எச்சரிக்கை (அல்லது) பொருள்: ரொம்ப நாள் கழித்து ஊருக்குப் போனேன். நான் கண்ட மாற்றங்கள், ஊர் சுற்றியதன் பதிவுகள்...
பத்து வருடத்தில் ஊர் மாறிப் போயிருந்தது. செட்டிப்பாளையம் ரோடு - இதன் முடிவில்லா ஓட்டத்தின் மறுபக்கத்தில், தொடுவானத்திற்கப்புறம் இருந்த செட்டிப்பாளையம் வரை ஒரு குஞ்சு குளுவாணி காணாது அப்போது. வயல்களும், முட்புதர்களும், தென்னந்தோப்பும், வெறுமையும் மேடும் பள்ளமுமான அகன்ற நிலப்பரப்பு முழுதும் வியாபித்திருக்கும். நீண்டு வளரும் ஆளற்ற சாலையில் தூரே தெரியும் வீடு, மற்றும் ஒட்டிய தென்னந்தோப்பு -நான் மூன்றாம் வகுப்பில் படித்த தமிழ்க் கதையில் வரும் ஏழைக் குடியானவன் இந்த வீட்டில் தான் வசிப்பான் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டேன். நண்பர்களை வீட்டுக்கு அழைத்தால் அவர்களை ஒரு நடை இந்தச் சாலையில் 'அடித்துப் பிடுங்கும்' பாலம் வரையில் அழைத்துச் சென்று, அங்கே உட்கார்ந்து தூரே தெரியும் கோவையின் கட்டிடங்களை இனம் காணத் தலைப்படுவோம். அருமையான, சில சமயம் பலமான காற்று எப்போதும் இருக்கும். இதுவே எங்களூரின் சுற்றுலாத் தன்மை மிக்க அம்சம். இப்போது சாலை நெடுகிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு வீடுகள், கடைகள், ஜெபக்கூடங்கள், சமத்துவபுரம், இன்ன பிற.
முன்பு குடியிருந்த வீட்டுப் பக்கம் போனேன். தார் ரோடுகள், தெருப்பெயர்ப் பலகைகள் மேலும் மேலும் வீடுகள் என்று கொஞ்சம் தொலைந்து போனேன். பழக்கப்பட்ட பன்றி மேயும் மைதானத்தின் மணம் மாறாதிருந்ததில் கோ-ஆர்டினேட்ஸ் திரும்பக் கிடைக்கப் பெற்றேன். மற்றபடி ஒரு நாளைக்கு ஒரே தடவை வரும் பொள்ளாச்சி பேஸஞ்சர், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், ராமேச்வரம் எக்ஸ்பிரஸ் என்ற நிலை போய், மணிக்கொரு மதுரை இண்டர் சிடி. ரவி ரேடியோ ரிப்பேர் இருந்த இடத்தில் டிஷ்நெட் ஹப் வைத்து ஹைஸ்பீட் இன்ட்ர்நெட் பிரவுசிங். சிங்கப்பூர், பாம்பே சலூன்கள் இடம் பெயரவில்லை. மீன்கடை சந்தில் பல புதிய 'நகர்' கள். பழைய ரேஷன் கடையைக் காணவில்லை, ஸ்டேட் பாங்க் ஏடிஎம் வந்திருக்கிறது. ஆல்வின் ஜோசப் அண்ணாச்சி கடை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியிருந்தது, கிரெடிட் கார்ட் வசதியுடன். (தம்மண்ணன் மளிகை மாறவில்லையாம்) கிரிக்கெட் விளையாடிப் பழகிய சர்ச் கிரவுண்ட் பக்கம் நடந்து போனேன் - தொலைந்த பந்தைத் தேட வந்து கள்ளிப் பழம் சாப்பிட்ட இடத்தில் ஏதோ ரெயில்வே ஆடிட்டோரியம், பளிச்சென்று. அந்தப் பக்கம் கம்பியூட்டரைஸ்ட் ரெயில்வே ரிஸர்வேஷன் மையம் ஒன்று புதிதாக.
எங்கள் காம்பவுண்ட் மளிகைக் கடை நாயுடு கடையை ஏரைகட்டிவிட்டுப் பக்கத்தில் புதுவீடு கட்டிக் கொண்டு மகனுடன் வசிக்கிறார். புளிய மரத்தடியில் என் தம்பிகளுடன் மூக்கொழுக மண்ணில் புரண்டு விளையாடிய அன்னபூரணிக்குக் கல்யாணம் ஆகி சாயிபாபா காலனியில் செட்டில் ஆகிவிட்டாள். புளியமரத்தை வெட்டிவிட்டு, அங்கே ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வர உள்ளது. 55A பஸ் கண்டக்டர் பையன் இப்போது ஆளாகிவிட்டார் - நரை முடியெல்லாம் வந்திருக்கிறது. யாருக்கும் அடையாளம் தெரியாமல், மாறுவேடம் போடாமலே நான் incognito வாக ஊரை வலம் வந்தேன்!
இதுதான் போத்தனூர் விசேடம்...

கருத்துகள்
ஊரை விட்டு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆச்சு. நடுவில் அப்பப்போ flying visits அல்லாமல் இப்படி நடந்து ஊர் சுற்றவில்லை. அது இப்பொ தான் முடிஞ்சது. ஏனோ இந்த வாட்டி ரொம்ப nostalgic ஆ போயிடுச்சு...
மற்றபடி 'பில்டப்' தான் :-))
Thanks for your comments!