முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாங்க கொயந்தைங்க பா... - 2

என் 9 வயது மருமகனின் புது அவதாரம் - ஸ்டைலாக கண்ணாடி அணிந்திருக்கிறான். கொஞ்ச நாளாகவே தலை வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தான்.எதற்கும் இருக்கட்டும் என்று கண் பரிசோதனைக்குப் போனால் அங்கே ஒரு கண்ணாடி மாட்டி விட்டார்கள்...எல்லாம் போக்கிமொன் (Pokemon) ஆசீர்வாதம். எங்களுக்குப் 'போக்கான்' தான் தெரியும் - இந்த அருவமான பயங்கரன்(ரி) தான் சின்ன வயதில் எங்களை வழிக்குக் கொண்டுவர effective technique. அதில்லாமல், இந்த பீச்சு, பிக்காச்சு போன்றவற்றைத் தெரிந்திருக்க வழியில்லை. (ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு, தெரியுமோ? - இவனுக்கு எல்லாம் காணாப்பாடமாக்கும்) கார்ட்டூன் நெட்வர்க்கில் வரும் போக்கிமொன் தொடரைப்பற்றித் தான் சொல்கிறேன். ஒரு நூறு பாத்திரங்களாவது (எல்லாம் வித விதமான ஜந்துக்கள்) இருக்கும் என்று நினைக்கிறேன். இத்தொடரின் இடைவேளையில் ஒரு ஜந்துவின் நிழலுருவைக் காட்டி, இதை ஏதென்று கண்டுபிடியுங்கள் என்றால், இவன் அந்த ஜந்துவின் குலம் கோத்திரம் 'அபிவாதயே' எல்லாம் சொல்கிறான்!

போக்கிமொனின் வியாபார வெற்றி என்னை வியக்க வைக்கிறது. டிவி தொடர் அல்லாது, போக்கிமொன் பாத்திரங்கள் கொண்ட டீ-ஷர்ட், தொப்பி, டிபன் பாக்ஸ்கள் என்று இப்போது பிரபலம். இது போதாதென்று junk food களின் விளம்பரம் வேறு. "தாத்தா, ஒரு ஃபைவ் ருபீஸ் குடேன்" என்று கேட்டு வாங்கிச் சென்று, முக்கால் வாசி காற்று மட்டும் இருக்கும் ஒரு வறுத்த உணவுப்பொருள் பொட்டலம் வாங்கி வருவான். இதில் போக்கிமொன் அட்டை (அதென்னவோ ஜிங்கா கார்டாம்)ஒன்று இருக்கும். இதை நிறையச் சேர்த்துவைத்து விளையாட்டு, பரிவர்த்தனை... (நான் கோலிகுண்டு, சிகரெட் அட்டை, பஸ் டிக்கட் சேர்த்த மாதிரி) நான் ஹி மேன், அவ்வப்போது மிக்கி மௌஸ் கார்ட்டூன்கள் தவிர வேறொன்றறியேன். இப்போது பாமரனாக, பல்வேறு கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பற்றிப் 'புட்டுப் புட்டு' வைக்கும் இவனிடம் அமைதியாகக் கொஞ்சம் நேரம் போக்கிமொன் பாடம் கேட்டேன்.

பள்ளிநேரம் போக வீட்டில் ஆடாது அசங்காது, Pogo, Cartoon Network பார்க்கும் சிறார்களுக்கு இப்போது இவன் போல கண் பிரச்சனைகள் அல்லாது, childhood obesity என்கிற, சிறுவயதிலேயே உடல் கொழுக்கும் வியாதி பெருகுவதாக அமெரிக்காவில் கண்டுள்ளார்கள். டிவி பார்ப்பது பற்றாதென்று, அதில் (சிறுவர்களுக்கென்றே) விளம்பரப் படுத்தப்படும் junk உணவுப்பொருட்களைத் தின்று இப்படி...இதன் காரணமாக Nickelodeon கார்ட்டூன் சானலில் தினம் மூன்று மணிநேரம் நிகழ்ச்சிகளை முடக்கியிருக்கிறார்கள் என்று படித்தேன் (ஞாயிறு ஹிந்துவில் வந்தது - சுட்டி கிடைக்கவில்லை). இதுபோக, குழந்தைகளை எப்போதும் தொலைக்காட்சி பார்க்க வேண்டாமென்றும், வெளியே சென்று விளையாடவும் அவ்வப்போது அறிவுறுத்தப் போகிறார்கள் என்றும் அறிந்தேன். இது வரவேற்கத் தக்கது. இதற்காக அவர்களே வெளியில் சில விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடும். நமக்கும் இது ஒரு wakeup call ஆக இருக்க வேண்டும்.

நம் குழந்தைகளின் நன்மை கருதி, அவர்களைத் தொலைக்காட்சிப் பெட்டியினின்றும் திசை திருப்பவேண்டும். இவன் கார்ட்டூன் மட்டுமல்லாது வேறு பலவும் பார்த்து, "எதுக்கு ஒனக்கு இத்தன லொள்ளு" என்று தெருவெல்லாம் கேட்கப் பாடுகிறான். நம்மூர் சானல்களிலும் viewers discretion recommended என்பது போன்ற அறிவிப்புக்கள் வரச்செய்யவேண்டும். இவர்கள் டிவி பார்க்கும்பொழுது பெரியவர்கள் யாராவது நிகழ்ச்சிகளைத் தணிக்கை பண்ணவேண்டும். ரிமோட்டை இவர்கள் கையில் கொடுக்கக் கூடாது - சைல்டு லாக் போட்டுவைக்கலாம் (எங்கே, இவன் பெரிய கில்லாடி - இவன் ஏதாவது திரிசமனம் பண்ணி நமக்கு வேட்டு வைக்காத வரைக்கும் சரி. நமக்கு 'கோலங்கள்' மிஸ் ஆச்சுன்னா மண்டையே வெடிச்சிரும்), அல்லது ரிமோட்டை ஒளித்து வைக்கலாம். ஆனால் கட்டாயம் வெளியே விளையாட விடவேணும்!

கருத்துகள்

Badri Seshadri இவ்வாறு கூறியுள்ளார்…
என் மகளுடன் சேர்ந்து இப்பொழுது நானும் போகிமான் தொடரைப் பார்க்கிறேன். சில நேரங்களில் டிவியில் கார்ட்டூன் நெட்வொர்க் ஒன்றுதான் பார்க்கச் சகிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! மற்ற சானல்கள் அவ்வளவு மோசம்!

நானும் என் பெண் யாருடனும் விளையாடாமல் டிவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறாளே, கண் என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டேன். இப்பொழுது அவளுடன் விளையாட பக்கத்திலேயே இரு குழந்தைகள் கிடைத்து விட்டனர். கண் பிழைத்தது!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,

I am unable to read your blog on my Windows 98 machine. Have Murasu Anjal on. Got to know of your blog thru Prasanna. Any suggestions?

Saumya
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Saumya,

You need some unicode fonts installed. win98 may not have it - you may need to download some. Just in case, make sure that you set the encoding to unicode UTF-8 (IE Menu ->View->Encoding)

You could seek Badri/Sathya's help to set it up for you. If need further help, mail me (knski@yahoo.com) or Prasanna.

-Kannan

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி