ச முகமதலியின் நெருப்புக்குழியில் குருவி (இயற்கையியல் சார்ந்த இலக்கிய விமரிசனக் கட்டுரைகள் - அங்குசம் வெளியீடு, டிசம்பர் 2012 ) என்ற நூலைப் படித்தேன். பழந்தமிழிலக்கியம் தொட்டுச் சமகாலப் படைப்புகள் வரையில் காட்டுயிர்கள் பற்றிய அறிவியல் பார்வையற்று இருப்பதையும் செய்தி ஊடகங்கள் காட்டுயிர் பற்றிய செய்திகள் மற்றும் கட்டுரைகளில் காட்டும் அலட்சியம் பற்றியும் எழுதியிருக்கிறார். எளிய உயிர்களாகப் பார்க்கப்படும் பன்றி, கழுதை, நாய் என்பன போன்றவற்றை முன்வைத்து மனிதரை ஏசுவது குறித்துத் தன் ஆட்சேபங்களை, எதிர்ப்புகளைக் கடினமான, உறுதியான குரலில் பதிவு செய்கிறார். எளிய மனிதர் முதல் அரசியல் பிரமுகர்கள், திருவருக்கள், என்று யாரையும் விட்டுவைக்காமல் சேர்த்துச் சாடியிருக்கிறார். நாம் இயல்பாகப் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் மிருகங்கள் குறித்த சொலவடைகள் பொதுப்புத்தியில் மிருகங்கள் குறித்த தவறான புரிதல்களுக்கு வழிவகுப்பதாகச் சொல்லும் அவர், இம்மாதிரியானவற்றைத் தேடிக்கண்டுபிடித்து அவற்றிற்கான சரியான அறிவியல் தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். இப்புத்தகத்தில் (பன்னிரண்டு ஆண்டுகளுக்...
கண்ணன் தட்டினது!