முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சினிமா பிரபலம் மறைவுக்கு எழுத்தாளர் அறிவுக்குஞ்சு இரங்கல்

நேற்று மதியம் நண்பர் ஜாலி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் - யோகி மாமா நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நான் சாதாரணமாகச் செல்பேசியை உபயோகிப்பதில்லை. இப்போதெல்லாம் விமானத்தில் ஏறி சென்னையில் இறங்கும் போது என்னைக் கொணர வருபவர்கள் அழைப்பதற்காக இதை வைத்திருக்கிறேன். என் ஏழு வயது மகன் பராந்தகன் தான் குறுஞ்செய்தி வந்த விபரத்தைக் கூறினான். நான் உடனடி காரில் ஏறிக்கொண்டு கொச்சி விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் கிளம்பிவிட்டேன். இன்று காலை ஜாலி மறுபடியும் தொலைபேசி யோகி மாமா காலமாகிவிட்டதைத் தெரிவித்தார். நான் மலையாள இயக்குனர் பிஜாயோடு இருந்தேன் - இருவரும் யோகியின் இழப்பை துக்கம் கொண்டாடினோம்.

யோகி நெகிழ்த்தவைக்கும் கலைக்குச் சொந்தக்காரர். ஜாலியின் சமீபத்திய கட்டுரை ஒன்றே யோகியின் கண்டுகொள்ளப்படாத கடைசி நாட்களில் அவரது தன்னம்பிக்கையை மீட்டு, தன்னை மாபெரும் கலைஞனாக கருதிக்கொள்ள வைத்தது. அந்த வகையில் இக்கலைஞனை ஒற்றைக்கட்டுரையில் மீட்டெடுத்த பெருமை ஜாலியைச் சேரும். அதற்காக அவருக்கு என் நன்றிகள். மிகையுணர்ச்சிக்கும், கலையடர்த்திக்கும் இடைப்பட்ட ஒரு மெல்லிழையை யோகி பிடித்துக் கொண்டார். இதனாலேயே இவர் சாமானியர்களின் கொண்ட்டாட்டத்திற்கு உரியவராகிறார். ஆழ்ந்த கலையுணர்ச்சியின் தர்க்கத்தையோ, கலையும் வாழ்க்கையும் இணையும் அரிதான புள்ளிகளையோ கண்டுகொள்ள முடியாதவர் இவர் என்று புறவயமாகச் சிந்திப்பவர் எவரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம். இவரின் கலைவெளிப்பாடுகள் அழுத்தமில்லாத மெல்லுணர்ச்சிகளால் ஆனது என்று ஜாலி தனது கட்டுரையில் எழுதியிருப்பார். கலையாளுமை நுகர்வுப் பரப்பை அணுகும் இந்த நுண்ணிய சரடை ஜாலி போல யாரும் படம் பிடித்துக் காட்டியதில்லை. தமிழ்ச் சூழலில் இது பற்றிய உரையாடல்களோ அலசல்களோ ஜாலிக்கு முன்னால் எவரும் செய்ததில்லை. ஜேம்ஸ் பாஸ்வெல் சாமுவேல் ஜான்ஸன் என்ற கலைஞனின் வாழ்க்கையை ஆவணப்படுத்திய "ஜான்ஸனின் வாழ்க்கை" மட்டுமே ஜாலியின் கட்டுரைக்கு இணையானது.

யோகியின் மறைவு ஒரு மாபெரும் இழப்பு.

- அ.கு.

கருத்துகள்

Sri இவ்வாறு கூறியுள்ளார்…
Dude.. add label(s) (such as comedy, comedy madhiri, serious, really serious, dubaakkur) or else people like me will never understand....

-CC
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Noted pal. A (n un)related link: http://www.jeyamohan.in/?p=12737

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...