முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெங்களூர் டெஸ்ட் - சொதப்பல் - கங்குலி: சில எண்ணங்கள்

பாலாஜியின் இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் கொடுக்கப் போய் நீண்டு விட்டதால் தனியாகப் பதிவிட்டுவிட்டேன்.

பெங்களூர் ஆட்டத்தின் சொதப்பல் முதல் இன்னிங்க்ஸ் தான். இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடி ஓட்டமெடுப்பதில் ஆஸ்திரேலியா உட்பட எல்லா அணிகளும் ஐந்தாம் நாள் ஆடுகளத்தின் ஒடுக்குகளில் படுத்துவிடும் நிலைமை புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனாலும், லக்ஷ்மண் சொதப்பல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, கும்ப்ளேவை நிறையப் பந்துகள் ஆட வைத்தார். இலங்கையின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது, ஜெயசூரியா கடைசி ஆட்டக்காரரை அடைகாத்து நூறு ஓட்டங்கள் பக்கம் சேர்த்தாரே! அதுவல்லவா ஆட்டம்! ஷேன் வார்னை அனாயாசமாக ஆடின லக்ஷ்மண் கனேரியாவின் பந்தில் பூச்சி பிடித்தார். பல நாள் கழித்துப் புதிதாக அணிக்கு வந்த அர்ஷத் கானிடம் பம்போ பம்பென்று பம்பினார்! மட்டையடி முனையிலிருந்து தப்பித்தால் போதுமென்று ஓட்டம் பிடித்தார் - இந்தப்பக்கம் கும்ப்ளே அந்த யமகாதகர்களின் பந்துவீச்சை சந்திக்க நேரிடும் என்றபோதும்! தம்மை நிரூபிக்கக் கிடைத்த கடைசி வாய்ப்பையும் இவ்வாறாகக் கோட்டைவிட்டார். பழம் போன்ற அவரது காலப்பிரமாணத்திற்கும், மணிக்கட்டை சுழற்றி ஆடும் பிரத்தியேக ஹைதராபாதி ஆட்டத்திற்கும் முதன்மை விசிறி நான்! இருந்தும், அவரைத் தற்சமயம் வீட்டுக்கு அனுப்பிவைக்கும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இது ஒரு சோதனையான காலமென்றே தோன்றுகிறது. கங்குலி-ஜான் ரைட்- ஆண்றூ லீப்பஸ் கூட்டணியில், இளமைப்பட்டாளம் கொண்ட இந்த அணி காலப்போக்கில் மிகவும் பக்குவப்பட்டிருக்கிறது. ஆண்றூ விடைபெற்றுச் சென்றுவிட்டார். ஜான்ரைட் இந்த டெஸ்ட்டுடன் விலகிவிடுவார் போல தெரிகிறது. இப்போது கங்குலியைக் கழற்றிவிடக் கோரும் குரல்கள் ஓங்கி ஒலித்த வண்ணம் உள்ளன. கங்குலி சர்வதேச அளவிலும் நல்ல கேப்டன் - அவர் ஆட்டத்தில், களத்தில் காட்டும் passion அணிக்கு பலம் சேர்த்திருக்கிறது. 'தாதா'வுக்கு அணியில் நல்ல மரியாதை. துரதிர்ஷ்டவசமாக, அவரது தன்னம்பிக்கை படுகுழியில் விழுந்திருக்கிறது. ஆண்றூ லீப்பஸ் நம் அணியின் ஆட்டக்காரர்களை பந்தயக்குதிரை மாதிரி வைத்திருந்தார். கிரிக்கெட் ஆட்டம் மிகவும் மாறியிருக்கிறது. மைதானத்தில் சறுக்கிப் பந்தைத் தடுப்பதில் இருந்து, பந்து வீச்சு, ஆட்டத் திட்ட முறைகளில் வந்துள்ள முன்னேற்றங்களுக்கு உடம்பு ஈடு கொடுக்க லீப்பஸ் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஜான்ரைட் அணிக்குள் கொண்டுவந்த team spirit மற்றும் professionalism (இதற்கெல்லாம் தமிழ் என்னவோ?) கண்கூடு.

இந்த மூவரணி இருந்தபோதே இன்னும் இளைஞர்களைச் சேர்த்திருக்க வேண்டும், முன்னேற்பாட்டுடன் ரிக்கி பாண்டிங்க்கைச் செய்தது போல புதிய கேப்டனை groom செய்திருக்க வேண்டும். அடுத்துவரும் பயிற்சியாளருக்கு, ஜான் ரைட்டின் மேஜிக்கைத் தொடர முடியுமா என்பது கேள்விக்குறி.கங்குலி என்ற மட்டையாளருக்கு நல்ல மாற்று கிடைத்தாலும், 'தாதா' வென்ற கேப்டனுக்கு மாற்று கிடைக்குமா என்று தெரியவில்லை.

கருத்துகள்

Akbar Batcha இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,

இந்திய கிரிக்கெட் போர்டிற்கு எந்தவித நீண்ட கால திட்டமும் கிடையாது. ஜெயிக்கும்வரை அந்த குதிரையில் சவாரி செய்வதும், அது களைப்படைந்தவுடன் வேறு ஏதாவது ஒரு குதிரை முதுகில் சவாரி செய்வதும் வழக்கமாகிவிட்டது. இந்திய வீரர்கள் எல்லோருமே தனது தனிப்பட்ட முயற்சியால்தான் நன்றாக விளையாடுகிறார்கள், போர்டு ஒன்றும் பெரிதாக செய்வதில்லை.

ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியா அணியில் ஏதாவதொரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தி அவர்களை உற்சாகப் படுத்தி அணிக்கு வலு சேர்ப்பதென்பது ஆஸ்திரேலியா பொர்டின் கொள்கையாக இருக்கிறது. ஆனால் இங்கே வருடத்திற்க்கு ஒரு டெஸ்டில் சதமடித்தால் போதும் வருடம் முழுவதும் டீமில் இடம் உறுதி என்று உலா வருகிறார்கள் நமது வீரர்கள்.

ஷேவாக்கையும் கைபையைம் அணியின் தலை மற்றும் உதவி தலையாக மற்றி அணியின் சிந்தனையில் ஒரு உத்வேகத்தை கொடுத்தால் கங்குலியால் உருவாக்கப்பட்ட அந்த அதிரடி தாக்குதலும் வெல்ல வேண்டும் என்ற துடிப்பும் தொடர வாய்ப்பு இருக்கிறது.
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
அக்பர்,
அருமையான கருத்துக்கள்!

//ஷேவாக்கையும் கைபையைம் அணியின் தலை மற்றும் உதவி தலையாக மற்றி அணியின் சிந்தனையில் ஒரு உத்வேகத்தை கொடுத்தால்//

நெத்தியடி:-)


கண்ணன்,

நல்ல பதிவு!

//இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடி ஓட்டமெடுப்பதில் ஆஸ்திரேலியா உட்பட எல்லா அணிகளும் ஐந்தாம் நாள் ஆடுகளத்தின் ஒடுக்குகளில் படுத்துவிடும் நிலைமை புரிந்துகொள்ளக்கூடியதே. //

My point is about our over-defensive approach after Sehwag fell. That is condemnable by each and every cricket lover. India must have played positive cricket and if they had still lost, we all would have been proud of their performance!

//கங்குலி என்ற மட்டையாளருக்கு நல்ல மாற்று கிடைத்தாலும், 'தாதா' வென்ற கேப்டனுக்கு மாற்று கிடைக்குமா என்று தெரியவில்லை. //

மன்னிக்கவும், இளைஞர்களை ஊக்குவித்ததையும், களத்தில் aggressive அணுகுமுறையை பின்பற்றியதையும், கங்குலியின் சாதனைகளாகக் கூறலாம். Statistics make him look like a great captain. அவர் தலைமைப் பண்பினால் (like Brearly or Fleming) அரிய வெற்றிகள் கிடைத்ததாக ஒரு போதும் கூற முடியாது! Many of the victories under his captaincy can be attributed to some brilliant performances by a couple of individuals in the team! அவரை போன்ற கர்வி யாரும் கிடையாது.

//மைதானத்தில் சறுக்கிப் பந்தைத் தடுப்பதில் இருந்து, பந்து வீச்சு, ஆட்டத் திட்ட முறைகளில் வந்துள்ள முன்னேற்றங்களுக்கு உடம்பு ஈடு கொடுக்க லீப்பஸ் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஜான்ரைட் அணிக்குள் கொண்டுவந்த team spirit மற்றும் professionalism (இதற்கெல்லாம் தமிழ் என்னவோ?) கண்கூடு.//

சரியாகச் சொன்னீர்கள்!

//'தாதா'வுக்கு அணியில் நல்ல மரியாதை. துரதிர்ஷ்டவசமாக, அவரது தன்னம்பிக்கை படுகுழியில் விழுந்திருக்கிறது.//

It is not just self confidence. For a long time, he has been suspect to short pitch stuff and never bothered to work on that deficiency because he arrogantly believed that as long as he wins (thanks to Sehwag or Dravid or Laxman or Kumble) he would be retained as captain! He is also a poor fielder and on current form does not deserve to be even 12th man, forget being the captain. Ganguly's time has definitely passed and Dravid MUST be given the mantle. But I accept that he is still a fine ODI batsman!

என்றென்றும் அன்புடன்
பாலா
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
அக்பர்,

இந்திய போர்டின் தொலைநோக்குப் பார்வையின்மை என்பதில் நம் பிரச்சனைகளை ஒரே பிடியில் எடுத்துக் காட்டிவிட்டீர்கள். பின்னூட்டத்திற்கு நன்றி.

பாலா,

கங்குலியிடம் நீங்கள் சொல்லும் குறைகள் எல்லாம் சரியே. என்றாலும் நான் பார்த்தவரையில் இப்படி ஒரு aggression உள்ள கேப்டன் இந்தியாவுக்கு வாய்த்ததில்லை. கவாஸ்கருக்கு முந்தயவர்கள் பற்றி நான் அறியமாட்டேன். இன்னொருவர் வந்தால் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. ஆனால் grooming மிக அவசியம் என்று நினைக்கிறேன். கைஃப் இதற்குச் சரியான ஆளாக இருப்பார் என்று நம்புகிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...