முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தலைப்புச் சுருக்கம் (சோதனை)

நீளமான தலைப்பினால் தான் ப்ளாக்கர் விளையாடுகிறதா என்று செல்வராஜ் சோதித்துப் பார்க்கச் சொன்னார். போன பதிவை இருமுறை பதிந்தும் முகப்புப் பக்கத்தில் காணவில்லை. தலைப்புத்தான் காரணமாயிருக்கும் என்றே தோன்றுகிறது. தனிச்சுட்டியையும் overwrite செய்துவிடுமோ என்கிற பயத்தில், என்னுடைய போன பதிவு இங்கே முழுதாக. (மூன்றாவது முறையும் ஒரே பதிவை இடுவதைப் பொறுப்பீர்களாக) மறுபடியும் மோட்டார் சைக்கிள் டயரி - ஒரு புத்தக வாசிப்பு அனுபவம் "A good traveler has no fixed plans, and is not intent on arriving." ~LaoTzu (570-490 BC)~. Travel என்பதைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? பயணம் அல்லது பிரயாணம் என்பது ஒரு இலக்கை நோக்கிச் செல்வதான செயலைக் குறிப்பது போல இருக்கிறது. சுற்றுலா என்பது நம் பள்ளிக்கூட 'இன்பச்சுற்றுலா' வை ஞாபகப் படுத்தி அதன் கனத்தைக் குறைக்கிறது. நான் பெங்களூரில் இருந்து கோவை செல்வதற்கே நிறைய ஆயத்தங்கள் செய்வேன்; டிரெயின், பஸ் டிக்கட் கிடைக்கவில்லையென்றால் 'தொத்திக் கொண்டு' போக முனைய மாட்டேன். "Unreservedல் போகும் அனுபவமே தனி" என்றெல்லாம் சொல்வதைப் பார்த்து, தவிர்க்க...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...

பெங்களூர் டெஸ்ட் - சொதப்பல் - கங்குலி: சில எண்ணங்கள்

பாலாஜியின் இந்தப் பதிவுக்கு ப் பின்னூட்டம் கொடுக்கப் போய் நீண்டு விட்டதால் தனியாகப் பதிவிட்டுவிட்டேன். பெங்களூர் ஆட்டத்தின் சொதப்பல் முதல் இன்னிங்க்ஸ் தான். இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடி ஓட்டமெடுப்பதில் ஆஸ்திரேலியா உட்பட எல்லா அணிகளும் ஐந்தாம் நாள் ஆடுகளத்தின் ஒடுக்குகளில் படுத்துவிடும் நிலைமை புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனாலும், லக்ஷ்மண் சொதப்பல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, கும்ப்ளேவை நிறையப் பந்துகள் ஆட வைத்தார். இலங்கையின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது, ஜெயசூரியா கடைசி ஆட்டக்காரரை அடைகாத்து நூறு ஓட்டங்கள் பக்கம் சேர்த்தாரே! அதுவல்லவா ஆட்டம்! ஷேன் வார்னை அனாயாசமாக ஆடின லக்ஷ்மண் கனேரியாவின் பந்தில் பூச்சி பிடித்தார். பல நாள் கழித்துப் புதிதாக அணிக்கு வந்த அர்ஷத் கானிடம் பம்போ பம்பென்று பம்பினார்! மட்டையடி முனையிலிருந்து தப்பித்தால் போதுமென்று ஓட்டம் பிடித்தார் - இந்தப்பக்கம் கும்ப்ளே அந்த யமகாதகர்களின் பந்துவீச்சை சந்திக்க நேரிடும் என்றபோதும்! தம்மை நிரூபிக்கக் கிடைத்த கடைசி வாய்ப்பையும் இவ்வாறாகக் கோட்டைவிட்டார். பழம் போன்ற அவரது காலப்பிரமாணத்திற்கும், மணிக்கட்டை சுழற்றி ஆடும் பிரத்த...

ஒரு டாகுமெண்டரி படமும், சில எண்ணங்களும்

எனக்குச் சில சனி-ஞாயிறுகள் உருப்படியாய் அமைந்துவிடுவதுண்டு. இப்படியானவொரு ஞாயிறு அன்று பெங்களூரில் Molecules creations ஏற்பாடு செய்திருந்த Voicing Silence என்ற சர்வதேச டாகுமெண்டரி திரைப்பட விழா வில் ஒரு மூன்றரை படங்கள் பார்த்தேன். பதினேழு படங்கள் இதில் திரையிட்டார்கள். விழாவின் முடிவில் மூன்று சிறந்த முயற்சிகள் என்று மூன்று படங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். நான் பார்த்த படங்கள் : 1. La Bicicleta - கனடா (கியூபாவின் போக்குவரத்துப் பிரச்சனைகளை கனடா நாட்டுச் சைக்கிள்கள் தீர்ப்பது பற்றி) 2. Under Attack - ஸுவீடன் (வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு) 3. 46 Degree Root of the Wind - அர்ஜண்டீனா (Tehuelches பழங்குடியினரின் சாகும் மொழி, கலாச்சாரம் பற்றியது) 4. Baghdad Rap - ஸ்பெயின் (அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பில் சாதாரணர்கள் சிக்கிச் சீரழிந்ததை பல ராப் பாடல் வரிகள்மூலமாகவும், கோரமான சில படங்களின் மூலமாகவும் காட்டுகிறது) இவற்றில் La Bicicleta என்ற படம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. Bicycles Crossing Borders என்ற கனடா நாட்டு அமைப்பொன்று பழைய சைக்கிள்களைப் பழுதுபார்த்து, மிகவும் சகாய விலையில் ஹவான...

நீ....ண்ட இடைவேளைக்குப் பின்

இப்படியாக ஒரு வருடம் ஓடி விட்டது - வயதும் ஏறிவிட்டது. ரொம்ப நாளாக ஒரு மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். பல பொருட்களை வைத்து இதில் திணிக்க வேண்டியுள்ளது - மிகவும் ஆயாஸமாக இருக்கிறது. ஒன்றை அமுக்கித் திணிக்கும்போது இன்னொன்றோ, பலவோ அந்தப்பக்கம் பிதுங்கி வெளியேறி விடுகிறது. ரொம்பப் பிரயத்தனம் செய்து ஒரு மாதிரி கட்டும் நிலைமைக்கு வந்தால், கயிறு பற்றவில்லை, இல்லையென்றால் கையில் இருந்து வழுக்குகிறது. சரி, சில சாமான்களை விட்டு விடலாம் என்று கட்டப் புறப்பட்டால், மனது விட்டதையே நினைத்துச் சலிக்கிறது. நொந்துபோய்க் கொஞ்ச நாள் சும்மா விட்டால் சாமான்கள் கிடந்து எங்கும் இறைகிறது - இதைச் சேர்த்துப் பொறுக்குவது பெரும்பாடு. கவனம் சிறிதே தவறினாலோ, அவிழ்த்த நெல்லிக்காய் மூட்டைதான். வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளும், அதன் போக்கின் திசைதிருப்பிகளாகவே இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் தெளிவாக இலக்கு தெரிந்தாலும், நான் அதன் பக்கமாகத் திரும்ப துடுப்பை ஒருபக்கம் துழாவுகிறேன், விதி தன் துடுப்பை எதிர்ப்பக்கம் துழாவி, போக்கை மாற்றுகிறது. இலக்கை எட்டுவதை விட, பிரயாணத்தை எப்படி நடத்துகிறோம் என்பதில் தான் நாட்க...

நாய் ராசி

ஆறு மாதத்திற்கு முன்னால் ஊரில் தங்கைக்குத் (சித்தி மகள்) திருமணம் நிச்சயிக்கப் பட்டதில் இருந்தே எனக்குள் ஒரு பயம் வந்து உட்கார்ந்து கொண்டது. காரணம், பூட்டா என்கிற அவர்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பர்டு நாய். எனக்கும் அதற்கும் ஒத்துப் போவதே இல்லை. முன்னொரு முறை அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது, கொலை வெறியோடு என்னைப் பார்த்துக் கத்தியது. என் தங்கைகள் தம் உடன் பிறவா தம்பியிடம், "நம்ம அண்ணா டா, ஷேக் ஹாண்ட் குடு" என்று என் கையை வலுக் கட்டாயமாக இழுத்து அதன் அருகில் கொண்டு போனார்கள். நாய்க்குச் சந்தேகம் தீரவில்லை - "... a wooden expression had crept into his face. He looked like a parrot who had been given nuts by a stranger whose bonafides it is not sure of ..." என்று பி.ஜி.வோட்ஹவுஸ் (PG Wodehouse) சொல்வது போல பார்த்து, கொஞ்சமாக முகர்ந்து பார்த்து விட்டு, மறுபடியும் வள்ளென்று கடிக்க வந்தது. நல்ல வேளையாக கைக்கும் முன்னால் நான் கொண்டுவந்த பை இருந்ததில், மனிதர்களுடனாவது ஷேக் ஹாண்ட் பண்ண முடியும் என்ற நிலை இப்போது. கல்யாணத்திற்கு ஆனமட்டும் தாமதமாக ஊர் போய்ச் சேர்ந்து, வீட்டில் நுழை...

என்று தீரும் ஆடுகளச் சர்சை?

மும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள் - இந்தியா 104 & 5/0 (3 ஓவர்கள்) - கம்பீர் 1*, சேவாக் 4*, ஆஸ்திரேலியா 203 இன்று ஹிந்துவில் பீட்டர் ரீபெக் பத்தி(column) பார்த்தீர்களா? வான்கடே ஆடுகளம், களங்களுக்கெல்லாம் இழுக்கு என்றும், நம்மாட்கள் இத்தொடரில் ஒரு ஆட்டத்தையாவது வெல்ல வேண்டி கேவலமாக ஆடுகளம் தயாரித்திருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். ஆடுகளம் தவிர்த்த, மைதானத்தின் எந்தப் பகுதியுமே இதைவிட மேம்பட்டது என்றும், பயிற்சிக் களமே தேவலை என்றும் தாறுமாறாக எழுதியிருக்கிறார். களம் அவ்வளவு மோசமா? இல்லை இது அளுகுணியா? நம்மூரில் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் களம் பற்றிய சர்ச்சைகள் வந்தவண்ணம் இருக்கிறதே! பாகிஸ்தான், இலங்கைக் களங்கள் பற்றி "ஸ்லோ விக்கட்" என்ற விமரிசனத்தை மீறி வேறொன்றும் வருவதில்லையே. நம்மாட்கள் விழுந்து புரண்டு அரை நாளில் பத்து விக்கட் எடுத்தாலும், இம்மாதிரி யாராவது குறை சொல்லி அழுகிறார்கள். பேசாமல், இனிமேல் நியூட்ரல் இடங்களில் தான் டெஸ்ட் பந்தயங்கள் வைப்பது என்று சொல்லலாம் - ஆனால் இது சரிப்பட்டு வராது; நம்மாட்கள் ஆடுவதை நம் மண்ணில் பார்க்காமல் என்ன கிரிக்கெட் வேண்டியிருக்கு?...

துணைக்கண்டத்தின் கவாஸ்கர்கள்

தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனை செய்ய என்ன தகுதி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. தெளிவான ஆங்கில உச்சரிப்பு, ஆட்டத்தின் நெளிவு-சுளிவுகள் தெரிந்திருத்தல், மற்றும் ஆட்டத்தைப் பற்றிய நடுநிலையான கருத்தை முன்வைக்கும் கண்ணியம் ஆகியன அடிப்படைத் தகுதிகள் என்று வைத்துக் கொள்ளலாமா? இதுபோக, கடந்த 10-15 ஆண்டுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகள், அவற்றின் முக்கிய நிகழ்வுகள் என்று ஞாபகம் வைத்துக் கொள்வது விரும்பத்தக்கது. இத்தோடு கொஞ்சூண்டு நகைச்சுவை உணர்வு இருந்தால் எதேஷ்டம். பழைய ஆட்டக்காரர்கள் இதற்கு வருவது வழமையாகிவிட்ட ஒன்று. இதில் ரிச்சி பெனாட், டோனி க்ரேக், டீன் ஜோன்ஸ், ஹோல்டிங், டேவிட் கோவர் ஆகியோரின் வர்ணனை எனக்குப் பிடிக்கும். இந்தியத் துணைக்கண்டத்தில் இருப்பவர்களில், ரவி சாஸ்திரி, சிவராமகிருஷ்ணன் ஆகியோரின் வர்ணனைகள் நல்ல தரம் வாய்ந்தது என்று எனக்கு அபிப்பிராயம். மீதி சஞ்சய், மற்றும் கோஷ்டிகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நவஜோத் சிங் சித்துவை இந்த விளையாட்டில் நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன். ஆனால், இந்த கவாஸ்கர், ரமீஸ் ராஜா, மற்றும் ரஞ்சித் ஃபெர்னாண்டோ ஆகியோரின் வர்ணனை இருக்கிறதே, இது தனி ரக...

நவராத்திரி நினைவுகள்

பண்டிகைகளில் எனக்குப் பிடித்தது நவராத்திரி. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பண்டிகையில் எனக்குப் பிடித்தது, பண்டிகைகள் வருவதை உணர்த்துவது - அதை ஒட்டி வீட்டில் செய்யப்படும் பக்ஷ்ணாதிகளே. சாதாரண நாட்களில் செய்யாத (ஏனாம்?) அருமையான தின்பண்டங்களை இந்த விசேடங்களின் போது தான் பண்ணுவார்கள். கிடைப்பதற்கு அரிதாக இருப்பதனால் தான் நான் இப்படி அலைகிறேன் என்று சொல்லுபவர்களின் வாயில் எங்கள் வீட்டு நெய்யப்பத்தை அடைப்பேன். பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டைகள் (உள்ளே இனிப்பு பூரணம் வைத்தது), கோகுலாஷ்டமி முறுக்கு, கார, மற்றும் வெல்லச் சீடைகள், கார்த்திகை தீபத்தன்று மேற்சொன்ன நெய்யப்பம், அவல், நெற்பொரி உருண்டைகள், காரடையான் நோன்பு அடை, இதெல்லாம் ப்ராசீனமான பண்டங்கள். இப்போதெல்லாம் தீபாவளி ஒரு cosmopolitan status அடைந்திருப்பதால், அன்று குலாப் ஜாமூன் என்கிற வடநாட்டுத் தின்பண்டம் எல்லாம் செய்கிறார்கள். ஆனால் வழமையாக இந்தச் சமயத்தில் வேட்டி சட்டையுடன்,கையோடு ஒரு சாக்கில் பெரிய கரண்டிகள் (ஜாரணி?) பொதிந்து எடுத்து வந்த ஒருவர் வீட்டில் தோன்றுவார். இவருக்கு அடுப்பை ஒழித்துக் கொடுத்து, கடலை மாவு, சர்க்கரை, நெய், மு...

கொசுறு

டிவி யில் edit செய்த நிகழ்ச்சிகளில் சம்பவங்கள் வேகமான கதியில் (இயல் வாழ்க்கையை விட) நடைபெறும். டிவி அதிகம் பார்க்கும் சிறார்கள், இதைப் பார்த்துப் பழகி, இயல்வாழ்வின் (relatively) மந்தமான கதியினால் சோர்வடைகிறார்கள். இதனாலும் AD/HD சிறுவயதினருக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது என்று ஆய்வு மூலம் கண்டுள்ளார்களாம். இப்படி ஒரு செய்தி படித்ததாக என் நண்பன் 'சின்ச்சின்', இது சம்பந்தமான என் பதிவுகளைப் படித்து மடல் அனுப்பியிருக்கிறான். அவனுக்குக் கோடிப் புண்ணியம்... டிவி பார்க்காமல் இருப்பதன் நன்மையெல்லாம் பேசி முடியாது போலிருக்கிறது.

நாங்க கொயந்தைங்க பா... - 2

என் 9 வயது மருமகனின் புது அவதாரம் - ஸ்டைலாக கண்ணாடி அணிந்திருக்கிறான். கொஞ்ச நாளாகவே தலை வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தான்.எதற்கும் இருக்கட்டும் என்று கண் பரிசோதனைக்குப் போனால் அங்கே ஒரு கண்ணாடி மாட்டி விட்டார்கள்...எல்லாம் போக்கிமொன் (Pokemon) ஆசீர்வாதம். எங்களுக்குப் 'போக்கான்' தான் தெரியும் - இந்த அருவமான பயங்கரன்(ரி) தான் சின்ன வயதில் எங்களை வழிக்குக் கொண்டுவர effective technique. அதில்லாமல், இந்த பீச்சு, பிக்காச்சு போன்றவற்றைத் தெரிந்திருக்க வழியில்லை. (ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு, தெரியுமோ? - இவனுக்கு எல்லாம் காணாப்பாடமாக்கும்) கார்ட்டூன் நெட்வர்க்கில் வரும் போக்கிமொன் தொடரைப்பற்றித் தான் சொல்கிறேன். ஒரு நூறு பாத்திரங்களாவது (எல்லாம் வித விதமான ஜந்துக்கள்) இருக்கும் என்று நினைக்கிறேன். இத்தொடரின் இடைவேளையில் ஒரு ஜந்துவின் நிழலுருவைக் காட்டி, இதை ஏதென்று கண்டுபிடியுங்கள் என்றால், இவன் அந்த ஜந்துவின் குலம் கோத்திரம் 'அபிவாதயே' எல்லாம் சொல்கிறான்! போக்கிமொனின் வியாபார வெற்றி என்னை வியக்க வைக்கிறது. டிவி தொடர் அல்லாது, போக்கிமொன் பாத்திரங்கள் க...

ஊர் விசேஷங்கள்...

எச்சரிக்கை (அல்லது) பொருள் : ரொம்ப நாள் கழித்து ஊருக்குப் போனேன். நான் கண்ட மாற்றங்கள், ஊர் சுற்றியதன் பதிவுகள்... பத்து வருடத்தில் ஊர் மாறிப் போயிருந்தது. செட்டிப்பாளையம் ரோடு - இதன் முடிவில்லா ஓட்டத்தின் மறுபக்கத்தில், தொடுவானத்திற்கப்புறம் இருந்த செட்டிப்பாளையம் வரை ஒரு குஞ்சு குளுவாணி காணாது அப்போது. வயல்களும், முட்புதர்களும், தென்னந்தோப்பும், வெறுமையும் மேடும் பள்ளமுமான அகன்ற நிலப்பரப்பு முழுதும் வியாபித்திருக்கும். நீண்டு வளரும் ஆளற்ற சாலையில் தூரே தெரியும் வீடு, மற்றும் ஒட்டிய தென்னந்தோப்பு -நான் மூன்றாம் வகுப்பில் படித்த தமிழ்க் கதையில் வரும் ஏழைக் குடியானவன் இந்த வீட்டில் தான் வசிப்பான் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டேன். நண்பர்களை வீட்டுக்கு அழைத்தால் அவர்களை ஒரு நடை இந்தச் சாலையில் 'அடித்துப் பிடுங்கும்' பாலம் வரையில் அழைத்துச் சென்று, அங்கே உட்கார்ந்து தூரே தெரியும் கோவையின் கட்டிடங்களை இனம் காணத் தலைப்படுவோம். அருமையான, சில சமயம் பலமான காற்று எப்போதும் இருக்கும். இதுவே எங்களூரின் சுற்றுலாத் தன்மை மிக்க அம்சம். இப்போது சாலை நெடுகிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு வீடுக...

நாங்க கொயந்தைங்க பா...

நான் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது வகுப்பில் இரண்டு அணிகள் இருந்தன. செந்தில் 'செட்' மற்றும் ஜெரால்ட் 'செட்'. தினமும் மதிய உணவான பின்னர், இரண்டு 'செட்'டுக்கும் இடையே மற்போர்(!) நடக்கும். இப்படியாக ஒரு நாள் (நான் செந்தில் செட்) எங்கள் செட்டில் இருந்த என் நண்பன் சைமனை இந்த ஜெரல்ட் ஒரு மரக்கட்டையால் அடித்தான். பக்கத்தில் இருந்த நான் ஆத்திரம் கொண்டு ஒரு உடைந்த செங்கல்லை அவன் மேல் எறிந்ததில் அவன் உதடு கிழிந்தது. மூன்றாம் வகுப்பில் copy அடிக்க முயன்றேன் (!) என்று நூலகத்தில் தனியாக ஒரு ப்ரீட்சை எழுதின ஞாபகம்... நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது வீட்டருகில் பம்பர விளையாட்டில் ஏற்பட்ட ஒரு தகராறில் பக்கத்து வீட்டு விச்சுவையும் (அவன் என்னை விட ஒரு வயது பெரியவன்) துணைக்கு வந்த அவன் தம்பி 'ஜானு' வையும் அடித்துத் துவைத்தெடுத்தேன். அவர்கள் அழுதுகொண்டு போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவர்கள் அம்மா எங்கள் வீட்டின் முன் போட்ட கூச்சலின் போது உள் ரூமில் ஒளிந்திருந்தேன். இதெல்லாம் தற்பெருமை அல்ல. பின் எதற்குச் சொல்கிறேனென்றால், அன்றைக்கு என் அக்காள் மகன் படிக்கும் பள்ளியில்...

ஒரு பட்டியல் / அற்ப ஆசை...

படித்ததில் பிடித்த 100 புத்தகங்களின் பட்டியல் தந்துள்ளனர் எழுத்தாளர்கள் பாரா , மற்றும் ராமகிருஷ்ணன் . நான் தமிழில் 100 புத்தகங்கள் படித்திருக்கிறேனா என்பதே சந்தேகம்! ஆனாலும், இந்தப் பட்டியலிடுதல் கொஞ்சம் சுவாரஸியமான விஷயமாக இருப்பதனால், நானும்... (இவர்களின் பட்டியலில், நான் படித்த சிலவும் இருப்பதைப் பார்த்து பெருமை தாளவில்லை!) (இந்தப் பட்டியலின் வரிசை, எனக்கு ஞாபகம் வரும் முறையிலேயே இருக்கிறது) 1. பாரதியார் கதைகள் 2. மோக முள் - தி ஜா 3. அம்மா வந்தாள் - தி ஜா 4. மரப்பசு - தி ஜா 5. தி. ஜா சிறுகதைத் தொகுப்பு - பாகம் 1 6. அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - முழுத்தொகுப்பு 7. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - (செ. யோகனாதன் - தொ. ஆ) 8. ஆ. மாதவன் சிறுகதைகள் - முழுத் தொகுப்பு 9. ஒரு மனுஷி - சிறுகதைகள் - பிரபஞ்சன் 10. மனிதர்கள் மத்தியில் - சிறுகதைகள் - பிரபஞ்சன் 11. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன் 12. வானம் வசப்படும் - பிரபஞ்சன் 13. வேங்கையின் மைந்தன் - அகிலன் 14. பொன்னியின் செல்வன் - கல்கி 15. வீணை பவானி - சிறுகதைகள் -கல்கி 16. முதல் ஆட்டம் - இரா.முருகன் 17. வாடிவாசல் - சி சு செல்லப்பா 18...

"ச்சீ... இந்த ஜால்ரா புளிக்கும்!"

"யாரைக் காணொம்?..." "...சாமியைக் காணொம்" "சாமியைக் கண்டால்?..." "...மோட்சம் கிட்டும்" சின்ன வயதில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வரசித்தி விநாயகர் கோவிலில் ஐயப்பமார் சரணம் விளிக்கும்போது சொல்வது. ரொம்ப நாளைக் கப்புறம் தான் அது மலையாளத்தில் உள்ள விளி என்று தெரிந்தது. "ஆரைக் காணான்?" (யாரைப் பார்க்க?) என்பதை, "யாரைக் காணவில்லை?" என்று புரிந்து கொண்டதற்குக் காரணம் குட்டன் என்று அறியப்படும் கோவில் வேலையாள். கருப்பான, நெடிந்த திரேகம் - தாடியின் அடர்த்தியில் கூராகத் தெரியும் கண்கள் என்று ஒரு தீவிரத்துவம் உள்ள முகம் ஆதலால் நாங்கள் (பொடிப் பசங்க) எல்லோரும் அவனைக் கண்டு பயப்படுவோம். அவந்தான் இப்படி தப்புத் தப்பாகச் சரணம் விளிப்பவன். வேலையில் கடந்த அரையாண்டில் என் பங்களிப்பு பற்றிய பின்னூட்டம் கொடுத்த மேனேஜரிடம் பலமுறை பதவி உயர்வு வேண்டுவது பற்றி நினைவூட்டினேன். இப்போது கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன். " உங்கள் பங்களிப்பு நம் நிறுவனத்திற்கு பெரும் உதவியாய் இருந்த்துள்ளது; ஆனால் இன்னும் அடுத்த...

நடையா, இது நடையா...

கீழ்க்கண்ட அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்குமா என்று தெரியாது. ஆனால் எனக்கு அடிக்கடி ஏற்படுவது... ரோட்டில் நடந்து போகிறேன். டீக்கடையில் நம்மை சாதாரணமாகத் தாளம் போடவைக்கும் பாட்டு. தாளம் மட்டுமல்ல, சிறிதே உடம்பைக் குலுக்கி சிறு நடனம் ஆடினால் என்ன என்று எண்ணவைக்கும் பாட்டு. வீட்டில் யாரும் இல்லாதபோது எப்போதாவது ஆடுவேன் - இப்போது கார்ப்பொரெட் டின்னர்கள், பார்டிகளிலெல்லாம் எல்லாருமாகச் சேர்ந்து ஆடுவது ஒரு பத்ததி. பியரின் லாஹிரியிலும் நான் இதற்குத் துணிய மாட்டேன். அவ்வளவு கூச்சம்...நான் ரோட்டில் நடக்கிறேனா? அந்தப் பாட்டில் வரும் தாளத்திற்கேற்ப நான் நடப்பதாய் ஒரு பிரமை - என் நடையிலேயே ஒரு வித நடன நளினம் - எல்லோரும் இதை கவனிக்கிறார்கள். நான் நின்று நிதானித்து, வேறு கதியில் நடப்பேன். அட! முன்றைக்கும் மிகச் சரியாய் தாளத்திற்கேற்ப - பார்வையாளர்களின் ஆர்வம் அதிகமாகிறது. நான் நிதானமிழந்து, கதியை மாற்றி மாற்றி குடிபோதையில் தள்ளாடுபவனைப் போல... அப்பப்பா, என்ன கஷ்டம்? நல்லவேளை, நான் இலக்கிற்கு வந்து சேர்ந்துவிட்டேன்.

வூட்ல சொல்லிகினு வந்தியா?

"You really never learn to swear until you learn to drive" என்று யாரோ சொல்லி, எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. இன்று நான் மனத்தில் சொல்லிக் கொண்ட, தினமும் காலையில் பைக் ஓட்டி வரும்போது சொல்லிக்கொள்கிற "ங்கோத்தா.." வகையறாக்கள் எண்ணிக்கையில் அடங்கா. Traffic விதிகளை மதிப்பதை ஒரு காதலுடன் செய்ய முயற்சிக்கிறேன் - இதை என் தேசப்பற்றின் சிறு வெளியீடாகக் கூட நான் பார்ப்பதுண்டு. கொஞ்சம் civic sense, தேவையான அளவு traffic sense, துளி பொறுமை இருந்தால் நம்ம ஊர் சிங்கப்பூரோ, ம்யுநிக்கோ ஆகாவிட்டாலும், காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யார் "வாயிலும் விழ" வேண்டாம், உபயோகிக்கச் சரியான கெட்ட வார்த்தைகள் தேட வேண்டாம், முழு நாளையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்... யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள், பொலிஸ் இல்லாத நாற்சந்தியின் நெரிசலில், இண்டு இடுக்கிலெல்லாம் தத்தம் வாகனங்களைச் செருகிக்கொண்டு, அவர்களும் போகாமல், மற்றவர்களையும் நகர விடாமல...

ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்...

கணினியுடன் இப்போதெல்லாம் ரொம்ப சிநேகம் பாராட்டுகிறேன். கை தோள்ப்பட்டையில் இருந்து பிய்ந்து தொங்கும் அளவுக்கு RSI வளர்த்துள்ளேன். இருக்கையில் கவிழ்ந்தும், நிமிர்ந்தும், பக்கவாட்டில் அமர்ந்தும், கால்களை மடக்கி வைத்தும் மேசைமேல் நீட்டியும், தட்டச்சானை மடியிலும் (மாரிலும், தோளிலும்),பலகை மீது வைத்தும், பற்பல கோணங்களில் இருந்தும் ஒன்பது வருடங்களில், பல மென்பொருள் கிரந்தங்களும், கட்டளைத்தொடர் புனைவுகளும், மின்னஞ்சல் மடல்களுமாக அடித்துத் தள்ளியிருக்கிறேன். இதுபோதாதென்று வலைமேய்தல் காரணமாகவும் mouse ஐ (இதற்குத் தமிழில் என்ன 'எலி'யா?) click ஓ click என்று க்ளிக்கியும் இருக்கிறேன். (முழங்கையில் நமைச்சலும், விரல் எலும்புகளின் வலியும் பலமிழப்பும், நுனிகளில் எரிச்சலும், பின்னந்தோளில் குத்தல் போன்ற வலியும் இருந்தால் ஒரு நவீன ortho விற்பன்னரிடம் காட்டித் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும்) இருந்தும், தமிழில் தட்டச்சுவதைத் (இப்போதெல்லாம் பழைய காலம் மாதிரி யாராவது 'எழுது'கிறார்களா?) தவிர்க்க இயலவில்லை. தமிழ் தட்டச்சுதலும், படித்தலும் நன்றாய் தான் உள்ளது. மட்டுமல்லாமல், உணர்ச்சியற்ற இந்த இயந்...

அல்ப்ப சந்தோஷம்

நானும் ஒரு வலைப்பதிப்பன் ஆகிறேன். இந்த முதல் பதிப்பு வரும் அழகைப் பார்க்க ஆவலில் இருக்கிறேன். மண்டபத்திலே யாராவது எழுதிக் குடுத்ததைப் பதிக்கமாட்டேன். இங்கு இருப்பதெல்லாம் என்னுடையதுதான், என்னுடையதுதான், என்னுடையதுதான் அய்யா... இதற்குள்ளே இங்கே ஒரு எழுத்துப்பிழை கண்டுபிடித்துவிட்டார்கள்...(குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் (நெஜம்மாவே) இருக்கிறார்கள்...)