முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

101 கனவுகள் - முகவுரை

தூக்கத்தின்போது நாம் காணும் கனவு ஓரற்புதப் படைப்புச் செயல் என்று தோன்றுகிறது.  கனவை எழுதுவதோ அதைப்பற்றிச் சொல்லுவதோ ஒருவிதமான பசப்பு வேலையே. நினைவிலி மனது நிகழ்த்திப் பார்த்துக்கொண்ட வினோத நாடகத்தின் பொழிப்புரையே நாம் கனவைப் பற்றி எழுதுவது. அந்தப் பொழிப்புரைக்கு இயல்பு நடப்புக்களும், நினைவுறு மனம் அடைந்த உண்மை அனுபவங்களுமே அடிப்படை. மேலும் கனவை மனதின் படைப்புச் செயல் என்று கொண்டால் பிரமிள் சொல்லும் "சிருஷ்டி முகூர்த்தம்" கனவின்போதே நிகழ்கிறது. அதை நாம் சொல்லவோ எழுதவோ உட்காரும்பொழுது கல்யாணம் முடிந்து மண்டபத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்துகொண்டிருப்பார்கள். அப்புறம் 'மானே தேனே பொன்மானே' என்று சேர்த்துத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மேலும் நிகழுலகின் ஒழுக்கமும் கோர்வையும் (அல்லது அப்படியிருக்கவேண்டிய நிர்பந்தங்களும்) கனவின்போது இருப்பதில்லை. நமக்கோ கோர்வையும், பொருளொழுங்கும் இல்லாமல் பேசவோ எழுதவோ முடியாதபடிக்கு கற்பிக்கப்பட்டுக் கெட்டுக் குட்டிச்சுவராயிருக்கிறோம்.  முந்தாநாள் இப்படித்தான் ஏதோ கனவு கண்டேன். மிகவும் திறமையாக, உயர்ந்த நகைச்சுவையுடன் கூடிய வாக்க

101 கனவுகள் - 4. கி பி 2050

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க “hovercraft” ஒன்றைச் சோதனை செய்து வருகிறார்கள் என்ற செய்தியைப் படித்த நினைவு இருந்தது. சாலையில் எனக்கு முன்னால் ஒரு கரும்பச்சைக் கண்டெயினர் (பெட்டி மட்டும்) காற்றில் மிதந்துகொண்டு சென்றது. சில இடங்களில் சாலையை விட்டு நன்றாக மேலெழும்பியும் சிலவிடங்களில் சாலையைத் தேய்த்துக்கொண்டும் போனது. இதைத் திடீரென்று ஒரு நாற்சந்தியில் நிறுத்தி வண்டியைத்திறந்து ஒரு வினோத உயிரினத்தை வெளியில் இறக்கினார்கள்.  ஒரு பெண்ணும் உடன் இறங்கி வந்து “வாருங்கள் எல்லோரும் இதைக் கொஞ்சுங்கள்” என்று அதட்டினார். மாடு மாதிரி இருந்தாலும் மனித முகமும் கொம்புமாக படுபயங்கரமாக இருந்தது. இதை எப்படிக் கொஞ்சுவது? பெரியவர் ஒருவர் அருகில் சென்று வருடிக்கொடுத்தார். உடனே அது சிலுப்பிக்கொண்டு ஏதோ மொழியில் திட்டிக்கொண்டே அவரை முட்டித்தீர்த்துவிட்டது.  எனக்கு அளவில்லாத ஆத்திரம். எப்படிப் பொதுவிடத்தில் இப்படிச் செய்யலாம்? உடன் இருந்தவர் சொன்னார், இதுவும் “hovercraft” செய்யும் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கண்டுபிடிப்பாம்’. ‘எந்திர’ வாழ்க்கை வாழும் நாம் ஒருவருக்கொருவர் விட

101 கனவுகள் - 3. கெத்து

ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒரு வீடு. வீட்டிலேயே தட்டி வைத்திருந்தார்கள் - ‘பேக்கரி’ ரொட்டிகளும் ‘கேக்’குகளும். உடன் இருந்த யாரோ சொல்கிறார்கள், அது நல்ல இடம் என்றும், முன்பதிவு இல்லாதவர்களுக்கு ஒன்றும் கிட்டாது என்றும். வீட்டிலே குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிப்போகலாமே என்ற எண்ணத்தில் அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்துகொண்டு ஓரிளம்பெண் சிரித்துக்கொண்டே வந்தாள். பின்னோடு முண்டா ‘பனியன்’ அணிந்த ஒருவர் வந்தார் - அந்தப்பெண்ணின் தகப்பனாயிருக்க க் கூடு ம். அவரிடம் ஆங்கிலத் துரை யே  வெட்கும் ஆங்கிலத்தில் கேட்கிறேன்: “இங்கிருந்து வாங்கிப்போக ஏதும் கிடைக்குமா?” “நிச்சயமாக. நீங்கள் ஏதும் முன்பதிவு செய்திருக்கிறீர்களா?” இதற்கு நான், “மன்னிக்க வேண்டும். போகும் வழியில் எதேச்சையாக இந்தத் தட்டியைப் பார்க்க நேர்ந்தது, அதனால் வந்தேன்” என்றேன் அவர் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கண்ணாடியை மூக்கின்மேல் பொருத்திக்கொண்டு “உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்” என்று உள்ளே போனார். அந்தப் பெண் என்னை உள்ளே உட்கார அழைத்தாள

101 கனவுகள் - 2. கனவில் மிதத்தல்…

இது உண்மைதானா?  எதற்கும் சரிபார்த்துக்கொள்வோம் என்று மறுபடியும் எம்பிப் பார்த்தேன். சரிதான்! ஆனாலும் எவ்வளவு நேரத்திற்கு இது தாக்குப்பிடிக்கும்? கடற்கரையை அடைந்து நீருக்கு மேலாக எம்பிப்பார்த்தேன். நினைத்தபடியே வேலை செய்தது. நடுக்கடலில் பயம் வயிறைச் சுண்டியிழுத்தது. திரும்பிவிடலாம் என்று வலப்புறம் சாய்ந்தேன். சரிப்படவில்லை. இடது புறமாகத் திரும்ப முடிந்தது, அதுவும் கொஞ்சமாக. ஹாண்டில் பார் வளைந்த சைக்கிளை ஒரு மாதிரித் ‘தேற்றி’ ஓட்டிக்கொண்டுபோவதுபோல் இருந்தது. இதற்குள் அக்கரையை அடைந்துவிட்டேன்.  எங்கள் ஊரில் அந்தக்காலத்தில் பொட்டல்காட்டில் முளைத்த புதிய குடியிருப்பு மாதிரி ஓரிடம். தார் போடாத, மாட்டுவண்டித்தடங்கள் மிகுந்து அதுவே பாதையாகிவிட்ட சிறிய சாலை. இடது பக்கம் பார்த்தால் ஓடு வேய்ந்த கடையின் முன்புறம் வாழைத்தாரும், சணல்க்கயிறும் தொங்கிக்கொண்டிருந்தது.  அட! நம்மூர் மாதிரித்தான் இங்கெல்லாம் இருக்கிறது.  ஊர்ப்புறம் வந்தால் தானே உண்மையான ‘வளர்ச்சி’ தெரியும்?  இருந்தாலும் அப்போது நினைத்துக்கொண்டேன் “ஒரு பெருநகரத்தை நேர்த்தியாக கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அந்தப்