முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாருமதி, அழகிய உள்ளம் படைத்தவளே...

இவள் காதலுற்றிருக்கிறாள். ஆபரணங்கள் அணிந்தொருங்கித் தன் காதல் நாயகன் வரவுக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். அவன் இவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். அந்த வலி தாளாமல் ஆறுதலுக்காகத் தன் ஆருயிர்த்தோழியை நாடுகிறாள். வெறும் வார்த்தைகள் ஆறுதல் தருமோ? இவள் துயர் காணப் பொறுக்காமல், தேற்றும் நோக்கில் தோழி ஒரு ஆற்றாமைப் பாடலைப் பாடுகிறாள். “அழகிய உள்ளம் படைத்தவளே, சாருமதி, இன்னும் ஏனிந்த அலங்கார உபசாரங்கள்? உன் துயர் தீர வழியென்ன? காதலன் பார்க்காத இந்த ஆபரணங்கள் உனக்கு எதற்கு? கருணை படைத்தவளே! மற பெண்ணே,  விடு கண்ணே உன்னுயிர்த் தலைவன் சடுதியில் வருவானோ, வாரானோ! இன்னும் காத்திராதேயம்மா நாகக்குழலி (நாகவேணீ)!” இது பிரிவாற்றாமையைச் சொல்லும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவுபடுத்துகிறதா?  இந்த ஜாவளியை (நேரடிப் பேச்சு வழக்கில் புனையப்பட்ட பாடல்) தெலுங்கில் இயற்றியவர் பட்டாபிராமையா. தமிழ் மொழியாக்கம் எனது கைவேலை - உத்தேசமாகச் சரியாய் இருக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற மேல்ப்பூச்சைக் களையச்சொல்லும் பாடலின் பொருள் போலவே அதன் வரிகளும்  எந்த உபசார வார்த்தைகளும் இல்லாமல்  எளிய, நேரட

பகலெல்லாம் மாலையாய்...

நகுலன்  வாலஸ் ஸ்டீவன்ஸைத் "தன்னை பாதித்த கவிஞர்" என்று  குறிப்பிட்டிருக்கிறார் .  ஸ்டீவன்ஸின் இந்தக் கவிதை எனக்குப் பிடித்தமானது. பதிமூன்று பகுதிகளைக் கொண்ட இக்கவிதையின் ஒவ்வொரு பகுதியும் ஹைக்கூவை நினைவுபடுத்துவது. இந்தக் கவிதை முழுவதையும் வரிவரியாகக் கீழிருந்து மேலாக படித்தால் ஒரு கோர்வையிருப்பதாக எனக்குத்தோன்றும். இதன் கடைசிப் பகுதியை மொழிபெயர்க்க முயன்றிருக்கிறேன். மூலத்தின் அழகு மொழிபெயர்ப்பில் (பவுத்திரத்தில் - உபயம்: பேயோன்) இல்லை. இருந்தாலும் ஐந்தாறு விதமாக எழுதிப்பார்த்துக் கொண்டு மேற்கொண்டு முடியாமல் இதைத் தருகிறேன்.  ஆங்கில மூலத்தையே படித்து இன்புறுமாறு வேண்டிக்கொண்டாலும், உங்களால் இந்தப் பத்தியையோ வேறொன்றையோ மொழிபெயர்க்க முடிந்தால் செய்து பாருங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன். https://www.poetryfoundation.org/poems/45236/thirteen-ways-of-looking-at-a-blackbird (இங்கே நான் இட்டிருப்பது    https://www.poetryfoundation.org/  தளத்தில் இருந்து எடுத்த திரைச்சொட்டுகள்  ) என் 'முழிபெயர்ப்பு':  பகலெல்லாம் மாலையாய்த் தீர்ந்தது. பனி பொழிந்துகொண்டி

101 கனவுகள் - 6. இராமநாதம்

MD இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அவர் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன்! பாட்டில் இலயித்திருந்து, தாளத்தை மனத்திலிருத்தி எப்போதாவது கையில் தட்டிக்காட்டுவது அவர் வழக்கம். இதை மலைப்புடனேயே பார்த்திருக்கிறேன் - இதைத் தேர்ந்த இசைக்கலைஞர் அனைவரிடமும் கவனித்திருக்கிறேன்.  எனக்கோ, வலுவாகத் தொடையில் தட்டித் தாளம் போட்டாலும் பாட்டு தாளத்தில் நிற்காது. நான் சற்றும் பொறுமை இல்லாதவன். சோம்பேறி வேறு. சிறுவயதில் நன்றாகப் பாட வந்தது. எந்தப்பாட்டைக்கேட்டாலும் அதை அப்படியே திருப்பிப் பாடிவிடுவேன். நாட்பட குரலைப் பழக்குதல் பாடுதலுக்கு இன்றியமையாதது என்று புரிந்தது. நானோ கள்ளக்குரலில் பாடியே பல நாட்கள் சமாளித்து விட்டேன். குளியலறையில் உரக்கப் பாடுவது தவிர வேறொன்றும் இப்போது செய்வதில்லை. இதில் உள்ள பிரச்சனை நீண்ட நேரம் பாடினால் தொண்டை வரண்டு வலி கண்டு விடுவதுதான்.  எப்படிக் குரலைப் பழக்குவது? பெரியவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் - வாயைத் திறந்து பாடச் சொல்லி. முடியவில்லை, முயலவும் இல்லை.  இப்போது இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அலட்சியமாக அவர் பாட்டுக்கு அவ்வப்போது கையில் தாளத்தை

குழந்தை பாடிய தாலாட்டு

சிதார் - மகிழ்ச்சியான தருணங்களுக்கான இசைக்கருவி. அடித்துப் பெய்யும் பெருமழை போல, சலசலத்து ஓடும் அருவி போன்ற குதூகலத்துடனேயே இதன் இசையும் நம்மை நொடிப்பொழுதில் நனைத்து விடக்கூடியது. அதுபோலவே சரோத் அழுத்தமான இசையையும் சாரங்கி தனிமையை உணர்த்துவதும், ஷெனாய் துயரத்தையும் பொழிவதுமாய் எனக்குத் தோன்றும். சிதார் ஒலிக்கும் இந்தப் பாடலோ நிராசையைச் சொல்லுகிற பாடல். இது எப்படி மகிழ்ச்சியானதாக இருக்க முடியும்? ஒருதலைக் காதல் விடலைத்தனமாக (இப்போது) தோன்றினாலும் எப்போதும் கைகூடும் சாத்தியமில்லாத சில மன வேட்கைகள் நம்மை அழுத்தக்கூடியனவே. இயலாமையை, கையறுநிலையை, நிராசையை, தணிக்கச் சாத்தியமில்லாத வேட்கைகளை எப்படி எதிர்கொள்வது? இது மேற்கில் தோன்றும் உதயம் போலவென மனத்தைத் தேற்றிக் கொள்கிறான் ஒருவன். அவ்வாறான அசாத்தியங்களை அவன் பட்டியலிடுகிறான் - நடை மறந்த கால்களிரண்டின் தடயம், உயிரிழந்த்கருவைக் கொண்ட கவிதை, இப்படி விரியும் கற்பனையில் இலயிக்கிறான். நினைக்க நினைக்க இம்மாதிரியான உருவகங்கள் அவன் மனத்திலும் வேடிக்கையாய் விரிகின்றன, நிகழ்கின்றன. வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுத்தால் எப்படியிருக்கும்

ஜெரி அமல்தேவ் - "மலரும் நினைவுகள்"

ஒருதலைராகம் வந்த நேரம் (கோவை கீதாலையா தியேட்டரில் 450 நாள் ஓடியது - அதனால், வந்த வருடம் என்று சொல்லவேண்டும்) படுத்த வாக்கில் இருக்கும் ஒலிநாடாக் கருவியை எங்கள் குடும்ப நண்பரொருவர் இரவல் தந்திருந்தார். கூடவே கொஞ்சம் நாடாக்களும் - அதிலே 60 நிமிடம் ஓடக்கூடிய நாடாவொன்றில் ஒன்றேகால் பக்கம் ஒருதலைராகம் பாடல்கள். மீதி முக்கால் பக்கத்தில் ஒருதலைராகம் நாயகன் சங்கர் நடித்து (பாசில் முதலில் இயக்கி, மோகன்லால் அறிமுகம் பெற்ற) பாடல்கள் பிரபலமடைந்த மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் பாடல்களைப் ‘பதிவு’ செய்திருந்தார். இரண்டுவார இரவலில் நாள்முழுதும் அதே நாடாவை தேய்த்திருக்கிறேன். வாசமில்லா மலரிது, ரீனா மீனா, கூடையில கருவாடு, குழந்தைபாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோவிலிலே, நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது என்று நாடாவில் வந்தபடி வரிசைக்கிரமமாகப் பாடுவேன் ("ஏண்டா உனக்கு வாயே வலிக்காதா?”). தொடரும் மலையாளப்பாட்டுகளை மனப்பாடம் செய்ய முடியவில்லை (மொழி அப்போது வசப்படவில்லை). ஆனால் மெட்டுகள் மனத்தில் அப்படியே தங்கிவிட்டன. இன்றைக்கு ஏசியாநெட்டில் ஒரு நிகழ்ச்சியில் சங்கர். பழைய நினைவுகளை அவர

கவிஞர் பணி

பாட்டனார்   எனக்கு அறிவுரைத்தது: கைவினை கல்  மேசையில் அமர்ந்து  சுருக்கக்  கற்றேன்   சுருக்கும்   தொழில்    அழிவற்றது   - லொரின் நீடெக்கர்  ( என் மொழிபெயர்ப்பு )

வாரயிறுதியாய்த் தீரும் வாழ்க்கை

திங்கள் முதல் வெள்ளிவரை  நாள்தொடங்கி முன்னிரவு வரை  அலுவலக அர்ப்பணிப்பு காபி டம்ப்ளரைக் கழுவாததில் இருந்து,  அம்மாவை 'செக்கப்'புக்கு கூட்டிப்போகாதது வரைக்கும்  இது தான் சாக்கு வேறெதற்கும் நேரமின்றி  வேறெதிலும் நாட்டமுமின்றி  உழலும் பொழுதுகள்  எல்லாம் இருந்தமைந்த பின்பு  வாழ்க்கையை விரும்பிய படி வாழவென்று அலை ஓய்ந்தபின்  கடலிலே குளிக்கும் ஆசை மறந்துவிட்ட நண்பனின்  திருமண அழைப்புக்கு  மன்னிப்பு மடலேனும் எழுதலாமே  என்று தோன்றும் போது  வருகிறது அவன் மகளின் முதல் பிறந்தநாளுக்கான அழைப்பு  இதுவும்,  தாடியில் தென்படும் நரைகளுமே  ஒன்றும் சாதிக்காத கால ஓட்டத்தின்  அத்தாட்சிகள் தினமும் சுவர்க்கோழி கத்தும் வரை  டிவி முன் குத்த வைத்து  'சனி, ஞாயிறு ரெண்டு நாள் தான் கிடைக்குது தூங்க - பாவம்' என்று தூங்கிய நேரம் போக  வாரயிறுதி வாரயிறுதியாய்த் தீரும்  வாழ்க்கை ( ஜூலை 2005)

குடைத்தாத்தாவின் கொடை

குடைத்தாத்தா என்று நாங்கள் (வீட்டின் சிறுவர்பட்டாளம்) பெயர் சூட்டிய மனிதர் ஒருநாள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கோவை, மதுரை என்று ஊர் சுற்றும் 'பஞ்சு ஏஜென்ட்' வேலை என்றார். நான் அவரைப் பார்க்கும்போது அவருக்கு வயது அறுபது இருந்திருக்கும் - எனக்குப் பதிமூன்று. திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிந்து கொண்டேன். பழைய குடும்ப நண்பர் - மாதமொருமுறை கோவை வந்தால் எங்கள் வீட்டில் தங்கிக் கொள்வார். கையில் எப்போதும் ஒரு குடையும் நைந்துபோகும் நிலையிலிருக்கும் பையும் வைத்திருப்பார். பைக்குள் பல காகிதப் பொதிகள் வைத்திருப்பார். ஒரு பொதிக்குள் (பொதிக்குள் பொதியில்) நோட்டும் சில்லறையுமாக காசு வைத்திருப்பார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவ்வப்போது காசோ பொருளோ வீட்டிலே கொடுத்துவிடுவார். இவர் இசைப்பித்து பிடித்தவர். பல கலைஞர்களை எனக்கு அறிமுகம் செய்தவர். இசைக்கலைஞர்கள் பற்றிய சுவையான நிகழ்ச்சிகளைக் கூறூவார். நேரிலோ, ஒலிநாடாவிலோ கேட்கும் இசையில் இருந்திருந்தவாறு மூழ்கி விடுவார். அடிக்கடி கண்ணீர் விட்டு அழுவார் - உடல் சிறிதாகக் குலுங்கி அடங்கும். பேச்சுக்கொடுத்தால் அடுத்தநொடியில் இயல்பாகி விடுவா

உயிர்க் காதலன் இப்படிச் செய்தானே!

ஜாவளி என்கிற கருநாடக இசை / பாடல் வடிவம் பற்றிச் சொல்லுகையில், இவை சிற்றின்பத்தைத் தூண்டும் வகையில் அமைந்த, வெளிப்படையான வழக்குமொழியில் அமைந்த பாடல்கள் என்று பகுக்கிறார்கள். ஏதோ தீண்டத்தகாததாகவும், பெரிய தாக்கத்தை உண்டுபண்ணாததாகவும் கருதப்படும், மற்றும் கச்சேரிகளில் ‘துக்கடா’ வாகப் பாடப்படும் இவைகளை நான் நேசிக்கிறேன். மனிதர்கள் புனையும் எதுவும் மனித உறவுகளின் இழையைக் கொண்டிருப்பதில் வியப்பில்லைதானே?  தாய்-சேய், தந்தை-தமையன், ஆண்டான் - அடிமை, காதலன் - காதலி இப்படி ஏதோ ஒரு மனிதர் உறவைச் சொல்லியே அடியார்கள் பலரும் இறையைப் பாடியிருக்கிறார்கள். இயல்பான மனித உணர்வாக எல்லோரும் தத்தம் சொந்த அனுபவங்களுடன் பொருத்திப் பார்துக்கொள்ள ஏதுவானதும், அதனாலேயே மனதிற்கு நெருக்கமானதாக இருப்பதுமான  காதல், ஊடல், பிரிவாற்றாமை என்பவற்றை பெருமைபடுத்துவது (glorify)ஆகாதது என்று இருந்துவருகிறது. எப்போதும் உணரும், வாழ்ந்து திளைக்கும் இவ்வுணர்ச்சிகளை (இதைத் தனியாகப் பெரிதுபடுத்திப்பாட என்ன இருக்கிறது என்று) எதற்கு மிகையுணர்வின்பாற்படுத்துவது (to romanticize) என்று விட்டுவிட்டார்கள் போலும். எந்தக் கலையிலும் பெரும் பா

செப்பிடு வித்தை

    பாடித் தன்னையே எப்படிக் கரைத்துக் கொள்வது? ஒரு கடினமான தாளக் கட்டு உடைய இந்தச் சிறிய பாடல் - அம்மையிடம் தன்னைக் காக்கும்படி இறைஞ்சுகிறது. சிந்தை கூராகி, குரலுடன் இயைந்து உடலே தாளக் கட்டில் இயங்குகிறது - கையிலே தட்டிக் காட்டுவது பக்கவாத்தியக்காரர்களுக்கு மட்டுமே - இப்படியான இசைவு கற்பனைகளுக்குத் தளம் அமைக்கிறது. சுரங்கள் தத்தம் இடங்களிலே, தாள இலயம் தன் பாட்டிலே. இலக்கணங்கள் ஒரு பெரும்பொருட்டில்லை; அவை சிறிய கருவிகள் மட்டுமே. இவற்றை முடுக்கிவிட்டால் பின்னணியில் கலையாது இயங்கும். இப்போது பாட்டினுள்ளே இறங்கியாகிவிட்டது. ஒவ்வொரு சொல்லும் கொண்டாட்டத்திற்கு உரியதாகிறது. அவற்றை ஆசைதீரத் தடவிப் பார்த்து, உச்சி முகர்ந்த்து, உருகி, சிரித்து, களித்து அவற்றுடன் ஒன்ற முடிகிறது. திரிலோக மாதா, என்னைக் காப்பாய் - “அம்...பா” என்று சிணுங்கிக் குழைந்து... குழந்தை கையிலே கிடைத்த கிலுகிலுப்பையாய் “நின்னு நம்மியுண்டகா” பற்பல முறை ஆட்டிப்பார்த்துக் கொள்கிறது. ஒவ்வொறு ஆட்டலும் புதிதாய் மகிழ்விக்கிறது. கண்கள் விரிந்து ”கனமுக...”, கைகளை முறுக்கி, “அதி கனமுக...” என்ற இறுக்கமான மௌனம் களைய “கோரி கோரி ஏமி...” எ

காதலைப் பாடுதும்

மனதை வெகு நாட்களாக ஆட்கொண்டிருக்கும் ஒரு பாடலைப் பற்றிப் பேசவேண்டும். பேசுவதில் / எழுதுவதில் மிகுந்த மொழியாற்றல் இருப்பவருக்கும் ஒரு பாடல் உருவாக்கும் நெகிழ்ச்சியையும், இணக்கத்தையும் சரியாக விளக்க முடியாது. உணர்ச்சிமிகுதியில் எளிமையான வரிகளையே எழுதமுடியாத நானெல்லாம் எம்மாத்திரம்? சுவாதித் திருநாள் இராம வர்மா திருவிதாங்கூரை 1800 களின் முற்பகுதியில் ஆண்டவர். கலைகளை, கலைஞர்களை மிகுதியும் ஆதரித்தவர், கலைஞர். பதுமநாபன் மேல் தீராக்காதல் கொண்டு பல பாடல்களை இயற்றியிருக்கிறார். நாடகம் (அல்லது) நாட்டியம் (நாட்டியம் என்பது ஆடலும் பாடலும் சேர்த்துக் கதை சொல்லும் ஒரு கலையே) என்ற கலைவடிவத்தின் துணைக்கே இசை பயன்பட்டது. கலையளவில் உயரமான இடத்தில் இருந்த நாட்டியமும் அதை ஆடுபவர்களும் (பெண்களேயாதலால்) நம் சமூகத்தில் இருந்த பெண்பாலினருக்கான பல கட்டுப்பாடுகளின் மத்தியில் கொச்சையான மதிப்பையே பெற்றார்கள். இப்போது கருநாடக இசையின் மேதைகள் என்றறியப்படும் பலரும் தாளம், இலயம் சார்ந்த பாடங்களை நாட்டியக் கலைஞர்களிடமிருந்தே கற்றிருக்கிறார்கள் என்பது பதிவான வரலாறு. அந்த நாட்டியக்காரர்கள் பக்தியையும் கதையாகச் சொன

இளையராஜாவின் மரி மரி நின்னே, டி எம் கிருஷ்ணா

இளையராஜா தியாகராஜரின் ‘மரி மரி நின்னே' பாடலை இராகம் மாற்றியமைத்ததைப் பற்றி டி எம் கிருஷ்ணா தமது புத்தகத்தில் எழுதியிருப்பதைக் குறித்து மேலும் அண்மைய செவ்வி ஒன்றில் கருத்து தெரிவித்தார். அதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இந்தப் பதிவு.   செவிவழியாகப் பலபத்தாண்டுகள் கற்பிக்கப்பட்டு வரும் இசைப்பாடல் (அ) Composition (இது இராகம்-தாளம்-பிரதி என்ற முக்கோணத்தில் அடங்குவது) ஒரு குறிப்பிட்ட அழகியல் சட்டகத்தில் பொருந்தி வருவதாகவும், இம்மாதிரியான இராக மாற்றங்கள் அந்த அழகியலைக் குலைத்து விடுவதால் அவற்றைத் தன்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும் கிருஷ்ணா சொன்னார்.  எந்த அழகியல் அம்சங்களை கிருஷ்ணா குறிப்பிடுகிறார் என்று யோசித்துப்பார்த்ததில் கீழ்க்கண்டவை தோன்றின. அவையாவன - எனக்குத் தோன்றிய வரிசையில்: ‘ஸ்வராக்‌ஷரப்' பிரயோகங்கள் தியாகராஜர் தொடங்கிய பழைய வாக்கேயக்காரர்களின் படைப்புகளில் காணக்கிடைக்கின்றன. அதாவது பாடலின் சொற்களில் ஸ்வரங்கள் தோன்றும்போது அவற்றை அந்த ஸ்வரங்களாகவே பாடுதல் / இசைத்தல். இவற்றை மறுவாக்கம் செய்யும்போது இந்தவிடங்களைத் தவறவிட வாய்ப்பு இரு