முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

பெங்களூர் டயரி - 2

கடைசியில் நானும் ஒரு அகலப்பாட்டை (Broadband) இணைப்புக்கு மனுப்போட்டுவிட்டேன். ட்ராயின் (TRAI) விதிமுறைப்படி குறைந்தபட்சமாக 256 Kbps திறன் உள்ள இணைப்பே அகலப்பாட்டை இணைப்பு. ஆனால் இந்தச் சேவை வழங்கிகள் 48 Kbps திறனையே அகலப்பாட்டை என்று கூவி விற்கிறார்கள். இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கு டயல்-அப் (Dial-up) முறையில் முக்கி முக்கி 10 Kbpsஇற்கும் குறைவான திறனை அனுபவித்தவர்களுக்கு 48 கொடுத்தாலே ராஜபாட்டை. பாரத் சஞ்சார் நிகமின் (BSNL) இணைப்புத்திறன் பற்றிப் பரவலாக நல்ல கருத்தே நிலவுகிறது. இப்போது மாதம் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு 256 Kbps என்ற திட்டம் வந்தபின்னால் தினமும் மூவாயிரம் மனுக்கள் அகலப்பாட்டை இணைப்புக்காய் இவர்கள் பெறுகிறார்கள். மொபைல் (Mobile) தொலைபேசி நிறுவனங்களில் இருந்து அகலாஇணைப்புச் (Fixed line) சேவை வழங்கிகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. இம்மாதிரி தரை (Land Line) இணைப்புக்களை மொபைல் இணைப்புக்கள் என்றோ எண்ணிக்கையில் மிஞ்சி விட்டன. அதுவும் அடிப்படையான தொலைபேசும் சேவைகள் மட்டுமல்லாமல், குறுஞ்செய்திகள், படக்குறுஞ்செய்திகள் (SMS, MMS) என்று பற்பல சேவைகள்களை மொபைல் இணைப்பு வழங்கு

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள