முன் குறிப்பு
அப்பாவிடம் நண்பனை அறிமுகம் செய்து வைத்தேன்.
“அப்பா, இது லெனின்”
அவர் அவனைப் பார்த்து முதலில் சொன்னது:
“Why லெனின்?”
லெனின் சிரித்துக்கொண்டே “அப்பா வச்ச பேர் uncle” என்று சொன்னான். இது நடந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னும் அப்பாவை நலம் விசாரிக்கும் போது அவன் “why லெனின்”ஐ மறப்பதேயில்லை.
*******
நானும் லெனினும் எனக்கு அறிமுகமில்லாத வேறொருவரும் ஓர் அறையில் உட்கார்ந்துகொண்டு Galapagos போன்ற மனிதர் அண்டியிராத தீவுகளின் உயிரினங்கள் பற்றியும், லெனின் வாழும் ஆஸ்த்ரேலியாவில் உணவுப்பொருட்கள், பழங்கள், விதைகளின் இறக்குமதிக்கு இருக்கும் கெடுபிடிகளைப் பற்றி இணைத்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
பேசிக்கொண்டே லெனின் எழுந்து toilet paper ஒன்றை இயல்பாகப் பற்றியிழுத்துக் கிழித்து, துடைத்துக்கொண்டு வெளியிலே போய்விட்டான்.
எனக்கு அது எந்த மாதிரியான அறை என்பது அப்போதுதான் உறைத்தது!
பொதுக் கழிப்பிடம் என்பதை “ஸாமூஹிக மூத்ரவிஸர்ஜனே” என்று கன்னடத்தில் மொழிபெயர்த்து வைத்திருப்பதைக் கிண்டல் செய்திருக்கிறேன் - ‘இதென்ன எல்லோரும் கூடிச் செய்யும் செயலா?’ என்று.
மேலும் மனிதன் தனிமையில் தன்னுடன் மட்டுமே இருக்கும் இடம் கழிப்பிடம் என்றும் அதனால் உள்ளேயிருப்பவரைக் கூப்பிடுவதும் கூடாது என்று நம்பும் நான், இப்படிக் ‘கூடிக் கழிக்கும்’ நிலையை அடைந்ததன் அதிர்ச்சியை விட வேறொன்றுதான் என் மனத்தில் ஆழமாகத் தங்கிவிட்டது.
“அவன் எப்படி ஒரே சீந்துக் காகித்ததில் ஒரே இழுப்பில் துடைத்துக்கொண்டு விட்டான்?” என்பதுதான் அது!
******
பின்குறிப்பு
இந்தக் கனவு பற்றி என் அம்மணியிடம் சொன்னேன். வழக்கம்போல் தலையில் அடித்துக்கொண்டாலும் அப்புறம் ஒரு கேள்வி கேட்டாள்
“Why லெனின்?”
கருத்துகள்