முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2004 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாங்க கொயந்தைங்க பா...

நான் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது வகுப்பில் இரண்டு அணிகள் இருந்தன. செந்தில் 'செட்' மற்றும் ஜெரால்ட் 'செட்'. தினமும் மதிய உணவான பின்னர், இரண்டு 'செட்'டுக்கும் இடையே மற்போர்(!) நடக்கும். இப்படியாக ஒரு நாள் (நான் செந்தில் செட்) எங்கள் செட்டில் இருந்த என் நண்பன் சைமனை இந்த ஜெரல்ட் ஒரு மரக்கட்டையால் அடித்தான். பக்கத்தில் இருந்த நான் ஆத்திரம் கொண்டு ஒரு உடைந்த செங்கல்லை அவன் மேல் எறிந்ததில் அவன் உதடு கிழிந்தது. மூன்றாம் வகுப்பில் copy அடிக்க முயன்றேன் (!) என்று நூலகத்தில் தனியாக ஒரு ப்ரீட்சை எழுதின ஞாபகம்... நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது வீட்டருகில் பம்பர விளையாட்டில் ஏற்பட்ட ஒரு தகராறில் பக்கத்து வீட்டு விச்சுவையும் (அவன் என்னை விட ஒரு வயது பெரியவன்) துணைக்கு வந்த அவன் தம்பி 'ஜானு' வையும் அடித்துத் துவைத்தெடுத்தேன். அவர்கள் அழுதுகொண்டு போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவர்கள் அம்மா எங்கள் வீட்டின் முன் போட்ட கூச்சலின் போது உள் ரூமில் ஒளிந்திருந்தேன். இதெல்லாம் தற்பெருமை அல்ல. பின் எதற்குச் சொல்கிறேனென்றால், அன்றைக்கு என் அக்காள் மகன் படிக்கும் பள்ளியில்

ஒரு பட்டியல் / அற்ப ஆசை...

படித்ததில் பிடித்த 100 புத்தகங்களின் பட்டியல் தந்துள்ளனர் எழுத்தாளர்கள் பாரா , மற்றும் ராமகிருஷ்ணன் . நான் தமிழில் 100 புத்தகங்கள் படித்திருக்கிறேனா என்பதே சந்தேகம்! ஆனாலும், இந்தப் பட்டியலிடுதல் கொஞ்சம் சுவாரஸியமான விஷயமாக இருப்பதனால், நானும்... (இவர்களின் பட்டியலில், நான் படித்த சிலவும் இருப்பதைப் பார்த்து பெருமை தாளவில்லை!) (இந்தப் பட்டியலின் வரிசை, எனக்கு ஞாபகம் வரும் முறையிலேயே இருக்கிறது) 1. பாரதியார் கதைகள் 2. மோக முள் - தி ஜா 3. அம்மா வந்தாள் - தி ஜா 4. மரப்பசு - தி ஜா 5. தி. ஜா சிறுகதைத் தொகுப்பு - பாகம் 1 6. அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - முழுத்தொகுப்பு 7. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - (செ. யோகனாதன் - தொ. ஆ) 8. ஆ. மாதவன் சிறுகதைகள் - முழுத் தொகுப்பு 9. ஒரு மனுஷி - சிறுகதைகள் - பிரபஞ்சன் 10. மனிதர்கள் மத்தியில் - சிறுகதைகள் - பிரபஞ்சன் 11. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன் 12. வானம் வசப்படும் - பிரபஞ்சன் 13. வேங்கையின் மைந்தன் - அகிலன் 14. பொன்னியின் செல்வன் - கல்கி 15. வீணை பவானி - சிறுகதைகள் -கல்கி 16. முதல் ஆட்டம் - இரா.முருகன் 17. வாடிவாசல் - சி சு செல்லப்பா 18

"ச்சீ... இந்த ஜால்ரா புளிக்கும்!"

"யாரைக் காணொம்?..." "...சாமியைக் காணொம்" "சாமியைக் கண்டால்?..." "...மோட்சம் கிட்டும்" சின்ன வயதில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வரசித்தி விநாயகர் கோவிலில் ஐயப்பமார் சரணம் விளிக்கும்போது சொல்வது. ரொம்ப நாளைக் கப்புறம் தான் அது மலையாளத்தில் உள்ள விளி என்று தெரிந்தது. "ஆரைக் காணான்?" (யாரைப் பார்க்க?) என்பதை, "யாரைக் காணவில்லை?" என்று புரிந்து கொண்டதற்குக் காரணம் குட்டன் என்று அறியப்படும் கோவில் வேலையாள். கருப்பான, நெடிந்த திரேகம் - தாடியின் அடர்த்தியில் கூராகத் தெரியும் கண்கள் என்று ஒரு தீவிரத்துவம் உள்ள முகம் ஆதலால் நாங்கள் (பொடிப் பசங்க) எல்லோரும் அவனைக் கண்டு பயப்படுவோம். அவந்தான் இப்படி தப்புத் தப்பாகச் சரணம் விளிப்பவன். வேலையில் கடந்த அரையாண்டில் என் பங்களிப்பு பற்றிய பின்னூட்டம் கொடுத்த மேனேஜரிடம் பலமுறை பதவி உயர்வு வேண்டுவது பற்றி நினைவூட்டினேன். இப்போது கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன். " உங்கள் பங்களிப்பு நம் நிறுவனத்திற்கு பெரும் உதவியாய் இருந்த்துள்ளது; ஆனால் இன்னும் அடுத்த

நடையா, இது நடையா...

கீழ்க்கண்ட அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்குமா என்று தெரியாது. ஆனால் எனக்கு அடிக்கடி ஏற்படுவது... ரோட்டில் நடந்து போகிறேன். டீக்கடையில் நம்மை சாதாரணமாகத் தாளம் போடவைக்கும் பாட்டு. தாளம் மட்டுமல்ல, சிறிதே உடம்பைக் குலுக்கி சிறு நடனம் ஆடினால் என்ன என்று எண்ணவைக்கும் பாட்டு. வீட்டில் யாரும் இல்லாதபோது எப்போதாவது ஆடுவேன் - இப்போது கார்ப்பொரெட் டின்னர்கள், பார்டிகளிலெல்லாம் எல்லாருமாகச் சேர்ந்து ஆடுவது ஒரு பத்ததி. பியரின் லாஹிரியிலும் நான் இதற்குத் துணிய மாட்டேன். அவ்வளவு கூச்சம்...நான் ரோட்டில் நடக்கிறேனா? அந்தப் பாட்டில் வரும் தாளத்திற்கேற்ப நான் நடப்பதாய் ஒரு பிரமை - என் நடையிலேயே ஒரு வித நடன நளினம் - எல்லோரும் இதை கவனிக்கிறார்கள். நான் நின்று நிதானித்து, வேறு கதியில் நடப்பேன். அட! முன்றைக்கும் மிகச் சரியாய் தாளத்திற்கேற்ப - பார்வையாளர்களின் ஆர்வம் அதிகமாகிறது. நான் நிதானமிழந்து, கதியை மாற்றி மாற்றி குடிபோதையில் தள்ளாடுபவனைப் போல... அப்பப்பா, என்ன கஷ்டம்? நல்லவேளை, நான் இலக்கிற்கு வந்து சேர்ந்துவிட்டேன்.