முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மொழிபெயர்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழிமாற்று இலக்கியங்களும் உரைநடையின் பரிணாமமும்: தமிழுக்கு எங்கே வாய்ப்பு நழுவியது?

Clicked by Magesh (https://www.flickr.com/photos/mageshb/) சமீபத்தில் நான் பார்த்த/கேட்ட  ஒரு நேர்காணலில் மலையாள எழுத்தாளர் ஒருவர் சொன்னார்:  "என்னை மிகவும் பாதித்த புத்தகம் ரோமெயின் ரோலாந்து எழுதிய 'ஜீன் கிறிஸ்டோப்' (Jean-Christophe) என்ற நாவல்தான்."  இதை அவர் மலையாளத்திலேயே படித்திருக்கிறார். டி.சி. புக்ஸ் (DC Books) இதனைப் பதிப்பித்திருக்கிறது. மலையாளிகள் சொல்லும் உலக இலக்கியங்களை எல்லாம் அவர்கள் மலையாளத்திலேயே படித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வயிறு எரிகிறது. இந்த ஆதங்கத்திலிருந்தே மொழி குறித்த சில வரலாற்றுத் தேடல்கள் எனக்குள் தொடங்கின. குறிப்பாக, நவீன உரைநடை உருவாக்கத்தில் மலையாளத்திற்கும் தமிழுக்குமான பயணங்கள் எப்படி வெவ்வேறாக அமைந்தன என்பது பெரும் ஆர்வமூட்டும் ஒரு பேசுபொருளாக இருக்கிறது. மேற்கண்ட தலைப்பில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடவும் விருப்பம் இருக்கிறது.  அதற்கான முதற்படியாக, முதல் 'படி'யாக இப்படி என் எண்ணங்களைக் கோர்த்துக்கொள்கிறேன். இதை ஒரு முறையான (formal)  மொழியில் எழுதிப் பார்க்கவும் ஆசை - அப்படியே முயன்றிருக்கிறேன்.  *** மலையாள...

பிரதியாகிய நானும், வாசகியாகிய நீயும்

  சிட் கார்மனின் "It isn't for want" என்ற கவிதை  படித்ததும் மொழிபெயர்க்கத் தூண்டியது.  ஆங்கிலக்கவிதை இங்கே . Photo by Magesh Babu என் மொழிபெயர்ப்பு: எதையும் பேசவோ  உன்னிடம் சொல்லவோ   உனக்கு அறியத்தரவோ  வேண்டும் என்பதனாலல்ல - போக முடியாதபடி    உன்னை நிறுத்தி வைக்கவே -   இங்கு நான் நானாகிறேன்  நீ இருக்கும் வரை - நீ இருக்கும் வரை --- கவியின் / கவிதையின் (இப்படியான) வாசிப்பவருடனான நேரடி உரையாடல் அரிதானது.  ஆங்கிலப் பிரதியில் பலமுறை தோன்றும்  you   தமிழின் வேற்றுமை உருபுகளால் வெவ்வேறு வடிவங்களைக் கொள்கின்றது. ஆனால் அது அவ்வாறு வருவது ஒரு மந்திர உச்சாடனை போல கவிதையின் ஒலியமைப்புக்கு அழகு சேர்க்கிறது. இவ்வளவு ' நீ ' இருக்குமிடத்தில் ' நான் ' ஆங்கிலத்தில் மறைந்தேயிருக்கிறது. தமிழில் 'நான்' இல்லாமல் மொழிபெயர்க்க முடியுமானாலும் அந்த வரி தட்டையாகவே அமையும்.  நான் இங்கே முக்கியமல்ல - நீயே இங்கு நிறைந்திருக்கிறாய். உன்னைச் சுற்றியே எல்லா இயக்கமும்.  'நான்' பிரதி / கவி என்பது ஒரு வாசிப்பு. ஆனால் எவ்வளவு சாத்தியங்களை உள...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

அம்மா இறந்தபோது நிம்மதியாயிற்று

  மலையாளக் கவிஞர் கல்பெட்டா நாராயணனின் பேச்சைக் கேட்பது ஒரு சுகம். பேசும் சொற்களை அன்றைக்குதான் கண்டுபிடித்தது போல கண்கள் மின்ன, சொற்-ஸ்வரங்களை நீட்டிச் சுருக்கி, வாக்கியங்களை அவர் இசைப்பார். உள்ளடக்கம் என்னவாயிருந்தாலும் பேசும் பாங்கே எல்லாவற்றையும் சுவாரஸ்யமானதாக்கிவிடும்.  வயநாடு இலக்கிய விழாவில் அவர் பேசும்போது, தாம் எழுதிய 'ஆசுவாஸம்' என்ற கவிதையைச் சொன்னார். மலையாளத்தில்தான் இன்னும் கவிதை 'பாடுகிறார்கள்'. சில கவிதை 'சொல்லல்கள்' இசையுடன் பாட்டாகவே செய்யப்படுவதுண்டு.  வடமொழிக் கலப்பு இருந்தாலும், தமிழின் 'சென்சிபிலிட்டி'யே மலையாள மொழிக்கும் பொருந்திவருகிறது. இதனாலேயே இக்கவிதைகளை நாம் தமிழக் கவிதைகள் போலவே வாசிக்கலாம், அனுபவிக்கலாம். இனி, 'ஆசுவாஸ'த்தின் (என்) மொழிபெயர்ப்பு: நிம்மதி  - கல்ப்பெட்டா நாராயணன் (மலையாளம்)  அம்மா இறந்தபோது  நிம்மதியாயிற்று.  இனி நான் இராப்பட்டினி கிடக்கலாம்  தொல்லை பண்ண யாரும் இல்லை.  இனி உலர்ந்து காயும்வரை நான் தலைதுவட்ட வேண்டியதில்லை யாரும் முடிக்கற்றையை விலக்கிப் பார்க்கமாட்டார்கள்.  இனி நான் கிணற்றின் ஆள்...

எண்ண நரி

டெட்  ஹ்யுக்ஸின் Thought Fox என்ற கவிதையின் சுமாரான மொழிபெயர்ப்பு ஒன்று (இணையத்தில்) கண்ணில் பட்டது. ஒரு கறாரான, நெகிழ்வற்ற   மொழிபெயர்ப் பு   முறையைப் பின்பற்றி, எல்லா ஆங்கிலச் சொற்களையும் இயந்திரத்தனமாக மொழிபெயர்த்தது போல் எனக்குத் தோன்றியது.  இதன் மூலம் இங்கே .   ஓரு நள்ளிரவில் காட்டில் சந்தடியில்லாமல், அரவமற்று வந்து போகும்  நரியைப் போலவே யாரும் அறியாமல், எதிர்பாராத தருணத்தில் எழுத்தாளருக்குக்  கற்பனை தோன்றி  மறைகிறது. அந்த நழுவும் பொழுதைப் படம்பிடித்துக் காட்டுகிறது இக்கவிதை. மேற்சொன்ன மொழிபெயர்ப்பில் சில "அடாவடிச்" சொற்கள், மற்றும் வரிக்கு வரி நேரான மொழிபெயர்ப்பு  முறை, ஆகியவை அந்த இரவின் அமைதியையும், நரியின் கள்ளத்தனமான வந்துபோக்கையும் குலைத்து விட்டதாகக் தோன்றியதால் இம்முயற்சி. இதுவும்  அவற்றையெல்லாம்   சரியாக க்  கொணர்ந்ததாகத் தெரியவில்லை.  எனினும் ஒரு அங்கலாய்ப்பில் வேறுவிதமாக முயன்றிருக்கிறேன்.  எண்ண நரி - டெட் ஹ்யுக்ஸ்  (Thought Fox - By Ted Hughes) இந்த நள்ளிரவு த் ...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்...

சாருமதி, அழகிய உள்ளம் படைத்தவளே...

இவள் காதலுற்றிருக்கிறாள். ஆபரணங்கள் அணிந்தொருங்கித் தன் காதல் நாயகன் வரவுக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். அவன் இவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். அந்த வலி தாளாமல் ஆறுதலுக்காகத் தன் ஆருயிர்த்தோழியை நாடுகிறாள். வெறும் வார்த்தைகள் ஆறுதல் தருமோ? இவள் துயர் காணப் பொறுக்காமல், தேற்றும் நோக்கில் தோழி ஒரு ஆற்றாமைப் பாடலைப் பாடுகிறாள். “அழகிய உள்ளம் படைத்தவளே, சாருமதி, இன்னும் ஏனிந்த அலங்கார உபசாரங்கள்? உன் துயர் தீர வழியென்ன? காதலன் பார்க்காத இந்த ஆபரணங்கள் உனக்கு எதற்கு? கருணை படைத்தவளே! மற பெண்ணே,  விடு கண்ணே உன்னுயிர்த் தலைவன் சடுதியில் வருவானோ, வாரானோ! இன்னும் காத்திராதேயம்மா நாகக்குழலி (நாகவேணீ)!” இது பிரிவாற்றாமையைச் சொல்லும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவுபடுத்துகிறதா?  இந்த ஜாவளியை (நேரடிப் பேச்சு வழக்கில் புனையப்பட்ட பாடல்) தெலுங்கில் இயற்றியவர் பட்டாபிராமையா. தமிழ் மொழியாக்கம் எனது கைவேலை - உத்தேசமாகச் சரியாய் இருக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற மேல்ப்பூச்சைக் களையச்சொல்லும் பாடலின் பொருள் போலவே அதன் வரிகளும்  எந்த உபசார வார்த்தைகளும் இ...

பகலெல்லாம் மாலையாய்...

நகுலன்  வாலஸ் ஸ்டீவன்ஸைத் "தன்னை பாதித்த கவிஞர்" என்று  குறிப்பிட்டிருக்கிறார் .  ஸ்டீவன்ஸின் இந்தக் கவிதை எனக்குப் பிடித்தமானது. பதிமூன்று பகுதிகளைக் கொண்ட இக்கவிதையின் ஒவ்வொரு பகுதியும் ஹைக்கூவை நினைவுபடுத்துவது. இந்தக் கவிதை முழுவதையும் வரிவரியாகக் கீழிருந்து மேலாக படித்தால் ஒரு கோர்வையிருப்பதாக எனக்குத்தோன்றும். இதன் கடைசிப் பகுதியை மொழிபெயர்க்க முயன்றிருக்கிறேன். மூலத்தின் அழகு மொழிபெயர்ப்பில் (பவுத்திரத்தில் - உபயம்: பேயோன்) இல்லை. இருந்தாலும் ஐந்தாறு விதமாக எழுதிப்பார்த்துக் கொண்டு மேற்கொண்டு முடியாமல் இதைத் தருகிறேன்.  ஆங்கில மூலத்தையே படித்து இன்புறுமாறு வேண்டிக்கொண்டாலும், உங்களால் இந்தப் பத்தியையோ வேறொன்றையோ மொழிபெயர்க்க முடிந்தால் செய்து பாருங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன். https://www.poetryfoundation.org/poems/45236/thirteen-ways-of-looking-at-a-blackbird (இங்கே நான் இட்டிருப்பது    https://www.poetryfoundation.org/  தளத்தில் இருந்து எடுத்த திரைச்சொட்டுகள்  ) என் 'முழிபெயர்ப்பு':  பகலெல்லாம் மாலையாய்த் தீர்ந...

கவிஞர் பணி

பாட்டனார்   எனக்கு அறிவுரைத்தது: கைவினை கல்  மேசையில் அமர்ந்து  சுருக்கக்  கற்றேன்   சுருக்கும்   தொழில்    அழிவற்றது   - லொரின் நீடெக்கர்  ( என் மொழிபெயர்ப்பு )