முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்போது படித்துக் கொண்டிருப்பது

இது முழுதும் பாசாங்கு. உள்ளிருப்பை அப்படியே எழுத்தாக்கக் கருவி, கலப்பை, கோடாரி இல்லாததால் சுற்றித்திரிந்து, சுற்றி, திரிந்து, மேதாவித்தனம் சேர்ந்து கை தப்புத்தப்பாய் தட்டச்சுப்பிச்சென்று ஏதாவது... கடைந்த மோரில் வெண்ணையைக் 'கட்டிப்'பிடிப்பது போல யோசித்துச் சேர்த்தது டம்பளர் பாலில் இருக்கும் கருப்புப் பூச்சி போலக் கட்டை விரலும் சுட்டு விரலும் கொண்டு பிடிக்கப் பிடிக்க நழுவும் எழுதுவதற்காய்க் கிளம்பினால். இப்போதும் ஓடியாயிற்று - கண்ணை மூடிமூடித் திறந்தாலும் கிடைப்பதில்லை - நழுவியது நழுவியது தான். கொஞ்ச நேரம் அசிரத்தையாக இருப்பது போல பாவனை செய்தாலும், எப்போதாவது பிடிக்கப் போனால் மறுபடி ஓட்டம். உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது உள்ளபடியே மாயக்கண்ணாடி மட்டுந்தான். மற்றபடி இதையும் சேர்த்து எல்லாம் பாசாங்கு. *** வானமற்ற வெளி என்கிற பிரமிளின் கவிதைகள் பற்றிய கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை 'எழுதுதல்' என்பதை ஒருவித பாசாங்கு என்று தான் நினைத்திருந்தேன். ஒரு அரிதான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுக்கும் ஒரு விஷயத்தை காகிதத்தில் வடிக்கும்போது வடிவம், யாப்பு, இசைநயம் பற்றிய கவலைகளோ