உருவாக்கத்தில் மலையாளத்திற்கும் தமிழுக்குமான பயணங்கள் எப்படி வெவ்வேறாக அமைந்தன என்பது பெரும் ஆர்வமூட்டும் ஒரு பேசுபொருளாக இருக்கிறது. மேற்கண்ட தலைப்பில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடவும் விருப்பம் இருக்கிறது.  அதற்கான முதற்படியாக, முதல் 'படி'யாக இப்படி என் எண்ணங்களைக் கோர்த்துக்கொள்கிறேன். இதை ஒரு முறையான (formal)  மொழியில் எழுதிப் பார்க்கவும் ஆசை - அப்படியே முயன்றிருக்கிறேன்.  *** மலையாள...

நாயிற் கடையாய்...

  ச முகமதலியின் நெருப்புக்குழியில் குருவி  (இயற்கையியல் சார்ந்த இலக்கிய விமரிசனக் கட்டுரைகள் - அங்குசம் வெளியீடு, டிசம்பர் 2012 )  என்ற நூலைப் படித்தேன். பழந்தமிழிலக்கியம் தொட்டுச் சமகாலப் படைப்புகள் வரையில் காட்டுயிர்கள் பற்றிய அறிவியல் பார்வையற்று இருப்பதையும் செய்தி ஊடகங்கள்  காட்டுயிர் பற்றிய செய்திகள் மற்றும் கட்டுரைகளில் காட்டும் அலட்சியம் பற்றியும் எழுதியிருக்கிறார். எளிய உயிர்களாகப் பார்க்கப்படும் பன்றி, கழுதை, நாய் என்பன போன்றவற்றை முன்வைத்து மனிதரை ஏசுவது குறித்துத் தன் ஆட்சேபங்களை, எதிர்ப்புகளைக் கடினமான, உறுதியான குரலில் பதிவு செய்கிறார். எளிய மனிதர் முதல் அரசியல் பிரமுகர்கள், திருவருக்கள், என்று யாரையும் விட்டுவைக்காமல் சேர்த்துச் சாடியிருக்கிறார்.  நாம் இயல்பாகப் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் மிருகங்கள் குறித்த சொலவடைகள் பொதுப்புத்தியில் மிருகங்கள் குறித்த தவறான புரிதல்களுக்கு வழிவகுப்பதாகச் சொல்லும் அவர், இம்மாதிரியானவற்றைத் தேடிக்கண்டுபிடித்து அவற்றிற்கான சரியான அறிவியல் தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். இப்புத்தகத்தில் (பன்னிரண்டு ஆண்டுகளுக்...

வைக்கம் முகம்மது பஷீரும் மீசை மாமாவும்...

  மேட்டுப்பாளையம் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்த ’ஜீப்’சட்டென்று நிதானமிழந்து, ஒரு குலுங்கல் குலுங்கி, சறுக்கி, ஒருவழியாக சாலையோரத்தில் நின்றது - பங்க்சர். மாமாவின் சாம்பல் சொம்புக்குள்ளே பத்திரமாகவே இருந்தது. மின்சார உலையில் மாமாவை அன்றைக்குக் காலையில்தான் எரியூட்டியது. ஒருமணிநேரத்தில் ஒருபிடி சாம்பல் - மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அதைக்கலக்கவே இந்தப் பயணம். ’நிமித்தங்களை’ நம்புகிறவர் சித்தப்பா - “இது மாதிரி சமயங்களில் இப்படி ஏதாவது நிமித்தங்கள் காட்டும்” என்றார். மாற்றுச்சக்கரத்தைப் பொருத்தி எல்லோரும் இளநீர் குடித்தோம். திக்காலுக்கொன்றாய் சிதறிக்கிடக்கும் மாமாவின் அக்காள் / தங்கைகளின் மக்கள் நாங்கள். மாமா பிள்ளைகளுடன் சேர்த்தால் ஏறக்குறைய 22 பேர் கொண்ட இரண்டு கிரிக்கெட் அணியினர் தேறுவோம். மாமா யாரையும் விட்டுக்கொடுக்காதவர். எல்லோரும் எல்லாருடனும் எப்போதும் தொடர்பிலிருக்கவேண்டும் என்று விழைபவர். எனக்கும் அந்த விழைவு உண்டு. இந்த 22 பேரும் ஒன்றாய்க் கூடி மகிழவேண்டும் என்று அடிக்கடி திட்டமிடுதலும், எல்லோரும் இயைந்து ஒன்றாய்ச்சேர சமயம் கைகூடுவதில்லையாதலால் அதைக் கைவிடுவதுமாய் இருப்போம். இ...

புனைவு

Photo by Magesh Babu கடைந்த மோரில் வெண்ணெய்யைக்  'கட்டிப்'-       பிடிப்பது போல  யோசித்துச் சேர்த்தது  டம்பளர் பாலில்  கருப்புப் பூச்சியாய்ப்   பிடிக்கப் பிடிக்க  நழுவும்,  கண்ணை  மூடிமூடித் திறந்தாலும்  கிடைப்பதில்லை -  கொஞ்ச நேரம்  அசிரத்தை-பாவனை        செய்தும்,  பிடிக்கப் போனால்  மறுபடி ஓட்டம் உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது  உள்ளபடியே  மாயக்கண்ணாடி மட்டுந்தான் மற்றபடி, இதையும் சேர்த்து  எல்லாம் பாசாங்கு!

பிரதியாகிய நானும், வாசகியாகிய நீயும்

  சிட் கார்மனின் "It isn't for want" என்ற கவிதை  படித்ததும் மொழிபெயர்க்கத் தூண்டியது.  ஆங்கிலக்கவிதை இங்கே . Photo by Magesh Babu என் மொழிபெயர்ப்பு: எதையும் பேசவோ  உன்னிடம் சொல்லவோ   உனக்கு அறியத்தரவோ  வேண்டும் என்பதனாலல்ல - போக முடியாதபடி    உன்னை நிறுத்தி வைக்கவே -   இங்கு நான் நானாகிறேன்  நீ இருக்கும் வரை - நீ இருக்கும் வரை --- கவியின் / கவிதையின் (இப்படியான) வாசிப்பவருடனான நேரடி உரையாடல் அரிதானது.  ஆங்கிலப் பிரதியில் பலமுறை தோன்றும்  you   தமிழின் வேற்றுமை உருபுகளால் வெவ்வேறு வடிவங்களைக் கொள்கின்றது. ஆனால் அது அவ்வாறு வருவது ஒரு மந்திர உச்சாடனை போல கவிதையின் ஒலியமைப்புக்கு அழகு சேர்க்கிறது. இவ்வளவு ' நீ ' இருக்குமிடத்தில் ' நான் ' ஆங்கிலத்தில் மறைந்தேயிருக்கிறது. தமிழில் 'நான்' இல்லாமல் மொழிபெயர்க்க முடியுமானாலும் அந்த வரி தட்டையாகவே அமையும்.  நான் இங்கே முக்கியமல்ல - நீயே இங்கு நிறைந்திருக்கிறாய். உன்னைச் சுற்றியே எல்லா இயக்கமும்.  'நான்' பிரதி / கவி என்பது ஒரு வாசிப்பு. ஆனால் எவ்வளவு சாத்தியங்களை உள...

பொருளுள் சிக்கிய மொழியை விடுவித்தல்

என் மகள்களுடன் ஒருநாள் விளையாட்டாக (ஆங்கிலத்தில்) பெயரடைகளுக்கும் வினையடைகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மீனா இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரியவில்லை என்றதால் அந்தப்பேச்சு வந்தது. நான் சொன்னேன்: “வினையடைகள் வினைச்சொல்லை விளக்குவன. ஆனால், வினைச்சொற்கள் என்பன வினைகளின் பெயரைக்குறிப்பதால் அவைகளும் பெயர்ச்சொற்களே. அப்படிப்பார்த்தால், வினைச்சொல் என்றொன்று இல்லவேயில்லை, எல்லாமே பெயர்ச்சொற்கள்தாம். அதன்படி, வினையடைகள் எல்லாம் பெயரடைகளே. இன்னும், பெயர்ச்சொல்லை விவரிக்கும் பெயரடைகளும், அந்த விவரிப்பின் பெயரேயாதலால் அவைகளும் பெயர்ச்சொற்களே! அப்படியாக, மொழி பெயர்சொற்களால் மட்டுமேயானது.” இருவரும் என்மேல் (இன்னும்) கொலைவெறியில் இருக்கிறார்கள். ஆனால் மொழி எப்போதுமே எல்லாவற்றிற்கும் பெயர்சூட்டுவதையே செய்கின்றது. மரம், காற்று, பூக்கள், என்றெழுதுவதெல்லாம் அந்தப் பொருட்களை நினைவுபடுத்தினாலும் மரம் என்று நான் இங்கே எழுதியிருப்பது மரமாகாது. சொற்கள் வெறும் குறியீடுகளே. இல்லாத பொருட்களைச் சொல்லால் இட்டுநிறைப்பது மொழி. என். எஸ். கிருஷ்ணனின், சொற்களின் முதலெழுத்தை மாற்றிப்போட்டுப் பேச...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...