முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு நேரம் தூங்க முடிவதில்லையே இங்கே! 10 நிமிடத்தில் முதுகு வலிக்கும். ஆடிக்கொண்டே போய் முகம் கழுவி ஒரு டீ அடித்தால் மத்தியானம் ஏதாவது பாடாவதி மீட்டிங்கிற்கு நேரம் சரியாயிருக்கும்.

சரி, அது என்ன ட்ரீம்ஸ்?

இப்படியாக தமிழ்மணம் மேய்கிறேனா?

- பத்ரி க்ரிக் இன்ஃபொ மற்றும் கிழக்கு பதிப்பகம் நடத்துவதில் இருந்து இன்ஸ்பிரேஷன் வந்து, நான் எங்கள் ஊரில் திராட்சை தோட்டம் வைத்து அப்படியே படிப்படியாக வைன் தொழிற்சாலை ஆரம்பித்து விட்டேன். இதற்கு சர்வதேச அளவில் கிராக்கி.சாயங்காலம் பண்ணைவீட்டில் தமிழ்மணம் பார்ப்பேன்.

- டிசே தமிழன் மாதிரி நானும் 'வடிவான' தமிழில் கட்டுரை, கவிதை எல்லாம் பின்னுகிறேன். வலைப்பதிவில் பின்னூட்டம் தாளவில்லை. கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கட்டுரைத் தொகுப்பு வெளிவர உள்ளது. அதன் முன்னுரையில் ஒரு பிரபலம் நான் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது பற்றி விவரிக்கிறார். மேலும் ஜெர்மனி டாக்டர்.நா.கண்ணன் அவர்களுடன் என்னை வாசகர்கள் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது.

- ரோசாவசந்துடன் நான் 'சமகாலச் செவ்விலக்கியமும், மார்க்சிஸ விழுமியங்களும் தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகள், அது சார்ந்த உளவியல்' என்று மலேசியா ஜெண்டிங்கில் உலகத் தமிழ் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வாசிக்கிறேன்.

- அருண் வைத்தியநாதன், மாண்ட்ரீசர், நாராயணனுடன் சேர்ந்து அகிரொ குருசேவா மற்றும் இங்மார் பெர்க்மான் - இவர்களின் திரையியக்க உத்திகளில் வேறுபாடுகள் பற்றிய ஆவணப் படம் தயாரிக்கிறேன்.

- காசி என் திராட்சை தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே கோவை வந்து செட்டில் ஆன பிறகு, தாம் அத்திப்பாளையத்தில் பார்த்து வைத்துள்ள 10 ஏக்கர் நிலத்தில், தென்னை அல்லாது வேறென்ன பயிரிடலாம் என்று ஆலோசனை கேட்கிறார்.

- பாலாஜி பல்லவி சரணம் பதிவு போட்டவுடனே பதில்கள் எல்லாம் சொல்லிவிடுகிறேன் (மற்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமலே), தங்கமணியின் ஆழமான, அழகான கற்பனை மிகுந்த எழுத்தும், அருளின் நேர்த்தியான, சிக்கனமான சொல்லாடலும் எனக்கும் கைவந்துவிடுகிறது - பாராட்டுக்கள் குவிகின்றன.

மேலும் ச்ஜ f ந்; ட்ப் ந்;f. ...

இந்தப் பக்கத்து இருக்கை ஆசாமியுடன் ஒருநாள் நான் குடுமிபிடி சண்டை போடப் போகிறேன். எழுந்து போகும்போது ஒரு முறையேனும் என் இருக்கையை இடிக்காமல் நடப்பதேயில்லை.

கருத்துகள்

இளங்கோ-டிசே இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், நீங்களாவது சின்சியராய், மதியவுணக்குப்பிறகுதான் பகற்கனவில் அமிழ்கின்றீர்கள். எனக்கு வேலை செய்கின்ற கண்டகிண்ட நேரத்திலெல்லாம் கனவு வந்துவிடுகின்றது. I have a dream என்று மாட்டீன் லூதர் கிங் மாதிரி உருப்படியான கனவுகள் வந்தால் கூட பரவாயில்லை. எனது கனவுகள் வேஸ்டானவை. அதுவும் பெண்கள் அப்படியிப்படி நடந்துபோனால், கனவுகள் நொடிகளைக் கடந்து நிமிடங்களைத்தாண்டும்.
...
உங்கள் பதிவை வாசிக்கும்போது, நான் சீனாவில் பிறக்கவில்லையே என்று சரியாகக் கவலையாக இருக்கிறது. கொடுத்து வைத்த சனங்கள். ஆகக்குறைந்தது ஆறுமாதங்களாவது நீங்கள் அந்தச் சொர்க்கத்தை அனுபவித்திருக்கின்றீர்கள் என்பதை வாசிக்கும்போது பொறாமையாய் இருக்கிறது. மற்றது, //இந்தப் பக்கத்து இருக்கை ஆசாமியுடன் ஒருநாள் நான் குடுமிபிடி சண்டை போடப் போகிறேன். எழுந்து போகும்போது ஒரு முறையேனும் என் இருக்கையை இடிக்காமல் நடப்பதேயில்லை. // சண்டையெல்லாம் பிடிகாதீர்கள். பக்கத்து இருக்கை பெண்ணாய் இருக்குமிடமாய் வேலை செய்யுமிடத்தை மாற்றிவிட்டால், problem solved.
கறுப்பி இவ்வாறு கூறியுள்ளார்…
ம்.. ரொம்ப சுத்தம் சாமி.. பொண்ணுகள் பக்கம் உங்க பார்வைக் கொஞ்சம் எறியுறதுதானே.. நல்ல கலர் கனவுகள் வரும்
ஜெ. ராம்கி இவ்வாறு கூறியுள்ளார்…
Interesting...!
Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம்ம்ம்....நடக்கட்டும் நடக்கட்டும் !!!
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நவன், டிசே, கறுப்பி,ராம்கி மற்றும் சந்தோஷ்: ரொம்ப நாளைக்கப்புறம் என் பதிவிற்கு நிறையப் பின்னூட்டங்கள் - மிக்க நன்றி - I'm thrilled...
டிசே:
மதிய உணவுக்குப் பின்னால் தான் நான் கனவு காணுவேன் என்று யார் சொன்னது? மதியம் மட்டும் அத்தியாயம் அத்தியாயமாக வரும் :-)
//சண்டையெல்லாம் பிடிகாதீர்கள். பக்கத்து இருக்கை பெண்ணாய் இருக்குமிடமாய் வேலை செய்யுமிடத்தை மாற்றிவிட்டால், problem solved//
ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். ஒவ்வொரு முறை எழுந்து போகும் போதும் அவர் தூரமாக விலகிச் சென்றுவிடுவார்.

கறுப்பி:
//பொண்ணுகள் பக்கம் உங்க பார்வைக் கொஞ்சம் எறியுறதுதானே.. நல்ல கலர் கனவுகள் வரும் //
இதற்கு நான் அப்பவியாக ஏதாவது பதில் சொல்லி மாட்டிக்கொள்வேனென்று நினைக்கிறீங்கள். மாட்டேனே :-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Really really nice to have you back in blogdom. This post had me in splits. It's criminal to have you not write. Btw, hope your hands are doing much better. Are you able to type or are you still pecking? Please do keep your posts coming.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Saumya,

Thanks a lot! (Honestly, am a little overwhelmed) Have cut down on typing, improved my posture consciously and been doing some yoga too (though erratic in schedule)
Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
மறுபடியும் ப்ளாகர் ஸ்வாஹா பண்ணிடுச்சு. :))

Anyway my comments for the next post :

கண்ணன் நல்ல பதிவு.

இப்புத்தகத்தைப் படிக்கும் ஆவலையும், சினிமாவினைப் பார்க்கும் ஆவலையும் தூண்டியுள்ளீர்கள். நன்றி.

Ian wright உங்களுக்குப் பிடிக்குமா ??? எனக்கு பிடித்தவர் மெகான் மெக்கார்மிக் ;)
Chandravathanaa இவ்வாறு கூறியுள்ளார்…
சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம்.

எங்கள் நாடுகளிலும் இம்முறை வந்தால் நல்லாயிருக்கும்.
Sud Gopal இவ்வாறு கூறியுள்ளார்…
oh.Unga office leela palace-la thaana irukku...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...