கீழ்க்கண்ட அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்குமா என்று தெரியாது. ஆனால் எனக்கு அடிக்கடி ஏற்படுவது...
ரோட்டில் நடந்து போகிறேன். டீக்கடையில் நம்மை சாதாரணமாகத் தாளம் போடவைக்கும் பாட்டு. தாளம் மட்டுமல்ல, சிறிதே உடம்பைக் குலுக்கி சிறு நடனம் ஆடினால் என்ன என்று எண்ணவைக்கும் பாட்டு. வீட்டில் யாரும் இல்லாதபோது எப்போதாவது ஆடுவேன் - இப்போது கார்ப்பொரெட் டின்னர்கள், பார்டிகளிலெல்லாம் எல்லாருமாகச் சேர்ந்து ஆடுவது ஒரு பத்ததி. பியரின் லாஹிரியிலும் நான் இதற்குத் துணிய மாட்டேன். அவ்வளவு கூச்சம்...நான் ரோட்டில் நடக்கிறேனா? அந்தப் பாட்டில் வரும் தாளத்திற்கேற்ப நான் நடப்பதாய் ஒரு பிரமை - என் நடையிலேயே ஒரு வித நடன நளினம் - எல்லோரும் இதை கவனிக்கிறார்கள். நான் நின்று நிதானித்து, வேறு கதியில் நடப்பேன். அட! முன்றைக்கும் மிகச் சரியாய் தாளத்திற்கேற்ப - பார்வையாளர்களின் ஆர்வம் அதிகமாகிறது. நான் நிதானமிழந்து, கதியை மாற்றி மாற்றி குடிபோதையில் தள்ளாடுபவனைப் போல...
அப்பப்பா, என்ன கஷ்டம்? நல்லவேளை, நான் இலக்கிற்கு வந்து சேர்ந்துவிட்டேன்.

கருத்துகள்