முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவிதைமாதிரிஎதோஒன்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழித்தலும் நீட்டலும் (வேறு)

மரியான் மூர் (Marianne Moore) தமது poetry என்ற கவிதையை ஐம்பது ஆண்டுகளூடாக எழுபது முறை திருத்தினார் என்றறிகிறோம். எட்டாண்டுகளாக மனதில் இருக்கும் இது, (கவிதையென்றே வீரத்துடன் பறைசாற்றுகிறேன்) இந்த வடிவில், இப்போதைக்கு நிறைவாய் அமைந்திருக்கிறது. படம் தந்து உதவியது நண்பன்  மகேஷ் உடையாத் தளைகள் ஆஸ்பத் திரியில் அம்மா கிடப்பு சுருண்டொரு சாணித் துணியது போலே ஒன்றாத்   தளைகள் அறுவது   மில்லை தேய்த்துக் குளித்தால் அழுக்கது போகும் ஒழுக்கம் விழுப்பம் கற்க கசடற மரபுக் கவிதை அரபுக் குதிரை ரோகம் பயங்கரம் தேகம் இதுசுமை

புனைவு

Photo by Magesh Babu கடைந்த மோரில் வெண்ணெய்யைக்  'கட்டிப்'-       பிடிப்பது போல  யோசித்துச் சேர்த்தது  டம்பளர் பாலில்  கருப்புப் பூச்சியாய்ப்   பிடிக்கப் பிடிக்க  நழுவும்,  கண்ணை  மூடிமூடித் திறந்தாலும்  கிடைப்பதில்லை -  கொஞ்ச நேரம்  அசிரத்தை-பாவனை        செய்தும்,  பிடிக்கப் போனால்  மறுபடி ஓட்டம் உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது  உள்ளபடியே  மாயக்கண்ணாடி மட்டுந்தான் மற்றபடி, இதையும் சேர்த்து  எல்லாம் பாசாங்கு!

ஒரு கெட்டிக்காரக் 'கவிதை'

Photo by Andreea Popa on Unsplash முதலில், பின்னணி: இதையும் , இதையும் படித்து / பார்த்துவிடுங்கள்                            அவையத்து முந்தி யிருப்பச் செயல்                             வையத்து முந்தியிருப்பச் செயல்                                     முந்தி யிருப்பச் செயல்                                           இருப்பச் செயல்                                                   செயல் (ஐயன் பொறுப்பாராக)

காற்றே வா

"...  காற்றே வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே." குளித்து, நிலைக்கண்ணாடி முன்னால் அரைமணிநேரம் நின்று படியப்படிய வாரிக்கொண்ட தலை பார்த்தாயா, இரண்டே நிமிடங்களில் ‘சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியன்’ போல ஆக்கிவிடாய் என் தலைமயிரை என் செல்ல மகளுக்கும் நான் தராத உரிமையை நீ என்னிடத்திலே எடுத்துக்கொண்டாய் நீ இங்கிதம் தெரியாதவன் அந்த முண்டாசுத் தலையனிடம் காட்டியிருக்கலாமே உன் வேலையை? பேய்க்காற்றுடை நாட்டில் படியாத் தலைமயிரானாய் போகக்  கடவாய்!  (வேணுமின்னா வெட்டி ஜேப்பில வச்சுக்கோ)

மொழி வன்முறை

Clicked by author கார்மேகம் நோக்கி   குளிர்த் தூறல்   காத்திருக்கும்   அப்பாவிகளின் மேலே   அமிலமழையாய் விழுகிறது அசிரத்தையினால் அமையும்   மோசமான மொழி  - கொடுங்கோலனின் குடையினுங்   கொடுமையானது   அது   இருமுறை சபிக்கப்பட்டது -   அதை   ஈபவர் சபிக்கப்பட்டவர்   கொள்பவரு மப்படியே   " The quality of mercy is not strained; It droppeth as the gentle rain from heaven Upon the place beneath. It is twice blest; It blesseth him that gives and him that takes: 'T is mightiest in the mightiest; it becomes The throned monarch better than his crown: ..."   ( The Merchant of Venice, Act IV, Scene I - William Shakespeare) - ஷேக்ஸ்பியர் வரிகளைத் 'திருத்தி' எழுதியது

எதோ ஒரு 'தா'

Clicked by Magesh Babu ஹலோ? ஹலோ, யாருங்க? கவிதா இருக்காங்களா? இல்லீங்க, அனிதா தா இருக்றா... ... ... ச்சே...ரி குடுங்க, அனிதாகிட்டயே பேசறேன்...

வாரயிறுதியாய்த் தீரும் வாழ்க்கை

திங்கள் முதல் வெள்ளிவரை  நாள்தொடங்கி முன்னிரவு வரை  அலுவலக அர்ப்பணிப்பு காபி டம்ப்ளரைக் கழுவாததில் இருந்து,  அம்மாவை 'செக்கப்'புக்கு கூட்டிப்போகாதது வரைக்கும்  இது தான் சாக்கு வேறெதற்கும் நேரமின்றி  வேறெதிலும் நாட்டமுமின்றி  உழலும் பொழுதுகள்  எல்லாம் இருந்தமைந்த பின்பு  வாழ்க்கையை விரும்பிய படி வாழவென்று அலை ஓய்ந்தபின்  கடலிலே குளிக்கும் ஆசை மறந்துவிட்ட நண்பனின்  திருமண அழைப்புக்கு  மன்னிப்பு மடலேனும் எழுதலாமே  என்று தோன்றும் போது  வருகிறது அவன் மகளின் முதல் பிறந்தநாளுக்கான அழைப்பு  இதுவும்,  தாடியில் தென்படும் நரைகளுமே  ஒன்றும் சாதிக்காத கால ஓட்டத்தின்  அத்தாட்சிகள் தினமும் சுவர்க்கோழி கத்தும் வரை  டிவி முன் குத்த வைத்து  'சனி, ஞாயிறு ரெண்டு நாள் தான் கிடைக்குது தூங்க - பாவம்' என்று தூங்கிய நேரம் போக  வாரயிறுதி வாரயிறுதியாய்த் தீரும்  வாழ்க்கை ( ஜூலை 2005)

உடையாத் தளைகள்

ஆஸ்பத் திரியில் அம்மா கிடப்பு சுருண்டொரு சாணித் துணியது போலே தேய்த்துக் குளித்தால் அழுக்கது போகும் ஒழுக்கம் விழுப்பம் கற்க கசடற மரபுக் கவிதை அரபுக் குதிரை ரோகம் பயங்கரம் தேகம் இதுசுமை

ஆசுகவி

Portrait (by poet's daughter) of the poet  உள்ளிருப்பை அப்படியே எழுத்தாக்கக் கருவி, கலப்பை, கோடாரி இல்லாததால் சுற்றித்திரிந்து,  சுற்றி, திரிந்து, மேதாவித்தனம் சேர்ந்து கை தப்புத்தப்பாய் தட்டச்சுப்பிச்சென்று ஏதாவது...  கடைந்த மோரில் வெண்ணெய்யைக் 'கட்டிப்'பிடிப்பது போல யோசித்துச் சேர்த்தது  டம்பளர் பாலில் கருப்புப் பூச்சி யா ய் க் கட்டை விரலும் சுட்டு விரலும் கொண்டு பிடிக்கப் பிடிக்க நழுவும்,  எழுதுவதற்காய்க் கிளம்பினால் இப்போதும் ஓடியாயிற்று - கண்ணை மூடிமூடித் திறந்தாலும் கிடைப்பதில்லை - நழுவியது நழுவியது தான் கொஞ்ச நேரம் அசிரத்தையாக இருப்பது போல பாவனை செய் து ம், எப்போதாவது பிடிக்கப் போனால் மறுபடி ஓட்டம் உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது உள்ளபடியே மாயக்கண்ணாடி மட்டுந்தான் மற்றபடி, இதையும் சேர்த்து எல்லாம் பாசாங்கு! (Inspired by Kerouac's  Essentials of Spontaneous Prose)