தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனை செய்ய என்ன தகுதி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. தெளிவான ஆங்கில உச்சரிப்பு, ஆட்டத்தின் நெளிவு-சுளிவுகள் தெரிந்திருத்தல், மற்றும் ஆட்டத்தைப் பற்றிய நடுநிலையான கருத்தை முன்வைக்கும் கண்ணியம் ஆகியன அடிப்படைத் தகுதிகள் என்று வைத்துக் கொள்ளலாமா? இதுபோக, கடந்த 10-15 ஆண்டுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகள், அவற்றின் முக்கிய நிகழ்வுகள் என்று ஞாபகம் வைத்துக் கொள்வது விரும்பத்தக்கது. இத்தோடு கொஞ்சூண்டு நகைச்சுவை உணர்வு இருந்தால் எதேஷ்டம். பழைய ஆட்டக்காரர்கள் இதற்கு வருவது வழமையாகிவிட்ட ஒன்று. இதில் ரிச்சி பெனாட், டோனி க்ரேக், டீன் ஜோன்ஸ், ஹோல்டிங், டேவிட் கோவர் ஆகியோரின் வர்ணனை எனக்குப் பிடிக்கும். இந்தியத் துணைக்கண்டத்தில் இருப்பவர்களில், ரவி சாஸ்திரி, சிவராமகிருஷ்ணன் ஆகியோரின் வர்ணனைகள் நல்ல தரம் வாய்ந்தது என்று எனக்கு அபிப்பிராயம். மீதி சஞ்சய், மற்றும் கோஷ்டிகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நவஜோத் சிங் சித்துவை இந்த விளையாட்டில் நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன். ஆனால், இந்த கவாஸ்கர், ரமீஸ் ராஜா, மற்றும் ரஞ்சித் ஃபெர்னாண்டோ ஆகியோரின் வர்ணனை இருக்கிறதே, இது தனி ரக...
கண்ணன் தட்டினது!