முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனது நிறையச் சாப்பாடு

பிரபஞ்சனின் சிறுகதையொன்றில் ஒருவர் கடையில் இட்லி வாங்கிச்சாப்பிடுகிறார். பரிமாறுபவர் கேட்பார்,  “முதலில் சட்னியா, இல்லை சாம்பாரா? எதை ஊற்றட்டும்?”   பாத்திரத்தினூடாகப் பிரபஞ்சனே (வரிகள் நினைவிலிருந்து)   சொல்லுவார்:  “ இந்தக் கேள்வியே பிடித்திருந்தது. சட்னிக்கும் சாம்பாருக்கும் வெவ்வேறு சுவைகள். இரண்டையும் ஒரே நேரத்தில் ஊற்றிக் கலந்து சாப்பிடுவது எனக்குப்பிடிக்காது”  உணவைப் பரிமாறுவது சிலருக்கே கைவந்த கலை.  நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத போது அது நிகழும்:   ஊர் பெயர் தெரியாத ஏதோ ஒரு கடையில், கடனுக்காகத் தலையைக் காட்டின திருமணச் சாப்பாட்டுப்பந்தியில், இப்படி ஏதோ ஓரிடத்தில் சுவையானதுடன் மனதுக்கு நிறைவான சாப்பாடு சில பரிமாறுபவர்களின் தயவால் அமையும். 'உஸ்தாத் ஓட்டல்' திரைப்படத்தில் திலகன் பேசும்  ஒருவரி  வசனம் நினைவுக்கு வருகிறது: “வயிற்றை நிரப்ப யாராலும் முடியும், ஆனால் சாப்பிடுபவர்களின் மனது நிறைய வேண்டும். அதுதான் சரியான கைப்பக்குவம்” (படம்: நண்பன் மகேஷ்பாபு எடுத்தது)  உறங்கும்போதும், உண்ணும் போதும் மனிதர்கள் குழந்தைகள் போலாகிவிடுகிறார்கள். கால்களைப்  பின்னிக்கொண்டும், கையை ம

தமிழ்சார் தொல்லை

  ஒருவரின் பெயர் ‘ சார் ’ என்ற விகுதியுடன் இருக்கமுடியுமா ? ஆனால் “ என் கணக்கு வாத்தியார் கணேசன் சார் ” என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை . இது பெரிதும் எரிச்சலூட்டக்கூடியது . ஒருவேளை சாருக்கு பதில் ஐயா என்றிருந்தால் இவ்வளவு எரிச்சல் இருக்காதோ ?   இந்த கணேசன் சார் , கீதாமேடம் போன்றவை ஒரு வகையென்றால் இதை அடுத்த தளத்திற்கு உயர்த்துவது ‘ டியூசன் சார் ’, ‘ சும்மிங் சார் ’ போன்றவை .  “ என் பையனோட வயலின் சார் இருக்காரே , அவர் பெரிய மேதை !” -- இதில் “ சார் ” விளி பெயரையல்லாமல் கற்பிக்கும் தொழிலைக்குறிக்கிறது .  இதில் கலாச்சாரம் ( உடை ) சாரந்த மொழி உளவியல் இருப்பதாக நினைக்கிறேன் . அதாவது , வேட்டியைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு தலையில் உருமாலுடன் இருப்பவர் குஸ்தி ‘ வாத்தியார் ’. நீளக்காற்சட்டையுடன் ‘ இன் ’ பண்ணிக்கொண்டு கான்வாஸ் காலணி அணிந்திருப்பவர் கராத்தே “ சாரே ” யாவார் . நகரங்களில் இந்த வழக்கம் எல்லாத்ததட்டு மக்களிடயையேயும்   வெகுவாகப் பரவிக்கிடக்கிறது .  பேச்சுத்தமிழ் தனதாக்கிக்கொண்ட பல வேற்றுமொழிச் சொற்களுண்டு .  கல்லூரியி

"கௌரியம்ம புறத்தாயி"

பல்கலையில் முதுகலைப் பட்டப்படிப்பு ‘படித்துக்கொண்டிருந்த’ போது தங்குவிடுதியில் இருந்த மலையாளி மாணவனிடம் என் மலையாள அறிவைப் பீற்றிக்கொள்ளும் விதமாக ஊர் விசேடங்களை எனக்குத் தெரிந்த மலையாளத்தில் கேட்டேன். அவன் சொன்னான்:  “கௌரியம்மயெப் புறத்தாக்கி”.  எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கேரள அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சர், மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் (அப்போது) மேலாக மக்கள் பணியாற்றிய கே. ஆர். கௌரியம்மயைப் பற்றித்தான் சொல்கிறான் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. 1994ல் அவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினின்றும் விலக்கப்பட்டார். எனக்கு அரசியல் சாய்வோ, முதிர்ச்சியோ இல்லாமலிருந்த காலம். என்னையொத்த பலருக்கும் அந்த வயதில் தீவீர அரசியல் நிலைப்பாடுகள் தோன்றவாரம்பித்திருக்கலாம். எனக்கு அவ்வாறில்லாமல் இருந்ததற்கு என்னுடைய மத்தியவர்க்கக் குடும்பச்சூழல் காரணமாயிருக்கலாம். அன்றைக்கு எப்படியோ சிரித்து சமாளித்துக்கொண்டாலும், ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரைக்  கட்சியிலிருந்து நீக்கியதை பெரிய செய்தியாக என் வயதொத்தவன் சொன்னது எனக்கு