முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு வாழ்க்கைக் குறிப்பு

திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தொடங்கி முன்னிரவு வரை அலுவலக அர்ப்பணிப்பு. காபி டம்ப்ளரைக் கழுவாததில் இருந்து, அம்மாவை 'செக்கப்'புக்கு கூட்டிப்போகாதது வரைக்கும் இது தான் சாக்கு. வேறெதற்கும் நேரமின்றி வேறெதிலும் நாட்டமுமின்றி உழலும் பொழுதுகள் .இன்று பேசுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும் சம்பாஷணைகளை பின்னொருநாள் நடத்த நேரும்போது உறுப்பினர் குறையலாம். அன்பை, கவலையை, உரிமையை, பரிவை வீட்டில் இப்போது நிகழும் சின்ன ஊடாடல்களுக்குள் புகுத்துவது கடினம்; சொல்லாதவை தேங்கி கனக்கும் மனம். எல்லாம் இருந்தமைந்த பின்பு வாழ்க்கையை விரும்பிய படி வாழவென்று, அலை ஓய்ந்தபின் கடலிலே குளிக்கும் ஆசை. மறந்துவிட்ட நண்பனின் திருமண அழைப்புக்கு மன்னிப்பு மடலேனும் எழுதலாமே என்று தோன்றும் போது வருகிறது அவன் மகளின் முதல் பிறந்தநாளுக்கான அழைப்பு. இதுவும், தாடியில் தென்படும் நரைகளுமே ஒன்றும் சாதிக்காத கால ஓட்டத்தின் அத்தாட்சிகள்.

தினமும் சுவர்க்கோழி கத்தும் வரை டிவி முன் குத்த வைத்து, 'சனி, ஞாயிறு ரெண்டு நாள் தான் கிடைக்குது தூங்க - பாவம்' என்று தூங்கிய நேரம் போக வாரயிறுதி வாரயிறுயாய்த் தீரும் வாழ்க்கை.

கருத்துகள்

வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
ஹ்ம்ம்..
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Sudarshan,

நன்றி !
Chandravathanaa இவ்வாறு கூறியுள்ளார்…
யதார்த்தமான பதிவு கண்ணன்.
இந்தக் கிழமை இது செய்ய வேண்டும்... அது செய்ய வேண்டும்.... என்று நினைத்திருக்க
அடுத்த திங்கள் வந்து விடும். இந்த அவசரத்தில் எல்லாமே நீங்கள் சொல்வது போலத்தான் என்னிடமிருந்து தப்பி ஓடுகின்றன.
Ramya Nageswaran இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு..
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சந்திரவதனா,
ரம்யா,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தோற்றோர், நேசிப்போர், வெல்வோர்

  எவ்வளவு நல்ல உலகம் இது! இங்கே இறப்பது எவ்வளவு இனிமையானது! வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்ற (ஒரு) கவிஞன் மரணத்தில் வென்றான். அவன் போகிறபோக்கில் சொல்லிப்போனது இது — என்று ஒரு மலையாள மேடைப் பேச்சில் கேட்டேன். பேச்சு, தோற்றவர்களைப் பற்றியதானது. அதாவது, வெற்றி/தோல்வி என்று நாம் வகுத்திருக்கும் விதத்திலே ‘தோற்றவர்கள்’. பேச்சாளர் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழாவில் இப்படிப் பேசினார். அவர் பேச்சின் சாராம்சம், வெளிச்சத்தின் மறுபுறமும் நாம் நோக்க வேண்டும் என்பதே. John Ruskin-ன் “Unto the last” என்ற நீண்ட கட்டுரையையே காந்தி சர்வோதயம் என்று மொழிபெயர்த்தார். “மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகிற்கு நல்க ஏதேனும் ஒரு நன்மை இருக்கிறது” என்பதும் உபபாடம். இன்று சர்வோதயம் பற்றித் தெரிந்துகொண்டேன்…

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...