முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு பட்டியல் / அற்ப ஆசை...

படித்ததில் பிடித்த 100 புத்தகங்களின் பட்டியல் தந்துள்ளனர் எழுத்தாளர்கள் பாரா, மற்றும் ராமகிருஷ்ணன். நான் தமிழில் 100 புத்தகங்கள் படித்திருக்கிறேனா என்பதே சந்தேகம்! ஆனாலும், இந்தப் பட்டியலிடுதல் கொஞ்சம் சுவாரஸியமான விஷயமாக இருப்பதனால், நானும்... (இவர்களின் பட்டியலில், நான் படித்த சிலவும் இருப்பதைப் பார்த்து பெருமை தாளவில்லை!)

(இந்தப் பட்டியலின் வரிசை, எனக்கு ஞாபகம் வரும் முறையிலேயே இருக்கிறது)

1. பாரதியார் கதைகள்
2. மோக முள் - தி ஜா
3. அம்மா வந்தாள் - தி ஜா
4. மரப்பசு - தி ஜா
5. தி. ஜா சிறுகதைத் தொகுப்பு - பாகம் 1
6. அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - முழுத்தொகுப்பு
7. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - (செ. யோகனாதன் - தொ. ஆ)
8. ஆ. மாதவன் சிறுகதைகள் - முழுத் தொகுப்பு
9. ஒரு மனுஷி - சிறுகதைகள் - பிரபஞ்சன்
10. மனிதர்கள் மத்தியில் - சிறுகதைகள் - பிரபஞ்சன்
11. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
12. வானம் வசப்படும் - பிரபஞ்சன்
13. வேங்கையின் மைந்தன் - அகிலன்
14. பொன்னியின் செல்வன் - கல்கி
15. வீணை பவானி - சிறுகதைகள் -கல்கி
16. முதல் ஆட்டம் - இரா.முருகன்
17. வாடிவாசல் - சி சு செல்லப்பா
18. புதுமைப் பித்தன் சிறுததைகள் - முழுத் தொகுப்பு
19. கண்ணில் தெரியுது வானம் - பத்மனாப ஐய்யர் (தொ. ஆ)
20. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
21. பச்சைக் கனவு - சிறுகதைகள் - லா.ச.ரா
22. கணையாழி கதைகள் - தொகுப்பு
23. தீபம் கதைகள் - தொகுப்பு
24. மல்லிகை சிறுகதைகள் - பாகங்கள் 1, 2 செங்கை ஆழியான் (தொ. ஆ)
25. கணையாழியின் கடைசி பக்கம் - சுஜாதா
26. பேய்க்கொட்டு - சிறுகதைகள் -நாஞ்சில் நாடன்
27. அசோகமித்திரன் கதைகள்
28. அங்குத்தாய் - நாவல் - சி.ஆர்.ரவீந்திரன்
29. இந்திரா பார்த்தசாரதி கதைகள்
30. யுக சந்தி - சிறுகதைகள் - ஜெயகாந்தன்
31. காட்டில் ஒரு மான் - அம்பை
32. கலைக்கமுடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்
33. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பு - சாகித்திய அக்கதெமி
34. மத்யமர் - சிறுகதைகள் - சுஜாதா

ஒரு ஐம்பதாவது தேறும் என்று எதிர்பார்த்தேன் :-( மேற்சொன்ன இரண்டு பட்டியல்களையும் இறக்கிக் கொண்டுள்ளேன். இனிமேலாவது நல்லவற்றைத் தேடிப் படிக்கலாமென்று...

கருத்துகள்

Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் உங்களைப் போல் ஒரு லிஸ்ட் போட வேண்டும் என்று நினைத்து, கீ-போர்ட்டில் விரல் வைத்தேன். இருபது கூட வரவில்லை. But better late than never என்று சொல்லி என்னை தேற்றிக்கொண்டேன்.
சத்யராஜ்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா எழுதறிங்க கண்ணன். சரளமான மொழி நடை.

- சத்யராஜ்குமார்
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சந்தோஷ்: நானும் அப்படித்தான் என்னைத் தேற்றிக்கொண்டுள்ளேன்.

சத்தியராஜ்குமார்: உங்கள் ஊக்கத்திற்கு நன்றி!
Chandravathanaa இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்
நீங்கள் பட்டியல் போட்டதைப் பார்த்தபின்
எனக்கும் பட்டியல் போட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
முன்னர் அதற்கென்றெ ஒரு கொப்பி வைத்து
நான் பார்த்த படங்கள், வாசித்த கதைகள் என்றெல்லாம்
எழுதி வைத்திருந்தேன்.
புலம் பெயர்ந்த போது தொலைந்தவைகளில் அந்தக் கொப்பியும் ஒன்று.

நினைவில் உள்ளைவகைளையாவது தொகுக்காலம் என்ற எண்ணம்
உங்கள் பதிலிலிருந்து கிடைத்துள்ளது.

நட்புடன்
சந்திரவதனா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் கவிதை