முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வூட்ல சொல்லிகினு வந்தியா?

"You really never learn to swear until you learn to drive" என்று யாரோ சொல்லி, எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. இன்று நான் மனத்தில் சொல்லிக் கொண்ட, தினமும் காலையில் பைக் ஓட்டி வரும்போது சொல்லிக்கொள்கிற "ங்கோத்தா.." வகையறாக்கள் எண்ணிக்கையில் அடங்கா.

Traffic விதிகளை மதிப்பதை ஒரு காதலுடன் செய்ய முயற்சிக்கிறேன் - இதை என் தேசப்பற்றின் சிறு வெளியீடாகக் கூட நான் பார்ப்பதுண்டு. கொஞ்சம் civic sense, தேவையான அளவு traffic sense, துளி பொறுமை இருந்தால் நம்ம ஊர் சிங்கப்பூரோ, ம்யுநிக்கோ ஆகாவிட்டாலும், காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யார் "வாயிலும் விழ" வேண்டாம், உபயோகிக்கச் சரியான கெட்ட வார்த்தைகள் தேட வேண்டாம், முழு நாளையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்...

யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள், பொலிஸ் இல்லாத நாற்சந்தியின் நெரிசலில், இண்டு இடுக்கிலெல்லாம் தத்தம் வாகனங்களைச் செருகிக்கொண்டு, அவர்களும் போகாமல், மற்றவர்களையும் நகர விடாமல் deadlock உண்டுபண்ணுபவர்கள், lane எக்கச்சக்கமாய் தாண்டுபவர்கள் (நம்மூர்ல பெரிய ராஜபாட்டையெல்லாம் கெடையாது, இருந்தாலும் எல்லாரும் போகிற ரோட்ல, செங்குத்தா, திரும்பிப் போறது கொஞம் ஓவர் தானே?) ஆகியோரை மசியவைக்க ஒரு யோசனை:

ஓரு நல்ல மைதானமாகப் பார்த்து, வண்டிகளை ஓரங்கட்டச் செய்வது; உள்ளே ஒரு கூடத்தில் சேர்கள் போட்டு, காபி, தேனீர் உபசாரம் செய்து, போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான movie, அல்லது presentation ஒரு அரைமணி நேரத்திற்கு - இதில், வீட்டில் இருந்து 30 நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பி, பொறுமையுடன் வண்டி ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்துதல் என்று செய்யலாம். அவசரப்பட்டவர் licence-ல் ஒரு முத்திரை குத்தி, இந்தமாதிரி 5 முறைக்கு மேல் ஆனால் licence ஐ revoke செய்யலாம். மேலும் அவர் சமயத்திற்கு அலுவலகத்திற்கோ, கள்ளக்கடத்தல் partnerஐ சந்திப்பதற்கோ போகவிடாமல் (இந்த இடத்தில் கட்டணமுறைக் கழிப்பிடம் இருப்பதால், இதற்கு அவர் அவசரப்பட்டால் போகவிடலாம்) தாமதப்படுத்தலாமே? இந்தத் தாமதத்தினால் அவருக்கு விளையும் துன்பங்களே தண்டனையாகவும் இருக்காலாம் - "சம்திங்" எல்லாம் வாங்க வேண்டாம், அல்லது இதுதான் சாக்கு என்று அவரை வாய்க்கு வந்தபடி ஏச வேண்டாம் (படிச்சவன் தானே? அறிவில்லையா?...) ஒன்றும் சொல்லாமல் just தாமதப்படுத்துவதால், ஆசாமி சிறிது ஆசுவாசத்துடன் கிளம்பிச் செல்வார் என்று எதிர்பார்க்கலாம். பொலிஸுக்கு ஜீப், பைக் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து சமூகச் சேவை செய்யும் நிறுவனங்கள் இதற்கான உதவிகளைச் செய்யலாம்.

இதுமட்டுமல்லாமல், வேறொரு முக்கியமான விடயமும் இருக்கு. விபத்துக்கள் நிகழ்ந்தால் செய்ய வேண்டியது: நமக்கென்ன என்று ஒதுங்கிப் போவது, வேடிக்கை பார்ப்பது, பயந்து ஒன்றும் செய்யாமல் போவது (நான் மூன்றாவது ரகம்) என்றிருப்பதைவிட, பொலிஸும், NGOs உம் சேர்ந்து விபத்து நேர்ந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள சாதாரணர்கள் எப்படி உதவலாம் என்பதில் கொஞ்சம் வண்டி ஓட்டும் volunteersகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதில் முதலுதவி, சட்டம் என்று எல்லா அம்சங்களும் இருக்க வேண்டும். mock விபத்துக்கள் நிகழ்த்த வேண்டும். இதில் நாமெல்லாம் பங்கெடுத்துத் தெரிந்துகொள்ள வேண்டும். (பயந்தாங்கொள்ளியான நானே இதற்கு உடன்படுகிறேன்)

இப்படியெல்லாம் இன்று காலை வண்டியோட்டி அலுவலகம் வந்து சேர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த அவஸ்தை எல்லாம் இல்லமல் சுகமாகப் பேருந்திலோ, பொடிநடையாகவோ கூடப் போகலாம். அதெல்லாம் அப்புறம். இப்பொ சோலியப் பாக்கோணும்...

கருத்துகள்

ஈழநாதன்(Eelanathan) இவ்வாறு கூறியுள்ளார்…
பெரிதாக ஒன்றும் வேண்டாம் ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு சந்தியில் வைத்து போக்குவரத்தை ஒளிப்பதிவு செய்து அத்தனை பேரையும் ஓரங்கட்டி அவர்களையே பார்க்கும் படி செய்தால் போதும் பயத்தில் அல்லது வெட்கத்தில் திருந்திவிட வாய்ப்புண்டு
Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
// யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள் //

அவர்கள் மட்டுமா... முன்னால் வாகனத்தை ஒரு அங்குலம் அளவுகூட நகர்த்த இயலாது என்று தெரிந்தும், பாம் பாம் என்று ஹாரன் அடிப்பவர்களைக் கண்டால், எனக்கு கேப்டன் விஜயகாந்த் போல கோபம் வருகிறது. அப்படியே இறங்கிச்சென்று அவர்கள் மூஞ்சியில் என் பீச்சாங்கையினை வைக்கவேண்டும் என்பது நீண்ட நாள் அவா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...