முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுதிச் செல்லும் கையின் விதி

 “ எழுதிச் செல்லும் விதியின் கை ”  யா ர்   முதலில் சொன்னது ? உமர் கைய்யாமின் ருபாயத்   ஒன்றில் வந்து தமிழ்ப்படுத்தப்பட்டது என்றறிகிறேன் .  இன்றைக்கு மீண்டும் வானொலியில் ‘ ஆயிரம் மலர்களே மலருங்கள் ’  -  எப்போது கேட்டாலும் சலிப்பதில்லை .   ‘ எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ ’   கேட்கும்போது   எப்போதும் தொண்டைக்குழி   அடைத்துக்கொள்கிறது .  இது ஏனென்று புரியவில்லை . அண்டங்கள் கடந்த பெருவெளியின் பிரம்மாண்டத்தின் முன்னால் ஒரு மணல்த் தரியளவும் காணாத அற்ப மனிதவாழ்வின் பதைபதைப்பு என்று கொள்கிறேன் .   இந்தக் கை எங்கும் நிறைந்தது .  சந்தைப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் 'கண்காணாக் கை'யும்  இதுதான்  போலும்.  கூடவே ஏனோ நினைவுக்கு வரும் கொசுறு பிரமிளின் இந்தக் கவிதை :   “ சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது .”