உடையாத் தளைகள்
![]() |
| படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் |
உடலிற் பிணைத்த
துயிரின் தளையே
வாழ்விற் பிணைத்தது
உறவுத் தளையே
ஒழுங்கினிற் கட்டுதும்
மொழியின் தளையை
மொழியினிற் கட்டுவம்
பொருளாம் தளையும்
மனத்திற் பிணைந்தது
ஆசைத் தளையாம்
ஒன்றாத் தளைகள்
அறுவது மில்லை
இதுமோர் இயற்சீர்
வெண்டளைக் கட்டே
மாமுன் வரும்நிரை
விளம்முன் வரும்நேர்

கருத்துகள்