முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறே புஸ்தகங்ஙள், ச்சில ரிக்காடுகள், குறச்சு கள்ளு - ஒரு ஸாயான்னம்!

பக்கத்துவீட்டு மலையாளி நண்பர் நூல் வெறியர் . பிடித்த நூலாசிரியரின் படைப்புகளையெல்லாம் தேடித்தேடி வாங்கிப் படித்துவிடுவார் . அதிலும் தாட்டியான உறைப் பதிப்புகளை (Hard cover edition) வாங்கிச்சேர்ப்பவர் . அப்படியான சேமிப்புகளில் அண்மைக்காலமாக பழைய வைனைல் ரெக்கார்டுகளை வாங்கிச்சேர்க்க ஆரம்பித்திருக்கிறார் .   ஒரு மாலை நேரம் அவர் வீட்டுக்கு பியருடன் புத்தகங்களை வேடிக்கை பார்க்கவென நானே கேட்டு அழைப்பு வாங்கிக்கொண்டேன் . போனதற்கு உடனே ஒரு ஐ . பி . சிங்கரின் புத்தகம் இனாமாகக் கிட்டியது ( அதே புத்தகத்தின் ஹார்டு கவர் பதிப்பை அவர் வாங்கிவிட்டார் ). லேசில் , இல்லை , எப்படியானாலும் புத்தகங்களை இரவல் தருவதில்லை என்றும் , பழைய புத்தகங்களை வாங்கிய பழைய புத்தகக் கடையிலேயே திரும்ப விற்றுவிடுவது என்றும் கறாராக இருப்பவரிடமிருந்து வந்த புத்தகம் அரியதுதான் . அன்றைய புதிய அறிமுகமாக The Limerick என்ற புத்தகத்தை கல்கத்தாவில் பழைய புத்தகக் கடையில் வாங்கியதையும் , அங்கிருந்து வரும் வழியில் சிலர் அதைப்பற்றி விசாரித்ததையும் சொன்

101 கனவுகள் - 5. தஞ்சாவூர்த் திட்டம்

“அஞ்சாறு வாட்டி தஞ்சாவூர் போகணும்னு நெனச்சுக் கிளம்பினது நடக்கவேயில்லை” என்றேன். முத்து சொன்னான், “அப்படியின்னா  ஞானிகள், இல்லை  அப்பழுக்கற்றவர்கள்  யாரோ தஞ்சாவூர்ல இருக்காங்கன்னு நெனைக்கறேன். கருணாகரன் கூட அங்கதான்…..” “அப்ப கெட்டவங்க யாரும் அங்க போக முடியாதுங்கறியா?” என்று இடைமறித்தேன். “ஆமாம்” எப்படியாவது திருச்சி பக்கம் போகிற மாதிரிப் போய், பஸ் பிடித்து தஞ்சாவூர் போய் இவனுக்குக்காட்ட வேண்டும் என்று உறுதி கொண்டேன்.

உடையாத் தளைகள்

ஆஸ்பத் திரியில் அம்மா கிடப்பு சுருண்டொரு சாணித் துணியது போலே தேய்த்துக் குளித்தால் அழுக்கது போகும் ஒழுக்கம் விழுப்பம் கற்க கசடற மரபுக் கவிதை அரபுக் குதிரை ரோகம் பயங்கரம் தேகம் இதுசுமை

ஆசுகவி

Portrait (by poet's daughter) of the poet  உள்ளிருப்பை அப்படியே எழுத்தாக்கக் கருவி, கலப்பை, கோடாரி இல்லாததால் சுற்றித்திரிந்து,  சுற்றி, திரிந்து, மேதாவித்தனம் சேர்ந்து கை தப்புத்தப்பாய் தட்டச்சுப்பிச்சென்று ஏதாவது...  கடைந்த மோரில் வெண்ணெய்யைக் 'கட்டிப்'பிடிப்பது போல யோசித்துச் சேர்த்தது  டம்பளர் பாலில் கருப்புப் பூச்சி யா ய் க் கட்டை விரலும் சுட்டு விரலும் கொண்டு பிடிக்கப் பிடிக்க நழுவும்,  எழுதுவதற்காய்க் கிளம்பினால் இப்போதும் ஓடியாயிற்று - கண்ணை மூடிமூடித் திறந்தாலும் கிடைப்பதில்லை - நழுவியது நழுவியது தான் கொஞ்ச நேரம் அசிரத்தையாக இருப்பது போல பாவனை செய் து ம், எப்போதாவது பிடிக்கப் போனால் மறுபடி ஓட்டம் உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது உள்ளபடியே மாயக்கண்ணாடி மட்டுந்தான் மற்றபடி, இதையும் சேர்த்து எல்லாம் பாசாங்கு! (Inspired by Kerouac's  Essentials of Spontaneous Prose)