முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கட்டற்ற...

இந்த வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து இன்னொரு முறை வாழ நேர்ந்தால் என்ன செய்வேன்? என்று கேட்டால் 'ஒண்ணையும் மாத்த மாட்டேன்' என்று ஒரு புனைச் சுருட்டும் காட்ட மாட்டேன். அசட்டுத் தனங்களின், ஏமாற்றங்களின், விரக்திகளின், தணியா வேட்கைகளின், மற்றும் இந்தமாதிரி பலவற்றின் தொகுப்பாகவே தெரிகிறது வாழ்க்கை. நம்மைப் பற்றிய நமதானதும் பிறரதுமான எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்வதே பக்குவப்படலின் ஒரு முக்கிய அலகாகத் தெரிகிறது இப்போது. இந்த அனுபவ ஞானத்தோடு இன்னொரு முறை வாழ்ந்தால் தான் என்ன கேடு? ~~~ சுசீலா, சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கி, கண்ணாயிரம் பெருமாள் என்று நீளும் "மன நிழல்களின்" பாரம்பரியத்தில் நானும் மாதவக் கைமள், கோவிந்தன் நம்பூதிரி என்று (ஏனோ மலையாளப் பெயர்களே நினைவுக்கு வருகிறது) ஒன்றிரண்டை அவிழ்த்து விடுவோமா என்று யோசிப்பதுண்டு. நீரும் நெருப்பும் - இரண்டு எம்.ஜி.ஆர் - ஒருவன் முரடன், ஒருவன் சாது. இல்லை - தெரியாமல் "பாரம்பரியம்" என்று வந்துவிட்டது. "அதைக் காப்பியடித்து" என்று வைத்துக்கொள்வது தான் சரி. ~~~ மேலே தட்டச்சுவது கடினமாக இருக்கிறது - தூக்கம் வருகிறது. கொஞ