முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

துணைக்கண்டத்தின் கவாஸ்கர்கள்

தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனை செய்ய என்ன தகுதி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. தெளிவான ஆங்கில உச்சரிப்பு, ஆட்டத்தின் நெளிவு-சுளிவுகள் தெரிந்திருத்தல், மற்றும் ஆட்டத்தைப் பற்றிய நடுநிலையான கருத்தை முன்வைக்கும் கண்ணியம் ஆகியன அடிப்படைத் தகுதிகள் என்று வைத்துக் கொள்ளலாமா? இதுபோக, கடந்த 10-15 ஆண்டுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகள், அவற்றின் முக்கிய நிகழ்வுகள் என்று ஞாபகம் வைத்துக் கொள்வது விரும்பத்தக்கது. இத்தோடு கொஞ்சூண்டு நகைச்சுவை உணர்வு இருந்தால் எதேஷ்டம். பழைய ஆட்டக்காரர்கள் இதற்கு வருவது வழமையாகிவிட்ட ஒன்று. இதில் ரிச்சி பெனாட், டோனி க்ரேக், டீன் ஜோன்ஸ், ஹோல்டிங், டேவிட் கோவர் ஆகியோரின் வர்ணனை எனக்குப் பிடிக்கும். இந்தியத் துணைக்கண்டத்தில் இருப்பவர்களில், ரவி சாஸ்திரி, சிவராமகிருஷ்ணன் ஆகியோரின் வர்ணனைகள் நல்ல தரம் வாய்ந்தது என்று எனக்கு அபிப்பிராயம். மீதி சஞ்சய், மற்றும் கோஷ்டிகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நவஜோத் சிங் சித்துவை இந்த விளையாட்டில் நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன். ஆனால், இந்த கவாஸ்கர், ரமீஸ் ராஜா, மற்றும் ரஞ்சித் ஃபெர்னாண்டோ ஆகியோரின் வர்ணனை இருக்கிறதே, இது தனி ரக...

நவராத்திரி நினைவுகள்

பண்டிகைகளில் எனக்குப் பிடித்தது நவராத்திரி. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பண்டிகையில் எனக்குப் பிடித்தது, பண்டிகைகள் வருவதை உணர்த்துவது - அதை ஒட்டி வீட்டில் செய்யப்படும் பக்ஷ்ணாதிகளே. சாதாரண நாட்களில் செய்யாத (ஏனாம்?) அருமையான தின்பண்டங்களை இந்த விசேடங்களின் போது தான் பண்ணுவார்கள். கிடைப்பதற்கு அரிதாக இருப்பதனால் தான் நான் இப்படி அலைகிறேன் என்று சொல்லுபவர்களின் வாயில் எங்கள் வீட்டு நெய்யப்பத்தை அடைப்பேன். பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டைகள் (உள்ளே இனிப்பு பூரணம் வைத்தது), கோகுலாஷ்டமி முறுக்கு, கார, மற்றும் வெல்லச் சீடைகள், கார்த்திகை தீபத்தன்று மேற்சொன்ன நெய்யப்பம், அவல், நெற்பொரி உருண்டைகள், காரடையான் நோன்பு அடை, இதெல்லாம் ப்ராசீனமான பண்டங்கள். இப்போதெல்லாம் தீபாவளி ஒரு cosmopolitan status அடைந்திருப்பதால், அன்று குலாப் ஜாமூன் என்கிற வடநாட்டுத் தின்பண்டம் எல்லாம் செய்கிறார்கள். ஆனால் வழமையாக இந்தச் சமயத்தில் வேட்டி சட்டையுடன்,கையோடு ஒரு சாக்கில் பெரிய கரண்டிகள் (ஜாரணி?) பொதிந்து எடுத்து வந்த ஒருவர் வீட்டில் தோன்றுவார். இவருக்கு அடுப்பை ஒழித்துக் கொடுத்து, கடலை மாவு, சர்க்கரை, நெய், மு...

கொசுறு

டிவி யில் edit செய்த நிகழ்ச்சிகளில் சம்பவங்கள் வேகமான கதியில் (இயல் வாழ்க்கையை விட) நடைபெறும். டிவி அதிகம் பார்க்கும் சிறார்கள், இதைப் பார்த்துப் பழகி, இயல்வாழ்வின் (relatively) மந்தமான கதியினால் சோர்வடைகிறார்கள். இதனாலும் AD/HD சிறுவயதினருக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது என்று ஆய்வு மூலம் கண்டுள்ளார்களாம். இப்படி ஒரு செய்தி படித்ததாக என் நண்பன் 'சின்ச்சின்', இது சம்பந்தமான என் பதிவுகளைப் படித்து மடல் அனுப்பியிருக்கிறான். அவனுக்குக் கோடிப் புண்ணியம்... டிவி பார்க்காமல் இருப்பதன் நன்மையெல்லாம் பேசி முடியாது போலிருக்கிறது.

நாங்க கொயந்தைங்க பா... - 2

என் 9 வயது மருமகனின் புது அவதாரம் - ஸ்டைலாக கண்ணாடி அணிந்திருக்கிறான். கொஞ்ச நாளாகவே தலை வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தான்.எதற்கும் இருக்கட்டும் என்று கண் பரிசோதனைக்குப் போனால் அங்கே ஒரு கண்ணாடி மாட்டி விட்டார்கள்...எல்லாம் போக்கிமொன் (Pokemon) ஆசீர்வாதம். எங்களுக்குப் 'போக்கான்' தான் தெரியும் - இந்த அருவமான பயங்கரன்(ரி) தான் சின்ன வயதில் எங்களை வழிக்குக் கொண்டுவர effective technique. அதில்லாமல், இந்த பீச்சு, பிக்காச்சு போன்றவற்றைத் தெரிந்திருக்க வழியில்லை. (ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு, தெரியுமோ? - இவனுக்கு எல்லாம் காணாப்பாடமாக்கும்) கார்ட்டூன் நெட்வர்க்கில் வரும் போக்கிமொன் தொடரைப்பற்றித் தான் சொல்கிறேன். ஒரு நூறு பாத்திரங்களாவது (எல்லாம் வித விதமான ஜந்துக்கள்) இருக்கும் என்று நினைக்கிறேன். இத்தொடரின் இடைவேளையில் ஒரு ஜந்துவின் நிழலுருவைக் காட்டி, இதை ஏதென்று கண்டுபிடியுங்கள் என்றால், இவன் அந்த ஜந்துவின் குலம் கோத்திரம் 'அபிவாதயே' எல்லாம் சொல்கிறான்! போக்கிமொனின் வியாபார வெற்றி என்னை வியக்க வைக்கிறது. டிவி தொடர் அல்லாது, போக்கிமொன் பாத்திரங்கள் க...

ஊர் விசேஷங்கள்...

எச்சரிக்கை (அல்லது) பொருள் : ரொம்ப நாள் கழித்து ஊருக்குப் போனேன். நான் கண்ட மாற்றங்கள், ஊர் சுற்றியதன் பதிவுகள்... பத்து வருடத்தில் ஊர் மாறிப் போயிருந்தது. செட்டிப்பாளையம் ரோடு - இதன் முடிவில்லா ஓட்டத்தின் மறுபக்கத்தில், தொடுவானத்திற்கப்புறம் இருந்த செட்டிப்பாளையம் வரை ஒரு குஞ்சு குளுவாணி காணாது அப்போது. வயல்களும், முட்புதர்களும், தென்னந்தோப்பும், வெறுமையும் மேடும் பள்ளமுமான அகன்ற நிலப்பரப்பு முழுதும் வியாபித்திருக்கும். நீண்டு வளரும் ஆளற்ற சாலையில் தூரே தெரியும் வீடு, மற்றும் ஒட்டிய தென்னந்தோப்பு -நான் மூன்றாம் வகுப்பில் படித்த தமிழ்க் கதையில் வரும் ஏழைக் குடியானவன் இந்த வீட்டில் தான் வசிப்பான் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டேன். நண்பர்களை வீட்டுக்கு அழைத்தால் அவர்களை ஒரு நடை இந்தச் சாலையில் 'அடித்துப் பிடுங்கும்' பாலம் வரையில் அழைத்துச் சென்று, அங்கே உட்கார்ந்து தூரே தெரியும் கோவையின் கட்டிடங்களை இனம் காணத் தலைப்படுவோம். அருமையான, சில சமயம் பலமான காற்று எப்போதும் இருக்கும். இதுவே எங்களூரின் சுற்றுலாத் தன்மை மிக்க அம்சம். இப்போது சாலை நெடுகிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு வீடுக...

நாங்க கொயந்தைங்க பா...

நான் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது வகுப்பில் இரண்டு அணிகள் இருந்தன. செந்தில் 'செட்' மற்றும் ஜெரால்ட் 'செட்'. தினமும் மதிய உணவான பின்னர், இரண்டு 'செட்'டுக்கும் இடையே மற்போர்(!) நடக்கும். இப்படியாக ஒரு நாள் (நான் செந்தில் செட்) எங்கள் செட்டில் இருந்த என் நண்பன் சைமனை இந்த ஜெரல்ட் ஒரு மரக்கட்டையால் அடித்தான். பக்கத்தில் இருந்த நான் ஆத்திரம் கொண்டு ஒரு உடைந்த செங்கல்லை அவன் மேல் எறிந்ததில் அவன் உதடு கிழிந்தது. மூன்றாம் வகுப்பில் copy அடிக்க முயன்றேன் (!) என்று நூலகத்தில் தனியாக ஒரு ப்ரீட்சை எழுதின ஞாபகம்... நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது வீட்டருகில் பம்பர விளையாட்டில் ஏற்பட்ட ஒரு தகராறில் பக்கத்து வீட்டு விச்சுவையும் (அவன் என்னை விட ஒரு வயது பெரியவன்) துணைக்கு வந்த அவன் தம்பி 'ஜானு' வையும் அடித்துத் துவைத்தெடுத்தேன். அவர்கள் அழுதுகொண்டு போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவர்கள் அம்மா எங்கள் வீட்டின் முன் போட்ட கூச்சலின் போது உள் ரூமில் ஒளிந்திருந்தேன். இதெல்லாம் தற்பெருமை அல்ல. பின் எதற்குச் சொல்கிறேனென்றால், அன்றைக்கு என் அக்காள் மகன் படிக்கும் பள்ளியில்...

ஒரு பட்டியல் / அற்ப ஆசை...

படித்ததில் பிடித்த 100 புத்தகங்களின் பட்டியல் தந்துள்ளனர் எழுத்தாளர்கள் பாரா , மற்றும் ராமகிருஷ்ணன் . நான் தமிழில் 100 புத்தகங்கள் படித்திருக்கிறேனா என்பதே சந்தேகம்! ஆனாலும், இந்தப் பட்டியலிடுதல் கொஞ்சம் சுவாரஸியமான விஷயமாக இருப்பதனால், நானும்... (இவர்களின் பட்டியலில், நான் படித்த சிலவும் இருப்பதைப் பார்த்து பெருமை தாளவில்லை!) (இந்தப் பட்டியலின் வரிசை, எனக்கு ஞாபகம் வரும் முறையிலேயே இருக்கிறது) 1. பாரதியார் கதைகள் 2. மோக முள் - தி ஜா 3. அம்மா வந்தாள் - தி ஜா 4. மரப்பசு - தி ஜா 5. தி. ஜா சிறுகதைத் தொகுப்பு - பாகம் 1 6. அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - முழுத்தொகுப்பு 7. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - (செ. யோகனாதன் - தொ. ஆ) 8. ஆ. மாதவன் சிறுகதைகள் - முழுத் தொகுப்பு 9. ஒரு மனுஷி - சிறுகதைகள் - பிரபஞ்சன் 10. மனிதர்கள் மத்தியில் - சிறுகதைகள் - பிரபஞ்சன் 11. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன் 12. வானம் வசப்படும் - பிரபஞ்சன் 13. வேங்கையின் மைந்தன் - அகிலன் 14. பொன்னியின் செல்வன் - கல்கி 15. வீணை பவானி - சிறுகதைகள் -கல்கி 16. முதல் ஆட்டம் - இரா.முருகன் 17. வாடிவாசல் - சி சு செல்லப்பா 18...

"ச்சீ... இந்த ஜால்ரா புளிக்கும்!"

"யாரைக் காணொம்?..." "...சாமியைக் காணொம்" "சாமியைக் கண்டால்?..." "...மோட்சம் கிட்டும்" சின்ன வயதில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வரசித்தி விநாயகர் கோவிலில் ஐயப்பமார் சரணம் விளிக்கும்போது சொல்வது. ரொம்ப நாளைக் கப்புறம் தான் அது மலையாளத்தில் உள்ள விளி என்று தெரிந்தது. "ஆரைக் காணான்?" (யாரைப் பார்க்க?) என்பதை, "யாரைக் காணவில்லை?" என்று புரிந்து கொண்டதற்குக் காரணம் குட்டன் என்று அறியப்படும் கோவில் வேலையாள். கருப்பான, நெடிந்த திரேகம் - தாடியின் அடர்த்தியில் கூராகத் தெரியும் கண்கள் என்று ஒரு தீவிரத்துவம் உள்ள முகம் ஆதலால் நாங்கள் (பொடிப் பசங்க) எல்லோரும் அவனைக் கண்டு பயப்படுவோம். அவந்தான் இப்படி தப்புத் தப்பாகச் சரணம் விளிப்பவன். வேலையில் கடந்த அரையாண்டில் என் பங்களிப்பு பற்றிய பின்னூட்டம் கொடுத்த மேனேஜரிடம் பலமுறை பதவி உயர்வு வேண்டுவது பற்றி நினைவூட்டினேன். இப்போது கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன். " உங்கள் பங்களிப்பு நம் நிறுவனத்திற்கு பெரும் உதவியாய் இருந்த்துள்ளது; ஆனால் இன்னும் அடுத்த...

நடையா, இது நடையா...

கீழ்க்கண்ட அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்குமா என்று தெரியாது. ஆனால் எனக்கு அடிக்கடி ஏற்படுவது... ரோட்டில் நடந்து போகிறேன். டீக்கடையில் நம்மை சாதாரணமாகத் தாளம் போடவைக்கும் பாட்டு. தாளம் மட்டுமல்ல, சிறிதே உடம்பைக் குலுக்கி சிறு நடனம் ஆடினால் என்ன என்று எண்ணவைக்கும் பாட்டு. வீட்டில் யாரும் இல்லாதபோது எப்போதாவது ஆடுவேன் - இப்போது கார்ப்பொரெட் டின்னர்கள், பார்டிகளிலெல்லாம் எல்லாருமாகச் சேர்ந்து ஆடுவது ஒரு பத்ததி. பியரின் லாஹிரியிலும் நான் இதற்குத் துணிய மாட்டேன். அவ்வளவு கூச்சம்...நான் ரோட்டில் நடக்கிறேனா? அந்தப் பாட்டில் வரும் தாளத்திற்கேற்ப நான் நடப்பதாய் ஒரு பிரமை - என் நடையிலேயே ஒரு வித நடன நளினம் - எல்லோரும் இதை கவனிக்கிறார்கள். நான் நின்று நிதானித்து, வேறு கதியில் நடப்பேன். அட! முன்றைக்கும் மிகச் சரியாய் தாளத்திற்கேற்ப - பார்வையாளர்களின் ஆர்வம் அதிகமாகிறது. நான் நிதானமிழந்து, கதியை மாற்றி மாற்றி குடிபோதையில் தள்ளாடுபவனைப் போல... அப்பப்பா, என்ன கஷ்டம்? நல்லவேளை, நான் இலக்கிற்கு வந்து சேர்ந்துவிட்டேன்.

வூட்ல சொல்லிகினு வந்தியா?

"You really never learn to swear until you learn to drive" என்று யாரோ சொல்லி, எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. இன்று நான் மனத்தில் சொல்லிக் கொண்ட, தினமும் காலையில் பைக் ஓட்டி வரும்போது சொல்லிக்கொள்கிற "ங்கோத்தா.." வகையறாக்கள் எண்ணிக்கையில் அடங்கா. Traffic விதிகளை மதிப்பதை ஒரு காதலுடன் செய்ய முயற்சிக்கிறேன் - இதை என் தேசப்பற்றின் சிறு வெளியீடாகக் கூட நான் பார்ப்பதுண்டு. கொஞ்சம் civic sense, தேவையான அளவு traffic sense, துளி பொறுமை இருந்தால் நம்ம ஊர் சிங்கப்பூரோ, ம்யுநிக்கோ ஆகாவிட்டாலும், காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யார் "வாயிலும் விழ" வேண்டாம், உபயோகிக்கச் சரியான கெட்ட வார்த்தைகள் தேட வேண்டாம், முழு நாளையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்... யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள், பொலிஸ் இல்லாத நாற்சந்தியின் நெரிசலில், இண்டு இடுக்கிலெல்லாம் தத்தம் வாகனங்களைச் செருகிக்கொண்டு, அவர்களும் போகாமல், மற்றவர்களையும் நகர விடாமல...

ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்...

கணினியுடன் இப்போதெல்லாம் ரொம்ப சிநேகம் பாராட்டுகிறேன். கை தோள்ப்பட்டையில் இருந்து பிய்ந்து தொங்கும் அளவுக்கு RSI வளர்த்துள்ளேன். இருக்கையில் கவிழ்ந்தும், நிமிர்ந்தும், பக்கவாட்டில் அமர்ந்தும், கால்களை மடக்கி வைத்தும் மேசைமேல் நீட்டியும், தட்டச்சானை மடியிலும் (மாரிலும், தோளிலும்),பலகை மீது வைத்தும், பற்பல கோணங்களில் இருந்தும் ஒன்பது வருடங்களில், பல மென்பொருள் கிரந்தங்களும், கட்டளைத்தொடர் புனைவுகளும், மின்னஞ்சல் மடல்களுமாக அடித்துத் தள்ளியிருக்கிறேன். இதுபோதாதென்று வலைமேய்தல் காரணமாகவும் mouse ஐ (இதற்குத் தமிழில் என்ன 'எலி'யா?) click ஓ click என்று க்ளிக்கியும் இருக்கிறேன். (முழங்கையில் நமைச்சலும், விரல் எலும்புகளின் வலியும் பலமிழப்பும், நுனிகளில் எரிச்சலும், பின்னந்தோளில் குத்தல் போன்ற வலியும் இருந்தால் ஒரு நவீன ortho விற்பன்னரிடம் காட்டித் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும்) இருந்தும், தமிழில் தட்டச்சுவதைத் (இப்போதெல்லாம் பழைய காலம் மாதிரி யாராவது 'எழுது'கிறார்களா?) தவிர்க்க இயலவில்லை. தமிழ் தட்டச்சுதலும், படித்தலும் நன்றாய் தான் உள்ளது. மட்டுமல்லாமல், உணர்ச்சியற்ற இந்த இயந்...

அல்ப்ப சந்தோஷம்

நானும் ஒரு வலைப்பதிப்பன் ஆகிறேன். இந்த முதல் பதிப்பு வரும் அழகைப் பார்க்க ஆவலில் இருக்கிறேன். மண்டபத்திலே யாராவது எழுதிக் குடுத்ததைப் பதிக்கமாட்டேன். இங்கு இருப்பதெல்லாம் என்னுடையதுதான், என்னுடையதுதான், என்னுடையதுதான் அய்யா... இதற்குள்ளே இங்கே ஒரு எழுத்துப்பிழை கண்டுபிடித்துவிட்டார்கள்...(குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் (நெஜம்மாவே) இருக்கிறார்கள்...)