முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய ஐடி புரட்சியில் என் பங்கு - ஓர் ஐடி குமஸ்தக் குஞ்சாமணிக் குளுவானின் வாக்குமூலம்

கணினியியல் முதுகலைப்படிப்பின் பகுதியாக பாடம் சம்பந்தப்பட்ட திட்டப்பணி (project) செய்யவேண்டி இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) மீத்திறன்கணினி மையத்தின் (SERC) தலைவராக இருந்த (அந்தப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்) பேராசிரியர் ராஜாராமன் அவர்களை நண்பனின் உதவியால் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இளங்கலை கணினியியல் படிப்பில் அவர் எழுதிய புத்தகம் ஒன்றுதான் பாடப்புத்தகமாக இருந்தது. பற்பல ஆய்வு மாணவர்களை முனைவர்களாக்கிய பெருமை வாய்த்தவர். அப்படியொரு மாஜி மாணவரான ஒரு முனைவர் / பேராசிரியரை அழைத்து என்னைக்காட்டி "இவனைச் சேர்த்துக்கொள்" என்றார். ஆசிரியர் கையால் இட்ட பணியைத் தலையால் செய்து முடிக்கும் அந்த மாணவப் பேராசிரியர் என்னை ரிஷிமூலம் நதிமூலம் பார்க்காமல் சேர்த்துக்கொண்டார். ராஜாராமன் மென்மையான மனிதர்; மிகவும் அன்பாகப் பேசினார். என்னால் மறக்கமுடியாத  முதல் சந்திப்பு  அது. இன்றைக்குப் பிழைப்பு ஓடுவது அவர் போட்ட பிச்சை. இளங்கலை / முதுகலை என்று ஐந்தாண்டுகளில் 'படித்ததை'விட அந்த ஒன்பது மாதங்களில் நிறையக் கற்றுக்கொண்டேன். ஐந்து மாதங்களில் பல்கலைக்கு வேண்டிய வேலை முடிந்

விறகுகள், மண்ணெண்ணெய், அப்புறம் கொஞ்சம் சாணி - நினைவலைகள்

உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு, உழைப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் சித்திரங்கள் பகிரப்பட்டன. அதிலே சாணி தட்டும் பெண்ணின் படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது சிறுவயது நினைவுகளைக்கிண்டிவிட்டது. Inspired by @drvivekm 's #WomenatWork series, digging thru my archives to add to it 3: cow dung cake maker, #Kolkata pic.twitter.com/R8IhX4p9Sd — Arati Kumar-Rao (@AratiKumarRao) March 12, 2017 கூட்டுக்குடும்பத்தில் பாட்டியின் பராமரிப்பிலேயே சமையலறை இருந்தது. மாமா, பெரியம்மா, மற்றும் அம்மா ஆகியோர் வேலைக்குப் போய் அவரவர் பங்குகளைக் கொடுத்து ('என்னுடையதை நீ எப்படி எடுக்கலாம்?' என்று சோப்புக்கும் பற்பொடிக்கும் சண்டை போக) வீட்டுச் செலவு நடந்துகொண்டிருந்தது. இப்படியாக, உழைக்கும் பெண்களின்சித்திரம் சிறுவயதிலேயே எனக்குள் பதிந்துவிட்டிருந்தது. வீட்டுவேலைகள் போக பாட்டி வரசித்தி விநாயகர் கோயில் வாசலில் நின்று யாருடனேனும் பேசிக்கொண்டிருப்பாள். பேசிக்கொண்டிருந்தாலும் செட்டிபாளையம் சாலையில் போகும் மாட்டுவண்டிகளின் மேல் பாட்டி கவனமாக இருப்பாள். மாடுகள் சாணிபோட்டால் அதை ஓடிப்போய்ச் '